சர்தை சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1209 1.... இராஜா, எனது சகோதரர் சற்று முன்பு என்னிடம், இந்த கைக்குட்டைகள் புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனுக்கு ஜெபிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இன்னும் சிறிது நேரத்தில் நாம் அவைகளுக்காக ஜெபிப் போம். (சகோ.நெவில், ''இங்கு இரண்டு விண்ணப்பங்கள் உள்ளன'' என்று கூறுகிறார் - ஆசி). இரண்டு ஜெப விண்ணப்பங்களா? சரி, நல்லது, ஐயா. அவைகளுக்காகவும் ஜெபிக்கும்படி நான் அவைகளை இங்கே வைப்பேன். 2பின்பு, நாளைக்கு உள்ள ஆராதனையைப் பற்றி ஒருவர் இங்கு சுற்றிவந்து ஒரு குறிப்பைக் கொடுத்தார். வெளியிலிருந்து இங்கு எங்கள் மத்தியில் விஜயம் செய்துள்ளவர்கள். நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு எங்கள் மத்தியில் இங்கு வரவேண்டும். அதைக் குறித்து நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நாளை பிற்பகலில் ஒலிநாடாக்களை இயக்கி, அதிலுள்ள செய்தியைக் கேட்கும் கூட்டங்கள் உண்டாயிருக்கும். நீங்கள் ஏற்கனவே கேட்டிராத ஒரு செய்தி அக்கூட்டத்தில் போட்டு நாம் கேட்கலாம். அதன்பிறகு ஜெபக்கூட்டம் நமக்கு இருக்கும். நாளை மதியம் உங்களுக்கு வேறு முக்கியமான அலுவல் ஏதுமில்லையெனில், வந்து விடுங்கள். நமக்கு நிச்சயமாக நாளை மதியம் நல்ல அருமையான வேளை உண்டாயிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாளை இரவும், ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவுக் கூட்டங்கள் எனக்கு இருப்பதால், மிகவும் அலுவல்கள் உள்ள நாட்களாக அவை எனக்கு இருக்கும். அக்கூட்டங்களில் அந்த சபைக்காலங் களின் வரலாறுகளை எடுத்தியம்ப வேண்டியதுள்ளது. 3ஞாயிறு காலையில் கர்த்தருக்குச் சித்தமானால், நமக்கு மகத்தான வேளை இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். சனிக்கிழமை இரவிலிருந்தே விடுமுறை போலத்தான். ஞாயிறு காலையில் நான் நித்திரை செய்யும் கன்னியர், உயிர்த்தெழுதல், மற்றும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் ஆகியவற்றைப் பற்றியும், இந்த செய்தியோடு தொடர்புடைய அதை இணைக்கிற சில துண்டுத் துணுக்குகளையும் பற்றி நாம் எடுத்துக் கொள்வோம். நாளை காலை ஆராதனை ஒன்பது மணிக்கு தொடங்கும். அப்படித்தானே பாஸ்டர் அவர்களே? காலை ஒன்பது மணிக்கு. “நித்திரை செய்யும் கன்னியருக்கும், புத்தியுள்ள கன்னியருக்கும் என்ன நேரிடுகின்றது? அவர்கள் எப்பொழுது திரும்பி வருகிறார்கள்? அல்லது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் எங்கே தோன்றுவார்கள்?'' என்று இவ்வாறான அநேக காரியங்களை ஒன்றாக இணைத்து இந்த செய்தியோடு அது சரியாக பொருந்துவதை நாம் ஞாயிறு காலைக் கூட்டத்தில் கண்டு கொள்வோம். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவில் லவோதிக் கேயா சபைக்காலத்திற்குரிய அந்த மகத்தான தூதனைப் பற்றியும், அதற்குரிய செய்தியைப் பற்றியும், கர்த்தருக்கு சித்தமானால் எடுத்துக்கொள்வோம். 4நாளை மதிய ஆராதனையில் ஒலிநாடாவில் பதியப்பட்டிருக்கும் செய்தி ஒன்றினைக் கேட்போம். சகோ.ஜீன் அவர்கள் இப் பொழுது தான் கூறினார், நாளை மதியம் இரண்டு மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று, ஒலிநாடாவிலிருந்து செய்தியினைக் கேட்க நாளை மதியம் இங்கு வர விரும்புவோருக்கும் பீடத்தைச் சுற்றி நின்று ஜெபித்துக் கொள்ள விரும்புவோருக்கும், கர்த்தரைத் தேடிட வேண்டி, ஜெபிக்க விரும்பி இங்கே வர விரும்பும் எவருக்கும் எந்த வேளையிலும், இந்த ஆலயமானது அருமை யாகவும், உற்சாகத்தோடும் ஆயத்தமாக திறந்தே வைக்கப்பட் டிருக்கிறது. சபை கதவுகள் திறந்தும், உங்களுக்காக காத்துக் கொண்டும் இருக்கிறது. நாளை மதிய கூட்டத்திற்கு உங்களை ஆவ லுடன் எதிர்பார்க்கிறோம். 5எந்தவேளையில் வந்து ஜெபிக்க நீங்கள் விரும்பி வந்தாலும் சபையின் கதவுகள் உங்களுக்கு எப்பொழுதும் ஆயத்தமாக திறந்தேயிருக்கும். சிலவேளையில் ஒருவேளை கதவுகள் சாத்தப் பட்டு இருந்தால், இவ்வாலயத்தின் காபந்து பொறுப்பில் இருக்கும் என் சகோதரன் வீடு இத்தெருவின் நேர் எதிர் மூலையில் 811 கதவிலக்கம் உள்ளதில் வசிக்கிறார், அவரிடமோ அல்லது அவரது மனைவியிடமோ சாவி இருக்கும். கதவுகளை அவர்கள் இழுத்துச் சாத்தியிருந்தால், காலையில் ஒருவேளை திறந்து வைப் பார்கள். இரவில் உள்ள ஆராதனைக்குப் பிறகு, கதவுகள் சாத்தப் படுகின்றன. ஏனெனில், பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடி, ஜன்னல்களை உடைத்துவிடாமலிருக்கவே அந்த ஏற்பாடு. இந்நாட் களில் சிறு பிள்ளைகள் எவ்வாறு இருக்கின்றனர் என்பது உங்களுக் குத் தெரியும். எனவே அந்தக் காரணத்திற்காகத் தான் நாங்கள் ஆராதனை முடிந்தபின் கதவுகளை சாத்துகிறோம். எந்த வேளையா யிருந்தாலும் சரி, சபையின் கதவுகளை சாத்திவிடுவதை நாங்கள் வெறுக்கிறோம். வேறொரு கட்டிடம் நாம் கட்டியபிறகு, அதில் நாம் வேறு ஏற்பாடு செய்து, எப்பொழுதும் கவனித்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்து, அதினால் ஜனங்கள் எந்த நேரத்திலும் இங்கே வந்து ஜெபித்து, பிணியிலிருந்து விடுதலையடையவும் பரிசுத்த ஆவியைப் பெறவும் தேவனைத் தேடலாம். 6உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்கள், இங்கே வந்து இரா முழுவதும் தங்க விரும்பினாலும் தங்கி ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியைப் பெறும் வரையிலும் தங்கி யிருங்கள். சற்று முன்பு, ''தேவன் என்னில் எங்ஙணும், முழுவதிலும் இருக்கிறார்'' என்ற பாடலை பாடியது யார்? நான் கூட எடுத்துக் கொள்ளப்படுதலே வந்துவிட்டதோ என்றெண்ணி, சுற்றுமுற்றும் பார்த்து, யாவரும் இங்கிருக்கிறார்களோ என்று தேடினேன். அது உண்மையிலேயே அற்புதமானதாயிருந்தது. நான் அதை மெச்சு கிறேன். அதை எவ்வளவு நேரம் கேட்டாலும் நாம் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆம், ஐயா! அதைக் கேட்பதற்காகவே நான் சரியான வேளையில் உள்ளே வந்துவிட்டேன். இந்தக் கூட்டங்களிலெல்லாம் நான் நல்ல பாடல்களை கேட்கத் தவறிவிட்டேன். ஏனெனில் நான் எண்ணினேன், ஒருவேளை அந்த... நான் மிகவும் அதிகமான அலுவலில் இருந்து விட்டேன். அது எப்படிப்பட்டதென்று நீங்கள் அறிவீர்கள். மக்கள் விமானத் திலும், இரயில் வண்டியிலும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். அவர்களையெல்லாம் போய் சந்தித்து, அவர்களுக்காக போய் ஜெபிக்க வேண்டியுள்ளது. இந்தக் காரியம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அதுவுமல் லாமல், படிக்கவும் வேண்டியது உள்ளது. அது சரியான பிரச்சினை யைத் தோற்றுவிக்கிறது. ஆனால் நாங்கள் எப்பொழுதும், மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜனங்களுக்குரிய பொது வேலைக்காரனாக இந்நாளில் நாங்கள் இருப்பதால், மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்ததைச் செய்ய ஆர்வமாயிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் செய்வதை விட இன்னும் கூடுதலாகவே செய்ய விரும்புகிறோம், ஆனால் இயலவில்லை. 7இன்று காலையில் ஒரு அருமையான ஊழியக்காரர் அதிக உழைப்பினால் தளர்ச்சியடைந்து, நிலைகுலைந்து போன நிலையில், மயக்க நிலையில் என்னிடம் கொண்டு வரப்பட்டார். அவர் எழும்பியபொழுது, அவரது சிறிய மகள் அறையில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். அவரது பார்வையில் அவரது மகள் அப்படியே சுழலுவது போல் தெரிந்திருக்கிறது. அவள் சிவப்பு நிற பைஜாமா அணிந்திருந்தாளாம். அவர் மூர்ச்சையடையும் முன்னர், கடைசியாக அவர் பார்வைக்கு ஒரு சிவப்பு நிற புள்ளி மட்டுமே சுழன்று சுழன்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். அப்படியே அவர் மூர்ச்சையடைந்த நிலையில் ஆகிவிட்டார். உடனே அவர்கள் அவரை விரைவாகக் கொண்டு வந்து விட்டார்கள். அதிகமான உழைப்பு, பாருங்கள். நீங்கள் இன்னும் சரீரத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதையும், முழு பாரமும் நம்மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய ஊழியக்காரரை எங்கும் வைத்திருக்கிறார். முடிந்த அளவுக்கு சிறப்பானதை நாம் செய் கிறோம். ஆனால் அந்த தயவுள்ள ஊழியக்காரர் இக்கடைசிக் காலத்தில் தன்னுடைய கர்த்தருக்காக தன்னால் முடிந்ததையெல் லாம் செய்ய முயற்சிக்கிறார். நானும் நிச்சயமாக... கர்த்தர் அவரை விடுவித்து, அவரை திரும்ப அவரது சகஜ நிலைக்குள் கொண்டு வந்து சரிப்படுத்தினார். அவர் களிகூர்ந்தவராய் தன் வழியே போனார். 8ஓ, இன்று ஒரு மகத்தான காரியம் சம்பவித்தது. அந்த விஷயங்களைப் பற்றி பேசத் துவங்க நான் விரும்பவில்லை. ஆனால்... நான் என் மனைவியிடம் கூறினேன்: “ஒரு மனிதன் வருவார், அவர் குட்டையாகவும் கனத்த சரீரமுள்ளவராகவும், கருமையான முடியும், கண்களும் உடையவராயிருப்பார். அவர் வந்து அந்த எழுதப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையை வாசித்து விட்டு புறப்படுவார். அப்பொழுது அவரை நீ கூப்பிடு, ஏனெனில் கர்த்தர் அவருக்குக் கொடுக்கத்தக்க ஒரு செய்தியை வைத்திருக்கிறார்'' என்றேன். நான் எழுந்து, வேதத்தை திறந்து வைத்து, ”நான் இந்தக் காரியங்களை இங்கே வைக்கப் போகிறேன், அது தான் அம்மனிதன் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிற காரியங்களாகும்'' என்றேன். 9எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போலந்தில் பிறந்து வளர்ந்த ஒரு போலந்து தேசத்தவர், என்னுடைய ஒரு கூட்டத்திற்கு மேடைக்கு வந்தார். அவர்கள் கூறினார்கள்... பரிசுத்த ஆவி யானவர் அவரைப் பார்த்து, “நீ குழப்பமடைந்திருக்கிறாய்'' என்று கூறினார். நான் அதைக் கூறினேன் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவர்தான் அதைக் கூறினார். உரைக்கப் பட்ட அந்த வார்த்தை எவ்வளவு காலம் அவருக்குள் இருந்து கொண்டேயிருந்தது. கடைசியில் கடந்த இரவில் பரிசுத்த ஆவியானவர் அவரை கான்சாஸ் நகரத்திலிருந்து இந்த கட்டிடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். அதன்பிறகு, அவர் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றி கேட்டபோது, உண்மையாகவே அவர் குழப்ப மடைந்துவிட்டார். அவர் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பிச் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவரிடம், ”இப்பொழுது எழுந்திருந்து அங்கே செல்' என்று கூறியிருக்கிறார். யாரோ ஒருவர் அவரோடு கூட வர விரும்பியிருக்கிறார். ஆனால் அவரோ, அவரை கூட்டிக்கொண்டு வரவிரும்பவில்லை. ஏனெனில் அந்த போலந்துக்காரர் வரப்போகிறதாக எனக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத் தில், அவர் ஒருவர் மாத்திரமே வரப்போகிறதாகக் காண்பிக்கப் பட்டது. அவ்விதமாகவே அவர் வந்துவிட்டார். பாருங்கள்? அவர் கனவானைப் போலக் காணப்பட்டார். அவ்வாசகத்தை வாசித்துவிட்டு, அவர் திரும்பிப் போக முற்பட்டார். அப்பொழுது என் மனைவி என்னை அழைத்தாள். நான் வாசலண்டை சென்று, “அவர் தான் அந்த மனிதர், அவர் இங்கே வரட்டும்'' என்றேன். “நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அவர் அதைக் கண்டு கொண்டபோது, ”இப்பொழுது நான் அதைக் காண்கிறேன்'' என்றார். நான் அவரிடம், “நீர் இதை அறிந்து கொள்ளத்தக்கதாக, இதை நான் விவரித்துக் காண்பிக்க விரும்புகிறேன். நீர் வரப் போவதாக கர்த்தர் முன்கூட்டியே என்னிடம் அறிவித்து விட்டார்'' என்று கூறினேன். நான் மேலும், ”இதோ இந்த வேத வாக்கியம் உள்ளது. போகும் முன் இதை இங்கேயே படித்துவிடும்'' என்று கூறினேன். 10இப்பொழுது அவர் இங்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி ஆயத்தமாக இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் இங்கே இப்பொழுது அமர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். சகோதரனே, நீர் இங்கேதான் இருக்கிறீரா? போலந்து தேசத்து சகோதரர் அவர். ஆம் பின்னால் அந்த மூலையில் அவர் அமர்ந்திருக்கிறார். உங்களை யாவரும் பார்க்கும்படி தயவு செய்து உங்கள் கரத்தை உயர்த்திக் காண்பியுங்கள். நல்லது. பரிசுத்த ஆவியின் கிரியையைப் பாருங்கள். அது எல்லா நேரங்களிலுமே சம்பவிக்கிறது. தரிசனங்கள் மேடையில் தான் வரும் என்று எண்ணுகிறார்கள். ஓ, அங்கே மட்டும் அது ஏற்படுகிறதில்லை. சகோதரன் லியோ அவர்களே, அதைப் பற்றி என்ன? அது எங்கும் ஏற்படுகிறது என்பதைப் பாருங்கள். நடந்தவற்றில் இது ஒரு சிறு பாகம்தான். ஒரு சிறிதளவு தான் இங்கே நடை பெற்றது. அங்கே அது இரவும் பகலும் நடைபெறுவதுண்டு. என் மனைவியையும், எனது அண்டை வீட்டுக்காரராகிய சகோதரன்வுட் அவர்களையும் கேட்டுப் பாருங்கள். மற்றும் சுற்றியுள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஓ, என்னே! இங்கே சிறுசிறு காரியங்கள் தான் நடைபெற்றுள்ளன. ஆனால் அங்கோ பெரிய பெரிய காரியங்கள் நடைபெற்றுள்ளன, அவற்றில் பாதி கூட வெளியில் கூறப்பட வேயில்லை. ஓ! நமது கர்த்தர் சீக்கிரமாக வரப்போகிறார். அப்பொழுது நாம் அவரோடு என்றென்றும் இருப்போம் என்பதை நான் அறிந்து கொண்டதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். சதாகாலமும் அல்ல, நித்தியமாக இருப்போம். நித்தியமாக இருப்போம். 11கர்த்தருக்குச் சித்தமானால்; அது ஞாயிற்றுக்கிழமை 18ந் தேதி என்று எண்ணுகிறேன். எனக்கு கடுமையான போராட்டம் உண் டாயிருந்தது. சாத்தான் இந்தப் பகுதியில் எங்கும் காணப்படுகிற ஃப்ளு ஜுரத்தை எனக்குக் கொடுக்க முயற்சித்துக் கொண்டே யிருந்தான். நானோ அதை அவனிடமே திருப்பிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன். அவன் மீண்டும் என்னிடமே கொடுக்கப் பார்த்தபோது, நான் அவனிடமே அதை திருப்பிவிட்டேன். எனவே சரியானதொரு போராட்டம் உண்டாயிருந்தது. எனவே நாம் அடுத்த வாரம் போராடி விடுவோம். வரும் ஞாயிற்றுக் கிழமை போக அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமையாகிய 18ம் தேதி நமக்கு பிணியாளிகளுக்காக ஜெபிக்கிற கூட்டம் உண்டா யிருக்கும். அப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். உண்மையான, மிகவும் அவசரமான பிணியாளிகளுக்கு மட்டும் நம்மால் முடிந்த வரையிலும் விரைவாக ஜெபித்துவிட முயற் சிப்போம். எந்த இராத்திரியில் வந்து போனாலும் நாம் அவர்களுக்காக அதைச் செய்கிறோம். எனவே 18ம் தேதி நமக்கு வழக்கமான தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் உண்டாயிருக்கும். உங்களுக்குப் பிரியமானவர்கள் யாருக்காவது ஜெபிக்க வேண்டு மென்றால், அவ்வேளையில் நீங்கள் அழைத்து வரலாம். 12இந்த ஜெஃபர்சன்வில் நகரத்தைச் சேர்ந்த அநேகம் மக்கள் என்னிடம், தாங்கள் காலை 5 மணிக்கே இங்கே வந்துவிடுவ தாகவும், ஆனாலும் தங்கள் மோட்டார் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துவதற்குக்கூட இடமில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் “இவர்கள் வெளியூர்களில் இருந்து விஜயம் செய்துள்ள அநேக சகோதரர்களும், ஊழியக்காரர்களு மாவர். இந்த மகத்தான செய்தியின் உபதேசத்தைத் தீவிரமாகக் கேட்டறிந்து கொள்வதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்'' என்றேன். நாம் இவற்றின் சாரமான முக்கியப் பகுதிகளை ஆராய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு, சிறிது காலத்தில், இவற்றை புத்தக வடிவில், நீங்கள் படித்துப் பார்க்கத்தக்கதாக, புத்தகமாக வெளியிடுவோம். (கடந்த இரு இரவு நேரங்களில், இங்கே சப்தத்தை மிச்சப்படுத்தும் வகையில் நான் குறைத்துக் கொண்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்) புத்தகத்தில் இன்னும் கூடுதலாக சேர்த்து வெளியிடுவோம். ஏனெனில் பெரிய உச்சகட்ட மான விஷயம் வரும்போது அதையே நான் முக்கியமாக கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அங்கே தான் கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் இக்காலத்தில் உண்டாகிறது. அது என்னவென்பதை பாருங்கள். 13இப்பொழுது வேதவாக்கியங்களை நாம் வாசிப்பதற்கு முன்னர்... நாளையதினம் நாம், நமது சனிக்கிழமை இரவு மளிகைச் சாமான்களை வாங்கும் பெரிய வாணிப நாளாக இருக்கிறது என்பதை அறிவேன். அவைகளை நாம் சனிக்கிழமை காலையிலோ அல்லது மதியத்திலோ வாங்கியாக வேண்டும். அதினால் சனிக் கிழமை இரவுக் கூட்டத்திற்கு நாம் வருவதற்கு வசதியாக இருக்கும். எனவே நாம் இன்றிரவில் சீக்கிரமாக முடித்து அனுப்பி விட முயற்சி செய்வோம். அதினால் நாளை மதியம் ஒலிநாடாவி லிருந்து செய்தி கேட்கும் ஆராதனையில் கலந்து கொள்ளவும், இரவு ஆராதனையில் கலந்து கொள்ளவும் உங்களுக்கு வசதியாயிருக்கும். நீங்கள் விரும்பினால், நாம் இப்பொழுது சற்று ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இங்கு யாருக்காவது விசேஷித்த ஜெப வேண்டுகோள் இருப்பின், அதை கைகளை உயர்த்திக் காண்பிப்பதின் மூலம் தெரியப்படுத்தலாம். தேவன் காண்கிறார், சகோதரரே. இங்கு குழுமியுள்ளவர்களில் 95 அல்லது 98 சதவிகித மக்கள் விசேஷித்த ஜெப வேண்டுகோளை தெரியப்படுத்தும் முகமாக, தங்கள் கைகளை உயர்த்திக் காட்டி யுள்ளனர். இதன் மூலம் நாம் தேவைகள் உள்ள உலகில் வாழ் கிறோமா இல்லையா என்பதை காண முடிகிறது. தேவன் அறியாமல் உங்களால் அசையவும் கூட முடியாது என்பதை நினைவில் வையுங்கள். அவர் உங்களுடைய விருப்பங்களை அறிவார். நீங்கள் எதற்காக வேண்டிக் கொள்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். நாம் தலைகளை வணங்குவோம். 14கிருபையுள்ள பரமபிதாவே, நாங்கள் உமது பரிசுத்தத்தை இன்றிரவில் அணுகுகிறோம். எங்கள் ஜெபத்திற்கு செவி கொடுப் பீர் என்று நீர் கூறின உமது வாக்குத்தத்தத்தின் மூலமாக உமது சிங்காசனத்தை நாங்கள் அணுகுகிறோம். நாங்கள் விசுவாசித்தால், நாங்கள் கேட்பவைகளை நீர் தருவீர். எங்களுடைய பிழை யாவையும் உம்மிடம் அறிக்கை செய்கிறோம். உம்முடைய எந்த வொரு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள நாங்கள் தகுதி யுள்ளவர்கள் அல்ல என்பதை உணர்ந்தேயிருக்கிறோம். நாங்கள் பாத்திரமானவர்கள் அல்ல - நாங்கள் முழுவதும் தகுதியற்றவர்கள். நாங்கள் ஏதோ தகுதியுள்ளவர்கள் என்றும், ஏதோ மகத்தான காரியத்தை செய்துவிட்டோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உம்முடைய சமூகத்தில் வரவில்லை. ஓ, பிதாவே, நாங்கள் கல்வாரி சிலுவையை நோக்கிப் பார்க்கையில், அது அனைத்து மேன்மையான சிந்தைகளையும் எங்களை விட்டு அகற்றிப் போட்டு விடு கிறது. அப்பொழுது, நாங்கள் கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர வேறு எதையும் அறியமாட் டோம். பின்பு, மூன்றாம் நாளில் வேதவாக்கியத்தின்படி, அவர் மரித்தோரிலிருந்து எங்களை நீதிமான்களாக்க எழும்பி, நாற்பது நாட்கள் கழித்து எங்கள் மத்தியில் வாசம் பண்ணும்படி, அவர் திரும்பி பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்றும், அவர் மீண்டும் கடைசி காலத்தில் காணும்படியாக ஆகாயத்தில் தோன்று வார் என்றும் நாங்கள் காண்கிறோம். இப்பொழுது கடைசி காலமானது மிகவும் தீவிரமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் மிகவும் சந்தோஷமான மக்களாக இருக்கி றோம். ஏனெனில் நீர் எங்களுக்கு இந்த மகத்தான சிலாக்கியத்தை தந்திருக்கிறீர். 15பிதாவே, இருதயங்களை தாழ்த்தினவர்களாக, அமைதியாக செவி கொடுக்கிறவர்களாக உள்ள இந்த செவிகொடுக்கிற சபையாருக்காக உமக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு பிரசங்கிக்க உம்முடைய பிரசங்க பீடத்தண்டை நான் இன்றிரவிலும், ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு நேரத்திலும் வருகையில், என்னுடைய உதடுகளை பரிசுத்தமாக்கும். கர்த்தாவே, நான் ஒரு போதும் பிழையானவைகளை பேச விட்டுவிடாதேயும். சிங்கங்களோடு தானியேல் இருக்கையில் அவைகளின் வாயை அடைத்த நீர், இன்றைக்கும் வாய்களை அடைக்க வல்லவராயிருக்கிறீர். உம்முடைய சித்தத்திற்கு இசைவானதாக இல்லாத எதையாவது நான் எப்பொழுதாவது சொல்லப் போவதாக இருக்குமானால், நான் அதைப் பேசாதபடி, முன்கூட்டியே என் வாயை அடைத் தருளும் கர்த்தாவே. எனது சிந்தைகள் தவிர்க்கப்படட்டும். என்னை சரியான பாதையில் நிலை நிறுத்தியருளும், கர்த்தாவே. அப்பொழுது நான் உமது சத்தியத்தைத் தவிர வேறெதையும் பேசாதிருப்பேன். அந்த மகத்தான நாளிலே இந்த மக்கள் பரம தேசத்தில் காத்திருப்பார்கள்... எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத் தின்படி, நான் அவர்களுக்கு பிரசங்கித்ததைப் பற்றிக் கொண்ட தினால் அங்கே காத்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன். நீர் உம்முடைய நட்சத்திரங்களில் யாரையாவது, அல்லது உமது தூதர்களில் எவரையாவது, அல்லது உம்முடைய ஊழியக்காரர்கள் யாரையாவது அல்லது உமது பணி செய்கிறவர்கள் யாரையாவது எடுக்க வருகிறீரென்றால், முதலாவதாக, இங்கு பிரசங்கிக்கப்பட்டு வரும் இந்த செய்திகளினால் அவர்கள் செய்தியாகிய தூற்றுக் கூடையினால் நன்கு விளக்கப்பட வேண்டும். நீர் உம்முடைய ஊழியக்காரர்களை அதற்காக பொறுப்பாளிகள் ஆக்குவீர். இப்பொழுதும் பிதாவே, மனிதனல்ல, பரிசுத்த ஆவியான வரே பேசிடச் செய்தருளும் என்று நான் வேண்டுகிறேன். அவருக்கு செவி கொடுக்கத்தக்கதாக, எங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்தருளும். நானும் செவி கொடுத்துக் கொண் டிருப்பேன். பிதாவே வியாதிப்பட்டவர்களையும், துன்பப்படுபவர் களையும் குணமாக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். எங்கணும் தேவையுள்ளவர்களாக இருக்கும் அனைத்து மக்களோடும், உமது கிருபையும் இரக்கமும் இருப்பதாக. கைகளை உயர்த்திக் காண் பித்ததன் மூலம் தங்களது ஜெப வேண்டுகோள்களைத் தெரியப் படுத்திய ஒவ்வொருவரது வேண்டுகோள்களுக்கும் ஏற்றவாறு அருளிச் செய்யும். தேசத்தின் தொலைதூரங்களில் இருக்கிற ஏனைய அநேக துன்புறும் மக்களின் ஜெப வேண்டுதல்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஜெபத்திற்கு பதிலளித்து, பிதாவே அவர்களைக் குணமாக்கும். எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையிலிருந்து, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இப்பொழுது எங்களோடு பேசியருளும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 16இன்றிரவில், இப்பொழுது, சபைக் கட்டிடத்தில் சற்று வெப்ப மாக இருக்கிறது. லவோதிக்கேயா சபைக்கால செய்தி வந்து கொண்டிருக்கிறது. இன்றிரவில் ஐந்தாம் சபைக் காலமாகிய அந்த மகத்தான சபைக்காலத்தை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். முதலாம் சபைக்காலமாகிய எபேசு சபைக் காலத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இங்கு எழுதி வைத்துள்ள குறிப்புக் களிலிருந்து, ஆரம்பத்தில் சொல்லப் பட்டவைகளை நான் மீண்டும் உங்களுக்கு வாசிக்கப் போகிறேன், அதினால் நீங்கள் உங்கள் தாள்களில் குறித்து வைத்துள்ளவைகளோடு சரிபார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். 17முதலாம் சபைக்காலம் எபேசு சபைக்காலமாகும். அது கி.பி.55 முதல் 170 முடிய நீடித்தது. பவுல் தான் அச்சபைக் காலத்திற்குரிய நட்சத்திரமாக விளங்கினான். அது முதலாம் சபைக் காலமாகும். அவர்களைப் பற்றிய தேவனுடைய குறை என்ன வெனில், 'அன்பற்ற கிரியைகள்''. அவர்களுக்குக் கொடுக்கப் படும் பலனானது, ''ஜீவ விருட்சம்'' ஆகும். இரண்டாவது சபைக்காலம் கி.பி.170 முதல் 312 முடிய நீடித்தது. ஐரேனியஸ் தான் அச்சபைக் காலத்தின் தூதனாவார். அச்சபை உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றது. அது உபத்திரவப்படுத்தப்பட்ட சபையாக இருந்தது. அதற்கு அளிக் கப்படும் பலன், 'ஜீவ கிரீடம்'' ஆகும். மூன்றாம் சபைக்காலமானது பெர்கமு ஆகும். பரிசுத்த மார்ட்டின் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். அந்த சபைக் காலம் கி.பி.312 முதல் கி.பி.606 முடிய நீடித்தது. அச்சபைக் காலத்தைப் பற்றி தேவன் காணும் குறை என்னவெனில், “கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்க ஆளுகைக்கு அஸ்திவாரமிடுதல், அரசும் சபையும் ஒன்றாக இணைதல்''. ஜெயங் கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படும் பலனானது, ”மறைவான மன்னாவும், வெண்குறிக்கல்லும்'' ஆகும். நான்காவது சபைக்காலமானது தியத்தீராவாகும். கொலம்பா தான் அச்சபைக் காலத்திற்குரிய தூதனாவார். இச்சபைக் காலம் கி.பி.606 முதல் 1520 முடிய நீடித்தது. இந்த சபைக்காலத்தில்தான் போப்பு மார்க்க வஞ்சனை ஏற்பட்டது. இருண்ட காலங்கள் என்று அது அழைக்கப்படுகிறது. (கடந்த இரவில் இருண்ட காலங் களைப் பற்றிப் படித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்). அக்காலத்தில் அளிக்கப்படும் பலனானது, ''ஜாதிகளை ஆளுகை செய்வது, விடிவெள்ளி நட்சத்திரம்,'' தூதனுக்கு கொடுக்கப்படுகிறது. 18இன்றிரவில் நாம் ஐந்தாம் சபைக்காலத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். இச்சபைக்காலம், சர்தை சபைக்காலம் என அழைக் கப்படுகிறது. இந்த சபைக்காலத்திற்குரிய தூதன் மார்ட்டின் லூத்தர் ஆவார். இவர் இன்றைக்கு வேத பண்டிதர்களுக்கும், வேத போதகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் கூட நன்கு அறிமுக மானவர் ஆவார். இந்த சபைக்காலமானது கி.பி. 1520ம் ஆண்டு தொடங்கி கி.பி.1750-ல் முடிவுற்றது. இந்த காலத்தை நாம் “சீர்திருத்தக்காலம்' என அழைக்கிறோம். இச்சபைக் காலத்தைப் பற்றி தேவனுடைய குறை என்னவெனில், ”தங்களுடைய சொந்த நாமத்தைக் கொண்டிருத்தல்'', இச்சபைக் காலத்தில் சிறுபான்மை யினரான அந்த மீதியானவர்களுக்கு அளிக்கப்படும் பலன் என்னவெனில், “வெண் வஸ்திரம் தரித்து அவருக்கு முன்பாக நடத்தலும், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர் காணப்படுதலுமேயாகும்''. நாம் இதை படிக்க எடுத்துக் கொள்கையில் கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. இந்த சபைக்காலத்திற்கு, வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரத்தின் முதலாம் வசனத்திலிருந்து துவங்குவோம். சர்தை சபைக்குரிய செய்தி, சீர்திருத்தத்தின் காலம், விசுவாசிக்கிற ஒரு சிறு மீதியான கூட்டம், ஏறக்குறைய அற்றுப் போகும் நிலை. 19இதைப்பற்றி நான் மீண்டும் சொல்வதற்குக் காரணம், புதிதாக வந்திருப்பவர்கள் இவ்விஷயங்களில் பின்தங்கியிருக்காமல் இருப்பதற்காகத்தான். இது சற்று மெருகில்லாததாகக் காணப் படுகிறது. சிலவேளையில் நாம் நம்முடைய செய்திகளை மதிய வேளையில் வந்து, அவற்றை வரைந்து வைத்து விடுவோம். ஒரு வேளை ஞாயிற்றுக்கிழமையில் அதைச் செய்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய சபைகளைக் குறிப்பாகக் காட்டும்படியான படத்தை வரைவோம். எபேசு சபையில் ஆரம்பிப்பதாக அது இருக்கும். முதலாவதாக உள்ள இந்த சபை, பெந்தெகொஸ்தேயின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. அதாவது, பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட ஒரு சபையாகும் அது. ஆனால் அவர்கள் பின் காலத்தில், 'நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்'' என்று அழைக்கப்படும் ஸ்தாபன ஆவியை உள்ளே அனுமதித்து, சபையை ஸ்தாபனமாக ஆக்கிட முயற்சித்தனர். பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? நல்லது. அது முதலில் 'நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்'' என்பதாக இருந்தது. அது இன்னமும் அப்பொழுது போதகமாக மாறவில்லை. ''கிரியைகள்'', 'நிக்கொலாய்'' என்ற வார்த்தையை நாம் பிளந்து அது எத்தகையது என்பதைப்பற்றி பார்த்தோம். அது நமக்கு ஒரு அன்னிய பெயரானபடியினால், நான் கிரேக்க மொழி அகராதியை எடுத்துப் பார்த்து அதன் அர்த்தம் என்னவென்பதை உடைத்துப் பார்த்தேன். ''நிகோ'' என்றால், “ஜெயிப்பது'' அல்லது 'மேற் கொள்ளுவது'' என்று அர்த்தம். அல்லது ஒன்றை ”கீழே வீழ்த்துதல்'' என்று பொருள். “நிக்கொலாய்டேன்'' (இவ்வாறு தான் ஆங்கில வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் வேதத்தில் ”நிக்கொலாய் மதஸ்தினர்'' என்று போடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). 'லெய்டேன்'' என்றால் சபையைக் குறிக்கும். “லெய்டி'' சபையைக் குறிக்கும். ”நிக்கொலாய்டேன்'' அது சபையை அதற்குரிய ஸ்தானத்திலிருந்து கீழே விழத் தள்ளும் ஒரு கிரியையாகும். சபையின் மேல் ஒரு தலைமையான நபரை ஏற்படுத்தி, அல்லது பிஷப் போன்றவரை ஏற்படுத்தி அவர் மேல் அனைத்து ஆசீர்வாதங்களையும் சாற்றி, வேதத்தை அவர் ஒருவர் மாத்திரமே படிக்கலாம், அவர் ஒருவர் மாத்திரமே வேத வாக் கியத்திற்கு வியாக்கியானம் கொடுக்க பாத்திரர் என்று ஏற்படுத்தியது இக்கிரியை. 20இரண்டாவது சபைக்காலத்தில் சபையானது இன்னமும் ஒடுக்கப்பட்டது என்று பார்த்தோம். முதலாமவது இன்னமும் பெந்தெகொஸ்தேயாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இரண்டாவதோ ஸ்தாபனமாக ஆகியது. மூன்றாவது சபைக்காலமாகிய பெர்கமுவில், பெந்தெ கொஸ்தே அனுபவமானது ஏறத்தாழ அற்றுப் போகத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் ஸ்தாபனத்தைப் பற்றிய போதகமானது, முதல் சபைக்காலத்தில் “கிரியைகள்'' என்ற கட்டத்திலிருந்து அது நெடுக வளர்ந்துகொண்டு போய், முடிவாக அது மூன்றாம் சபைக் காலத்தில் ”போதகமாக'' ஆகியது. அவர்கள் அங்கே விவாகம் செய்து கொள்ளுகிற கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த குழு வானது பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற குழுவை மேற்கொண்டது. அதைப் பற்றி நான் கூறுகிறதானது முற்றிலும் உண்மை சகோதரரே. பிழையற்ற பரிசுத்தமான வரலாற்று நூல்களை அடிப் படையாகக் கொண்டது எனது கூற்று. “நிசாயா ஆலோசனை சங்கம்', ஃபாக்ஸ் என்பவர் எழுதிய ”இரத்த சாட்சிகளின் புத்தகம்'' ஆகிய பண்டைக்காலத்து வரலாற்று நூல்களை அடிப் படையாகக் கொண்டவை நான் ஆதாரமாக எடுத்துக் கொண்டவை களாகும். மிகவும் பழமை வாய்ந்த சில பிரதிகளும் என்னிடம் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும்... இதை, நான், ஒரு பெந்தெ கொஸ்தேகாரன் என்ற ரீதியில் கூறவில்லை. நான் “பெந்தெ கொஸ்தே'' என்று கூறுகையில், நாம் வாழ்கிற இக்காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைப் பற்றி கூறவில்லை. (மற்ற சபைகளைப்போலவே பெந்தெகொஸ்தேயும் குற்றமுள்ள தாக இருக்கிறதே). நான் உண்மையான பெந்தெகொஸ்தேயை, உண்மையான தேவ ஆவியைப் பெற்றிருக்கிற, மூல உபதேசத் தையுடைய, மூல ஆசிர்வாதங்களை பெற்றிருக்கிற மூல நாமங்களை யுடைய, ஆதியில் ஆரம்பித்தபோது எவ்விதமாக இருந்ததோ அதேபோல் இப்பொழுதும் இருக்கிற ஒன்றைப்பற்றித்தான் குறிப் பிடுகிறேன். அதைப்பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 21நாம் இப்பொழுது இந்த சபைக்காலத்திற்கு வரும் போது, பெந்தெகொஸ்தே எதுவரைக்கிலும் வந்துள்ளது என்று காண்கி றோம். பின்னால் உள்ளவர்களால் சரியாக இந்த வரையப்பட்டதை காணமுடிகிறதா? நல்லது. நேற்றிரவில் நாம் இந்த பெரிய சபைக் காலத்தை பார்த்தோம். கான்ஸ்டன்டைன் - இவன் பெயரை இங்குள்ள இந்த வரைபடத்தில் நான் சுருக்கமாக 'கான்ஸ்' என்று குறிக்கிறேன். அவன் ஒரு அஞ்ஞான விக்கிரகாராதனைக்காரனாக இருந்தான். அவன் இந்த சபைக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்களை (அதாவது நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தைக் கைக் கொண்டிருந்தவர்களை) தான் யுத்தத்தில் ஜெயிக்குமாறு வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அப்படி இவர்கள் ஜெபித் தால், அதில் தான் வென்றால், தான் ஒரு கிறிஸ்தவனாக மாறி விடுவதாகவும் கூறினான். அவன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், ஒரு சொப்பனம் கண்டான். அதில் அவனுக்கு முன்பாக வெள்ளை சிலுவை ஒன்று நிறுத்தப்பட்டதாகவும், “இதைக் கொண்டு நீ ஜெயிப்பாய்'' என்று அதில் கூறப்பட்டதாகவும் அவன் கண்டானாம். அவன் உறக்கத்திலிருந்து விழித்தெழும்பி, தன் இராணுவத்தினரையும் எழுப்பி, அவர்களுடைய கேடயங்களில் வெண்மை நிற சிலுவையை வரைந்திட்டான். கத்தோலிக்க சமயம் தோன்றுவதற்குக் காரணமாக இது தான் அமைந்தது. அது நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Columbus) என்று அழைக்கப் பட்டது. 22வரலாற்றில் எந்த இடத்திலும், கான்ஸ்ட ன்டைன் மனந் திரும்பி இரட்சிக்கப்பட்டான் என்பதற்கான சான்று எதையும் நீங்கள் கண்டெடுக்க முடியாது. அவன் நேர்மையற்ற ஒரு அரசியல் வாதி என்பதைத் தவிர வேறு எவ்விதத்திலும் அழைக்கப்படத் தக்கவனல்ல. அவனுடைய மனதில், தன்னுடைய இராஜ்யத்தை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை பலப்படுத்த வேண்டுமென்று எண்ணத்தையுடையவனாக இருந்தான். எனவே, அஞ்ஞானியான அவன் விக்கிரகங்களை தொழுது கொண்டு வந்தவனாக இருந்தபடியால், அப்பொழுது அவன் அக்காலத்தில் இருந்து வந்த சடங்காச்சார கிறிஸ்தவர்களாகிய நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தைப் பார்த்தான். அது ஏறத்தாழ ஜீவனற்ற நிலைக்கு அப்போது வந்திருந்தது. எனவே அவனும், நாம் நேற்றிரவில் பார்த்த அதே உத்தியைக் கையாண்டான். பிலேயாமின் போதகமானது போதிக்கப்படும் என்பதை இயேசுவானவர், அது நடப்பதற்கு 304 ஆண்டுகளுக்கு முன் பாகவே முன்னுரைத்தார். பிலேயாம் இஸ்ரவேல் புத்திரரை எவ்வாறு வஞ்சித்து, அவர்கள் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்கும்படியும் செய்தானோ, அதைப் போலவே இங்கும் நடந்தது. “விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட வைகளைப் புசித்தல்' என்பது உண்மையாகவே அவைகளைத் தொழுது கொள்ளுவதாகும் என்பதை நாமறிவோம். அவர்கள் அதற்குள் போய், விக்கிரகங் களுக்கு முன்பாக பணிந்து கொண்டு, கிறிஸ்தவ சபைக்குள் அவ்விக்கிரகங்களைக் கொண்டு வந்து, அங்கே பிலேயாம் இஸ்ரவேலரை வேசித்தனம் பண்ணவும், விக்கிரகத் திற்கு படைக்கப்பட்ட அந்த பெரிய விருந்துக்கு அவர்கள் போகும்படி செய்தது போலவே, இவர்களும் செய்தார்கள். 23கான்ஸ்டன்டைன் இதே உத்தியைக் கையாண்டு இதே காரியத்தைச் செய்து, ஒரு சபையை உருவாக்கினான். நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவன் சபைக்கு ஏராளமானவைகளைக் கொடுத்தான். அவனிடம் இருந்த பெரிய பெரிய கட்டிடங்களை யெல்லாம் அவன் ஆலயங்களாக மாற்றி, சபைக்கு கொடுத்தான். அதன்பிறகு அவன் சலவைக்கற்களால் ஆன ஒரு பெரிய பலி பீடத்தைச் செய்வித்து, அதை பொன்னினாலும், முத்துக்களினாலும் அலங்கரித்தான். அதற்கு மேலே உயரத்தில், அவன் ஒரு சிங்காசனம் போன்றதொன்றை வைத்து, அதின் மேல் உட்கார ஒரு புருஷனை நியமித்து, அவன் தலைமையாக்கி, “பிஷப்'' என்று அழைத்திட்டான். இந்த சிங்காசனத்தின் மேல் முதல் அத்தியட் சகராக மூன்றாம் போனிஃபேஸ் என்பவனை அரியணையில் ஏற்றினார்கள். அவன் அவ்விதமான ஆடையலங்காரத்துடன் நடந்து திரிந்தான். அவனுக்கு அவர்கள் பெரிய விலையுயர்ந்த அங்கிகளை செய்வித்து, அவனைக் கடவுள் போல் அலங்கரித்து, அவனை அச்சிங்காசனத்தில் அமரப்பண்ணி, அவனை ”வைகார்'' என்றழைத்தனர். அவனை ''வைகாரியஸ் ஃபிலிஐ டிஐ“ (Vicarious Filii Dei) என்று அழைத்தார்கள். அதன் அர்த்தம் ”தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்'' என்பதாம். 24ஞானமுள்ளவனெவனோ அதை எழுதிக் கணக்குப் பார்க்கக் கடவன்; “வைகாரியஸ் ஃபிலிஐ டிஐ'' நீங்கள் ஒரு கோட்டை வரைந்து, அதனதற்குரிய எண்களை வரிசையாக எழுதி அதைக் கூட்டிப் பார்த்தால், தேவன் கூறிய மிருகத்தின் இலக்கம் சரியாக வருகிறது. அறுநூற்று அறுபத்தியாறு அதன் இலக்கம். பாருங்கள், வைகாரியஸ் பிலிஐ... நான் ரோமாபுரிக்குச் சென்ற போது வரடிகன் நகரத்திற்கு (Vatican) சென்றிருக்கிறேன். அங்கே போப்பின் தலையில் வைக்கப்படும் முப்பரிமாண கிரீடத்தை நான் பார்த்தேன். அந்த மூன்றும், பரலோகம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் ஆகிய மூன்றின் மேலும் போப்புக்கு ஆளுகை அதிகார வரம்பு உள்ளது என்பதைக் காட்டுகிறதாம். பாருங்கள்? அக்கிரீடத்தையும், போப்பு உடுத்தும் அங்கியையும் அங்கே பார்த்தேன். நான் வாடிகனில் இருந்தபோது, அங்கே ஒரு வியாழக் கிழமையன்று, மதியம் மூன்று மணிக்கு கடைசியாக இருந்த போப்பை நான் சந்திப்பதாக இருந்தது. பேரன் வோன் ப்ளாம் பெர்க் என்பவர் என்னிடம் வந்து, ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் போப்பைச் சந்திக்கச் செல்லும்போது, அவரண்டை வந்ததும் நீங்கள் உங்கள் வலது முழங்காலில் முழங்கால்படியிட்டு, தெண்டனிட்டு, அவரது விரலிலுள்ள மோதிரத்தை முத்தமிட வேண்டும்'' என்று கூறினார். 'அது முடியாத காரியம், அதை மறந்து விடுங்கள்'' என்றேன் நான். ''அந்த மனிதருக்கு எதிராக கருத்து ஒன்றும் எனக்கில்லை. அவர் மிகவும்... ஆனால் ஒரு காரியம், ஒரு மனிதனுக்கு அவனுக் குரிய பட்டத்தைச் சொல்லி நான் அழைப்பேன். அவர் ஒரு “ரெவரெண்ட்'' என்றிருந்தால் அதைக் குறிப்பிட்டு விடுவேன். அவர் ஒரு பிஷப், அல்லது மூப்பர், டாக்டர் என்றெல்லாம் இருந்தால் அவைகளைக் குறிப்பிட்டு அவர்களை அழைப்பேன். அவ்வாறு அழைத்து அவர்களை நான் வாழ்த்துவேன். ஒரு மனிதனுக்கு தொழுகை செய்ய வேண்டுமா? ஒரேயொரு மனிதனுக்கு மட்டுமே நான் என்னுடைய மரியாதையான பயபக்தியைத் தெரிவிப்பேன். நான் பணிந்து தெண்டனிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதனுக்கு மட்டுமே தொழுகை செலுத்து வேன். அவருக்கு முன்பாக மட்டுமே நான் பணிவேன். எனவே போப்பை சந்திப்பதைப் பற்றிய விஷயத்தை மறந்து விடுங்கள். அச்சந்திப்பை இரத்து செய்துவிடுங்கள். நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன்'' என்று அவரிடம் கூறினேன். 25நான் தாய்நாடு திரும்பியதும் இன்னொரு மகத்தான அமெரிக் கர் இதே காரியத்தை செய்தார் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர் தான் டெடி ரூஸ்வெல்ட். அவர் அதைச் செய்ய மறுத்து விட்டார். வரலாற்றில் அதைப்பற்றி கூறப்பட்டுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? போப்புடைய மோதிரத்தை பணிந்து முத்தமிட வேண்டுமென்பதால், போப்பை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். போப்பின் கால் கட்டைவிரலில் கூட ஒரு மோதிரம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, அத்தகையது வேண்டாம். கடந்த இரவில் நாம், பிலேயாம் செய்ததைப்போலவே, அவர்கள் சபையையும், அஞ்ஞானத்தையும் ஒன்று சேர்த்து விவாகம் செய்து, சபைக்குள்ளாக அஞ்ஞான உபதேசங்களையும், அஞ்ஞான விக்கிரகங்களையும் கொண்டு வந்தார்கள் என்று பார்த்தோம். ஜூப்பிட்டர், சூரியன், மார்ஸ், வீனஸ் ஆகிய கடவுள்களையும் அவற்றின் விக்கிரகங்களையும் அஞ்ஞான மார்க் கத்திலிருந்து இரவல் வாங்கி, அவைகளுக்கு, பவுல், பேதுரு, கன்னி மரியாள் என்று பெயர் சூட்டினார்கள். பேதுருவிடம் இயேசு, ''... திறவுகோல்களை நான் உனக்குக் கொடுக்கிறேன்'' என்று கூறியதால், பேதுரு கிறிஸ்துவுக்கு பதிலாள், போப்பு பேதுருவின் வாரிசு என ஆக்கி, அப்போஸ்தலப்பட்டம் வாரிசு பரம்பரையாய் வருகிறது என்று போதித்து, இவ்வாறாக ஒரு மனிதனை, “இதோ உங்களுடைய கிறிஸ்துவுக்கு பதிலாள்'' என்று அறிமுகப்படுத்தினர். இன்றைய வரைக்கிலும் அது கத்தோலிக்க உபதேசமாக இருக்கிறது. அவர்கள் விக்கிரகங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பின்பு அவர்கள் என்ன செய்தார்கள்? கிறிஸ்தவத் திற்குள், போலியான கிறிஸ்தவத்திற்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவத்திற்குள் அதைக் கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் சிறுபான்மை யினராக இருந்தாலும், அவர்கள் பெந்தெகொஸ்தே அனுபவத்தில் நீடித்திருந்தார்கள். 26நான் இந்த இடத்தில் பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியோரைப்பற்றி கூறவில்லை. ஆனால் உண்மையான அசலான தேவனுடைய சபையானது பெந்தெ கொஸ்தேயாக இருக்கிறது. அப்படியே இருந்தது, இருக்கிறது. அப்படியே இனியும் இருக்கும். அங்கே தான் சபையானது ஆரம்பித்தது. முதல் காலத்தில் பெந்தெகொஸ்தேயின் வல்லமை யோடு சபையானது ஆரம்பித்தது. ''அது சரிதானா, சகோதரன் பிரன்ஹாம் அவர்களே'' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் வரலாறுகளை எடுத்துப் பாருங்கள். அதில் நீங்கள் பார்க்கையில், காலத்தின் நீரோடை வழியாக நீங்கள் கவனித்து வருவீர்களாயின், உண்மையான, அசலான தேவ பிள்ளைகள் அந்த பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களை விடாமல் பற்றிக் கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசியும், பாஷைகளை வியாக்கியானித்தும், அற்புத அடையாளங்களை ஊழியத்தில் கொண்டிருந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தும் வந்தார்களா இல்லையா என்பதை பாருங்கள். ஆதி அப்போஸ்தலர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையே காலங்கள்தோறும் உண்மையான சபையானது செய்து வந்துள்ளது. எனவேதான், நான் வரலாற்றை ஆராய்கையில், அற்புத அடை யாளங்களைக் கொண்டிருந்த பவுல், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின், கொலம்பா ஆகிய இவர்கள் ஒவ்வொருவரையும் நான் தெரிந்து கொண்டேன். 27ஓ நான் கண்டு கொண்டேன். ஒலிபெருக்கியானது சரியாக வேலை செய்யவில்லையென்று தெரிகிறது. இப்பொழுது நான் பேசுவது கேட்கவில்லை போலும், எனவேதான் அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து அதைத் தெரிவிக்கிறார்கள், பில்! நல்லது, இப்பொழுது நான் பேசுவது கேட்கிறதா? இப்பொழுது எப்படியிருக்கிறது? அது நன்றாகவுள்ளதா? ஆம், இப்பொழுது யாவரும், ''சரியாக இருக்கிறது, பேசுங்கள்'' என்கிறார்கள். நல் லது, பில், உனக்கு ஒரு மதிப்பெண் குறைகிறது. நல்லது சரி. 28இந்த சபைக்காலத்தில் இந்தப் பெரிய சபையை அவன் உருவாக்கிய பொழுது, இம்மனிதனை சர்வலோகத்தின் அனைத்து சபைகளின் தலைமைக்குரு - அத்தியட்சகராக நியமித்து, ஏராளமான பணத்தை வாரியிறைத்து, இன்னும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, சபையையும், அரசாங்கத்தையும் ஒன்றாக இணைத்து, கடைசியில் சபையானது அரசாங்கத்தை கட்டுப்படுத்தி ஆளுகை செய்ய விட்டு விட்டான். கான்ஸ்டன்டைன் செய்த இதே காரியம்தான், பழைய ஏற்பாட்டு சபையிலும் செய்யப்பட்டதாக தேவன் கூறினார். அதாவது, எலியாவின் நாட்களில், இவர்கள் யேசபேல் என்னும் அப்பெண்மணி, கர்த்தருடைய ஜனங்களை கீழ்ப்படுத் தும்படி விட்டுவிட்டனர். அதே சம்பவம் இருண்ட காலத்தில் சம்பவித்தது. இங்கு பெந்தெகொஸ்தேயானது எவ்வாறுள்ளது என்பதைப் பாருங்கள். என்னே, என்னே! அது கருமையடைந்து விட்டது. கொஞ்சங்குறைய 1000 ஆண்டுகள் இந்நிலையில் இருந்தது. கி.பி. சுமார் 500 முதல் கி.பி.1500 முடிய. கி.பி.606 முதல் 1520 முடிய இக்காலம் இருந்தது. இருப்பினும் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் கணக்காகிறது. இரத்தம் சிந்தும் கொலை வெறியோடு கூடிய உபத்திரவம் நீடித்தது. வரலாற்றைப் படித்துப் பாருங்கள். 29ஒரு கத்தோலிக்கன் உங்களிடம், தாங்கள் தான் கிறிஸ்தவ சபை என்று கூறுவான். அவர்கள் மதஸ்தாபன சபையாகிய கிறிஸ்தவ சபையினர். ஆனால் உண்மையான பெந்தெகொஸ்தே யினரோ நசுக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். போப்பு களாலும், அத்தியட்சகர்களாலும் கொலை செய்யப்பட்டனர். முடிந்த அளவு இரத்தம் சிந்தப்பட்டது. அதைக் கூறுவதால், ஒரு நாள் என்னுடைய ஜீவனுக்கும் ஆபத்து நேரிடப் போகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் எங்கே போகிறேன் என்பதை அறிந்தேயுள்ளேன். பாருங்கள்? தொடர்ந்து இந்தப் பாதை இரத்தம் வழிந்தோடினதாக இருக்கிறது. இத்தேசத்தில் நடப்பதைப் பார்க்கையில், இனிக்காலம் செல்லாது. அந்த வேளையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அது சத்தியமாயிருக்கிறது. சத்தியத்தை விட்டு நீங்கள் பின்வாங்காதீர்கள். அதோடு தங்கியிருங்கள்! அந்நாட்களில் அவர்கள் செய்ததைப் போலவே, உங்களுடைய இரத்தத்தை அதோடு கலந்திடுங்கள். 30இங்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதன்பிறகு இங்கே யேசபேலின் போதகமானது உள்ளே வருகிறது. யேசபேல் ஒரு அஞ்ஞான விக்கிரகாராதனைக் காரியான பெண்மணியாவாள். கான்ஸ்டன்டைன் செய்த அதே காரியத்தைத் தான் ஆகாபும் செய்தான்; கான்ஸ்டன்டைன் இங்கே செய்ததை போலவே, ஆகாபும் செய்தான்; தனது இராஜ்ய பாரத்தை பெலப்படுத்திக் கொள்வதற்காக இந்த பெண்மணியை விவாகம் செய்து கொண்டான்; அதன்மூலம், இஸ்ரவேலுக்குள் அவன் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்தான். இதே காரியத்தைத் தான் கான்ஸ்டன்டைனும் சபைக்காலத்தில் செய்திட்டான். பெந்தெகொஸ்தே அனுபவம் ஏறத்தாழ முழுவதும் அற்றுப் போனது போல் ஆகிவிட்டது. தேவன் மார்ட்டின் லூத்தரை எழுப்பினார். எவ்வாறு ஒளி யானது ஒவ்வொரு சபைக்காலத்திலும் படிப்படியாக மங்கிக் கொண்டே வந்து இங்கே (நான்காவது சபைக்காலத்தில்) முற்றிலும் மங்கி, அதிகம் இருள் சூழ்ந்து விடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். பின்பு, மீண்டும் ஒளி இங்கே கொஞ்சம் அதிகரித்து இங்கே மீண்டும் மங்கிவிடுகிறது. கர்த்தருக்கு சித்த மானால் ஞாயிறு இரவில் அது பெரியதொரு பாடமாக இருக்கப் போவதால், இங்கே நான் சற்று குறித்திருக்கிறேன். 31நாம் எந்த சபைக்காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக் கிறாமோ, அக்காலத்தில் நாம் எடுத்துச் செல்லப்படுவதாக நான் விசுவாசிக்கிறேன். இதிலிருந்து இருண்டகாலம் - கி.பி.606 முதல் கி.பி.1520 முடிய இருண்ட காலத்தில் உள்ள சபைக்காலம் இதுதான். இருண்ட காலங்களுக்குள் சென்ற சபைக்காலத்தி லிருந்து, நாம் தொடர்ந்து லூத்தரன் சபைக்காலத்திற்குள் வருகிறோம். கடந்து சென்ற சபைக்காலத்திற்குள் இருந்த ஐரேனியஸ், மார்ட்டின், கொலம்பா ஆகியோர் மற்றும் ஏனையோர் அக்காலங் களில் மரித்து கடந்து சென்றனர். எந்தவொரு நம்பத் தகுந்த வரலாற்று நூலையும், அது எவர் எழுதியிருந்தாலும் சரி, எடுத்துப் பாருங்கள். “பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கன்'' என்று அவர் கள் கூறுகிறார்களென்றால், அவர்கள் தாங்கள் சொல்வது என்ன என்றே தெரியாது. பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்க சபையை மறு தலித்தார். அவர் ஒருபோதும் ரோமாபுரிக்குச் சென்றதேயில்லை. மேலும் அவர் உறுதியாக அவர்களுடைய போதகத்தை மறுத்தார். சரியாக அப்படித்தான் செய்தார். இங்கிலாந்தின் வடக்குப் பிரதே சத்தில் போங்கள். அல்லது அயர்லாந்துக்குச் செல்லுங்கள். அதே காரியத்தை நீங்கள் அங்கு காணலாம். பரிசுத்த பேட்ரிக் தேவனுடைய மனிதர். அவர் அயர்லாந்து தேசத்திலிருந்து எல்லா பாம்புகளையும் துரத்தி விட்டார் என்று கூறுப்படுகிறதே, அது வெறும் கட்டுக் கதை தான். வில்லியம் டெல் என்பவர் தன் மகனின் தலையில் ஆப்பிளை வைத்து சரியாகக் குறி வைத்து அந்த ஆப்பிளை சுட்டுத் தள்ளினார் என்ற கதையை எத்தனை பேர்கள் கேட்டிருக்கிறீர்கள்? அது கத்தோலிக்க சமயத்தின் ஒரு கட்டுக்கதையாகும். அதைப்பற்றி எந்தவொரு சான்றும் கிடையாது. அது சம்பவித்தாகக் கூறப் படும் அதே ஸ்தலத்தில் நேரில் போய்ப் பார்த்தேன். அங்கே “இது வெறும் கதைதான். உண்மையாக அப்படியில்லை'' என்று எழுதப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ளது அவ்விடம். அத் தேசத்தில் லுசர்ன் என்ற ஏரியின் பக்கத்தில் அது நடந்ததாக கதை சொல்லப்படுகிறதே. அதே இடத்தில் நானும் பில்லியும் நேரில் போயிருந்தோம். அவர் ஒரு மனிதனை சுட்டுவிட்டார். அவர் மகனின் தலையில் ஆப்பிளை வைத்து ஆப்பிளை சுட்டதாகக் கூறும் கதை உண்மையல்ல. அது வெறும் புனையப்பட்ட கதைதான். மூட நம்பிக்கை. உண்மையாக அவ்வாறு நடக்கவில்லை. அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதற்கான நிரூபிக்கும் ஆவணம் ஒன்று கூட கிடையாது அங்கே. அங்கு நடந்தது என்ன என்பதைப் பற்றிய குட்டு உண்மையாக வெளிப்பட்டுள்ளது. எனவே அவர்கள் சொல்வது பொய் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் நாம் கையாளும் விஷயங்களோ முற்றிலும் உண்மையாக அவர் நடப்பித்த காரியங்களைக் கூறும் வரலாறு ஆகும். 32இங்கே இந்த சபைக்காலத்தில் ஒளியானது கொஞ்சங் குறைய முற்றிலும் அற்றுப்போய் விட்ட நிலையில் ஆகிவிட்டது. அதற் கடுத்து வந்த சபைக்காலம் சீர்திருத்த காலமாக வருகிறது. இது முதற்கொண்டு ஏறத்தாழ 1000 ஆண்டுகாலம் இருண்ட காலத் திற்குள் சபை சென்றது. அப்பொழுது ஒளி மங்கி இருட்டாயிற்று. ஐரேனியஸின் காலத்தில் இருந்த பார்வை இங்கே முழுவதும் இல்லாமல் மங்கிப் போய்விட்டது. ஐரேனியஸ் ஒரு மகத்தான தேவ மனிதனாயிருந்தார். இவரைப் போன்ற இன்னும் அநேக நூற்றுக் கணக்கான விலையேறப்பெற்ற பரிசுத்தவான்கள், அந்த அரங்கத்தில் நின்றிருந்து, கிறிஸ்துவினிமித்தம் தங்கள் ஜீவன்களின் இரத்தத்தை, தாரளமாக சிந்தி உயிர் நீத்தனர். அவர்கள் தங்கள் இரத்தத்தை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ் நானத்திற்காகவும், அந்நிய பாஷைகளில் பேசினதற்காகவும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் ஜீவனை தங்களில் பெற்று தேவ பிரசன்னத்தோடு ஜீவித்ததற்காகவுமே சிந்தினார்கள். அவர்களை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட வர்கள்தான் உபத்திரவப்படுத்தினார்கள். 33ஓ, பாதாளத்தில் உள்ள பிசாசுகளில் லேகியோன் கூட்டம் அவர்களைக் கொடுமைப்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது போலும். இதை இவ்வாறு கூறுவதைத் தவிர வேறு எவ்விதத் திலும் பாத்திரமானவாறு அழைக்க எனக்கு தெரியவில்லை. அவ்விதமாக வந்து, தங்களுக்கென சபையை உருவாக்கி, தங்களைத் தாங்களே பெரிதுபடுத்திக் கொண்டு இருந்தனர். அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசியானவள், அதாவது வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி, தன்னைத் தவிர வேறு யாருமில்லை, குருக்களைத் தவிர வேறு யாருக்கும் வேதத்தை வியாக்கியானிக்க முடியாது'' என்றெல்லாம் ஆக்கிக்கொண்டார்கள். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டாலும் அவள் அப்படியல்ல. அவள் பொய் சொல்லுகிறாள். பாருங்கள்? ஆனால் அதே வேளையில், தேவனோ, சத்தியத்தைப் பெற்றிருந்த தன்னுடைய தூதனை அங்கே வைத்திருந்தார். சத்தியமானது எப்பொழுதும் அதற்கு திரும்பிப் போகும். பாருங்கள்? எப்பொழுதும் அது மூலவார்த்தைக்கு திரும்பிப் போகிறதாய் இருக்கிறது. ஏனெனில் தேவனும் கூட அதிலிருந்து மாறுகிறவரல்ல. 34கடந்த இரவிலும், நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன், இதைப் பற்றி பார்த்தோம். எனவே அது உங்கள் இருதயத்தில் ஆழப்பதிந்திருக்கும். முன்னடையாளமாக அந்த யேசபேலுக்கு ஒரு மகள் இருந்தாள். அது உங்கள் நினைவிலுள்ளதா? வெளிப் படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில், “இந்தக் கள்ளச்சபையான ரோமுக்கும் குமாரத்திகள் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அவள்தான் வேசிகளின் தாய் ஆவாள். அது உண்மையல்லவா? யேசபேலுக்கு ஒரு மகள் உண்டு. அவளை யேசபேல் என்ன செய்தாள்? பாருங்கள், அவைகள் யாவும், முன்னடையா ளமாகவும், சாயலாகவும், நிழலாகவும் இருப்பதைப் பாருங்கள். யூதாவின் இராஜாவாகிய யோசபாத்தின் குமாரன் யோராம் தன் மகளை விவாகம் செய்யும்படி அவள் ஏற்பாடு செய்தாள். அந்நேரத்தில் இஸ்ரவேலானது இரண்டாக பிளவு பட்டிருந்தது. ஒரு பக்கம் இஸ்ரவேலும், இன்னொரு பக்கம் யூதாவும் அதன் தலைநகர் எருசலேமும் இருந்தன. இந்தப் பக்கம் ஆகாபும், மறுபக்கம் யோராமும் இருந்தனர். இப்பக்கத்தில் இஸ்ரவேலை யேசபேல் முழுவதும் வசப்படுத்தி வென்று, அவர்கள் விக்கிரங் களை வணங்கும்படி செய்தாள். (ஆனால் எலியாவும், அந்த சிறிய கூட்டமான உண்மையான ஜனங்களும் இப்பாவத் திற்கு உடன் படவில்லை). சரி, இப்பொழுது மறுபக்கத்தில் யூதேயாவில், யோராம் அரசாண்டான்; யேசபேல் ஆகாபின் மூலம் இம்மகளைப் பெற்றெடுத்து, அவள் பெரியவளானபோது, அவளை யூதாவின் இராஜாவாகிய யோசாபாத்தின் மைந்தன் யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இவ்விவாகத்தின் வாயிலாக, யூதாவுக்குள் விக்கிரக வணக்கம், மற்றும் எருசலேமில் அஞ்ஞான பலிபீடங்களும் எழும்பின. 35சரியாக அதைத்தான் கத்தோலிக்க சபையானது செய்தது. அவள் ஸ்தாபன உபதேசத்தில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவி சபையில் இல்லாமல் போகும்படி செய்து, தன் மகள் சபையிலும் அவ்வாறே ஆகும்படி செய்துவிட்டாள். (அவைகள் லூத்தரன் சபை, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, பெந்தெகொஸ்தே மற்றும் இன்ன பிற சபைகள்). அதே காரியத்தையே அவள் செய்தாள். “அவள் வேசிகளின் தாய்'' என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது வேதவாக்கியங்களின் வாயிலாக இதைப் பாருங்கள். நான் இங்கே கூறியுள்ளதற்கு மாறாக, வேறுவிதமாக வேதவாக்கியங்களில் உங்களுக்குத் தென்படுகிறதென்றால், அதை எடுத்துக் கொண்டு கண்ணியமாக என்னிடம் வாருங்கள். (வேதம் கூறுகிறபடியே, வரலாற்றிலும் உள்ளது. அதுவும் வேதத்தோடு இணைந்தே செல்லுகிறது). வேதத்தில் வேறு விதமாகச் சொல்லப் படவில்லை. பாருங்கள்? அது உண்மை. பிராடெஸ்டெண்டு மார்க்கமானது இருப்பதி லெல்லாம் அதிகம் விஷம் நிறைந்ததான ஸ்தாபனங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவைகளில் மனிதன் சபையை ஆளும்படி அவர்கள் செய்கிறார்கள். அங்கே சிங்காசனத்தில் ஒரு மனிதனை தேவன் போல் அமர வைத்தார்களே, அதைப்போலவே இங்கும் இன்னொரு சொரூபத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். பெந்தெ கொஸ்தேயின் தலைமை அத்தியட்சகர் அல்லது ஜெனரல் ஓவர்சீர் போன்றவர்கள் என்று கூறுகிறார்கள்? “நல்லது, அவரது உபதேசம் என்ன என்று நான் பார்க்கட்டும். ஓ, அவர் இயேசுவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளாரா? அவர் உள்ளே வர முடியாது. முடியாது ஐயா'' என்று கூறிவிடுகிறார்கள். இவ்வாறு நீங்கள் வார்த்தையை புறக்கணிக்கிறீர்கள். அதைப் போலவே அவர்களும் செய்தாக வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்; நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன், நீங்கள் எவரும் அக்கூட்டத் திற்குப் போகக் கூடாது. அதற்கு என் அங்கீகாரம் கிடையாது. நீங்கள் எவ்வளவு அதிகமாக வியாதிப் பட்டிருந்தாலும் சரி, அதை விட்டு விலகியிருங்கள். அங்கே தேவன் என்ன செய்தாலும் அதைப்பற்றி அக்கறையில்லை. நீங்கள் நம்முடைய போதகக் கண்ணாடி வழியாக பார்க்காவிடில், உங்களுக்கு பார்வையில்லை'' என்று. இவ்வாறாக மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ணுகிறார்கள். அந்த சொரூபம் பேசும்படி அதற்கு உயிர் கொடுக்கிறார்கள். அப்படித்தான் அது உள்ளது? அவனுக்குப் பேச முடியும் என்று எண்ணாதீர்கள். ஒரு தடவை அவனை சற்று குறுக்கிட்டுப் பாருங்கள். ஊ ஹு, நீங்கள் நிச்சயமாக தொல்லை யில் அகப்படுவீர்கள். 36ஓக்லஹாமாவில் உள்ள டுல்சா என்ற இடத்திற்கு நான் போனதைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓ, அங்கே நான் சங்கடமான குழப்பத்தில் அகப்பட்டுக் கொண்டேன். அந்த ஸ்தாபனங்களெல்லாம் அங்கே வந்து குழுமிவிட்டார்கள். அக் கட்டிடத்தில் நான் அமர்ந்திருந்தேன் ஒரு நாள். அப்பொழுது எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதில் நான் ஒரு அழகான சிறிய பூனைக்குட்டி ஒன்றைக் கண்டேன். அப்பூனை பட்டுத் தலையணையில் படுத்திருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. நான் அதனண்டையில் சென்றேன். (நான் பூனையைக் கண்டால் பயப்படுகிறவன்) அதை நான் சீண்ட ஆரம்பித்த போது, ''பர்ர்ர் பர்ர்ர்'' என்று சீறியது. அது எவ்வாறு அவ்விதமான விசித்திர மான சப்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். “அழகான பூனைக்குட்டியே'' என்று கூறி நான் அதைச் சீண்டினேன். அது ''பர்ர்'' என்றது. மிகவும் அருமையாக இருந்தது. அப்பூனையின் பின்னால் இருந்த தலையணையை நான் பார்த்த போது, அதில், “பெந்தெகொஸ்தே பூனைக்குட்டி'' என்று எழுதி யிருந்தது. ''இது விசித்திரமானதாக இல்லையா? இது நிச்சயமாக ஒரு தரிசனமாகத்தான் இருக்கவேண்டும்'' என்று நான் கூறினேன். 37அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம் கூறியது: “நீ இதன் உரோமத்தை இவ்வாறு இழுத்து சீண்டினால் அது ஒன்றும் பாதகமில்லை. ஆனால் இது உண்மையில் எதனால் உண்டானது என்பதை காணவிரும்பினால். அப்பொழுது அதன் உரோமத்தை பின்பக்கமாக சுரண்டி சீண்டிவிடு'' என்றது. பாருங்கள்? எனவே நான் அவ்வாறே அதன் உரோமத்தை பின்பக்கமாக இழுத்து சீண்டி விட்டபோது, அதன் கண்கள் நிலைக்குத்தி வெளியே வந்து, பச்சை நிறம் கொண்டு, அது ஒரு பெரிய ராட்சத மிருகம் போல் ஆகி, என் மேல் கடுயைமாக சீறினது. நீங்கள் அதை பின்பக்கமாக சீண்டிவிட்டால் போதும், அதாவது, அதனுடைய ஞானஸ்நானம், ”பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்'' அவர்கள் கொடுக் கிற ஞானஸ்நானமானது பிசாசினுடையது, கத்தோலிக்க சபையி னுடையது என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள்; அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது சீறிப் பாய்கிறது. நான் கீழே இறங்கி வந்து, சகோதரன் ஜீன், சகோதரன் லியோ, மற்றும் உள்ளவர்களிடமும், “நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனங் களைப் பற்றிய ஒரு உண்மையான தரிசனத்தைக் கண்டேன்'' என்று கூறினேன். 38இப்பொழுது நாம் 3ம் அதிகாரத்திலிருந்து படிப்போம். சர்தை சபையானது செத்த சபையாக இருந்தது. அது மரித்ததாயிருந்தது. ஏனெனில், அது இந்தக் காலத்தில் கொல்லப்பட்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களுக்குள் இக்காலத்தில் ஜீவனானது ஒரு சிறிதளவே இருந்தது என்பதைப் பார்ப்போம். கி.பி.1520 முதல் கி.பி.1750 முடிய சர்தை சபையின் காலம் நீடித்தது. இந்த சபைக் காலத்திற்குரிய நட்சத்திரம் அல்லது தூதன், அல்லது செய்தி யாளன் அவரது கரத்தில் இருக்கிறார். அது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? அந்த நட்சத்திரம் ஒரு தூதனைக் குறிக்கும். அத்தூதன் அக்காலத்திற்குரிய செய்தியாளன் ஆவார். சரி. 39நிசாயா ஆலோசனை சங்கத்தைப் பற்றி முடித்து விட்டோம். சபையானது அங்கே மரித்துவிட்டது. சபையும் அரசும் இணைந்த போது, அவர்கள் அதிகாரத்திற்கும், மகிமைக்கும் உயர்ந்தார்கள். கடந்த இரவில் நம்முடைய பாடத்தில், மக்கள் அப்பொழுது என்ன நினைத்தார்கள் என்பதைப் பார்த்தோமே, அது ஞாபகத்தில் இருக்கிறதா? 'ஆயிர வருட அரசாட்சி துவங்கிவிட்டது'' என்றார்கள் அவர்கள். கிறிஸ்து வராமலேயே ஆயிரமாண்டு அரசாட்சி வந்துவிட்டது'' என்று போதித்தார்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் பிறகுதான் ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படும். அந்நாட்களில் நடந்ததைப் பற்றி வரலாற்றில் நீங்கள் பார்த்தால், கள்ள இயேசுக்கள் எழும்பினார்கள் என்றும், இன்னும் பலவிதமான இவ்விதகாரியங்கள் ஏற்பட்டன என்றும் அறியலாம். தங்கள் போப்பே இயேசுவானவர் என்று கருதினார்கள். அவரை ''வைகார்'' என்று அழைத்தார்கள். அதற்கு அர்த்தம், “தேவனுடைய குமாரனுக்கு பதிலாள்'' என்பது. ஆம், அவர்களுடைய பெரிய பரிசுத்த தேவனைப் போலுள்ளவன் அங்கே அமர்த்தப்பட்டிருக்கிறான். 40நான் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லட்டும். இயேசு வருவதற்கு முன்னால், “கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ள இயேசுக் களும் எழும்புவார்கள்'' என்று வேதம் கூறுகிறது. அது உண்மை . ''இதோ இங்கே...'' சபையானது மகிமையில் எடுத்துக் கொள்ளப் பட்டு போகிற வரைக்கிலும், இயேசுவானவர் இப்பூமியின் மேல் தன் பாதங்களை வைக்க மாட்டார் என்ற விஷயத்தை உங்கள் இருதயங்களில் பதியும்படி போடுகிறேன். இதை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பு வார்கள். ஆனால் இயேசுவானவர் இப்பூமியின் மேல் கால் வைக்க மாட்டார். இயேசு இம்மண்ணின் மேல் கால்வைப்பதில்லை. எக்காளம் தொனிக்கும், நாம் அப்பொழுது அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அப்பொழுது சபையானது ஏற்கனவே புறப்பட்டு போய்விட்டிருக்கும். பிறகு இயேசு தோன்றும் பொழுது, அவருடைய திரும்பி வருதலாக இருக்கும். புறஜாதி மணவாட்டி, அவரைச் சந்திக்க ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கே அவரை சந்திப்பாள். அது வேத வாக்கியங்களின்படி இருக் கின்றதா? அவர்கள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்பார்கள். நாம் மேலே போய்விடுவோம். அவர் தன் சபையை மகிமையில் எடுத்துக் கொண்டு, தன் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்து முடிந்த பிறகு அவர் யூதர்களின் மீதியானவர்களுக்காக பூமிக்குத் திரும்பி வருகிற வரையிலும், அதற்கு முன்னால் இம்மண்ணின் மேல் அவர் பாதங்கள் படுவதேயில்லை. 41நிசாயா ஆலோசனை சங்கம் முடிவடைந்த பிறகு, சபையானது விழுந்தது. அதன்பிறகு போப்பு மார்க்க ஆளுகையின் கீழ் கொஞ் சங்குறைய ஆயிரமாண்டுக்காலம் சபை உட்பட்டது. அவர் களோடு முரண்படுகிற யாவரையும் அவர்கள் கொன்று தீர்த்தார் கள். யேசபேல் இஸ்ரவேலுக்கு செய்தது போல், ஒன்று கத் தோலிக்க சமயத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலை நீடித்தது. இஸ்ரவேலில் பாகாலுக்கு முழங்கால்படியிடாத எலியாவும் அவனோடு மீதியான இஸ்ரவேலர் சிலருமாகிய ஒரு கூட்டம் அன்றைக்கு இருந்தது போல், இச்சபைக் காலத்திலும், வெகு சிலரே பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாக நீடித்தனர். மற்றபடி, பரிசுத்த ஆவி கொஞ்சங்குறைய முற்றிலும் நீங்கிப் போன நிலை தான் நீடித்தது. அதைப்பற்றி ஒரு வசனத்தை நீங்கள் விரும்பினால் 1 இராஜாக்கள் 19ம் அதிகாரம், 18ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே எலியா ஒரு கெபியின் வாயிலில் நின்று கொண்டு, “போதும் கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளையெல் லாம் அவர்கள் கொன்று போட்டார்கள். மற்றும் அநேக காரி யங்களைச் செய்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியா யிருக்கிறேன்'' என்று கூறினான். ஆனால் தேவனோ எலியாவிடம், சபையில் இன்னும் பாகாலுக்கு முழங்கால்படியிடாத சில நூற்றுக்கணக்கானவர்களை மீதியாக வைத்திருக்கிறதாகக் கூறினார். 42இப்பொழுது நாம் சர்தை சபையை ஆரம்பிக்கிறோம். முதலாம் வசனத்தில் உள்ள ''சர்தை'' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில், “தப்பித்துக் கொண்டவன்'' என்று பொருள். சர்தை என்பதற்கு உண்மையான அர்த்தம் ”தப்பித்துக்கொண்டவன்'' என்பதாகும். நாம் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து துவங்கப் போகிறோம். நாம் இந்தக் காலத்தை “சீர்திருத்தக் காலம்” என்று அழைக்கப் போவதாக நம்புகிறேன். இவ்வாறு இச்சபைக் காலம் ''சீர்திருத்தக் காலம்'' என்றழைக்கப்படுவது மிகவும் பொருத்த மானதுதான், ஏனெனில், சீர்திருத்தம்தான் 'தப்பித்துக் கொண்ட ஒன்றாக' இருந்தது. அதிலிருந்து அது தப்பித்து வெளியேறியது. 43நாம் இப்பொழுது முதலாம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங் களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந் திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” வெளி.3:1 முதலாவது வாழ்த்துதல், ஏழு ஆவிகள் என்னப்பட்ட வைகள்... ''ஏழு ஆவிகளும், எழு நட்சத்திரங்களும்.'' ஆவிகள் ஆகிய தூதர்கள், நட்சத்திரங்களாகிய செய்தியாளரிடம் வந்தன. ''ஏழு ஆவிகள்'' என்றால், ஏழு வித்தியாசமான காலங்களில் ஒரே பரிசுத்த ஆவி அந்தந்தக் காலத்திற்குரிய நட்சத்திரமாகிய செய்தி யாளனை அபிஷேகிக்கிறது. ஆவி நித்தியமானது, குத்துவிளக்கான இந்த சபைக்காலங்களின் இருளான வேளைகளில் ஒளியை பிரதி பலிக்கிற காரியத்தை செய்யும்படி நட்சத்திரமானது உண்டாக் கப்பட்டிருக்கிறது. அதைத்தான் நட்சத்திரங்கள் எடுத்துக் காட்டு கின்றன. தூதனாகிய ஆவி நட்சத்திரத்திடம் சென்றது. அப்பொழுது பரிசுத்த ஆவியின் ஒளியை அந்த சபைக்காலத்திற்குரிய நட்சத்திரத்தின் வாயிலாக அது பிரதிபலித்துக் காட்டியது. இந்த ஏழு ஆவிகள் யார் என்று நீங்கள் அறிய ஆவலோடு இருந்திருப் பீர்கள். அது ஏழு சபைக் காலங்களுக்குரிய ஏழு செய்தியாளர் களாகிய தூதர்கள். பாருங்கள்? ஒவ்வொரு காலத்திலும், குறிப் பிட்ட நட்சத்திரமானது காட்சியில் தோன்றிய பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்து, அந்நட்சத்திரத்தை அபிஷேகித்து, முதலாவது நட்சத்திரம் எவ்வாறு இலங்கியதோ, அதே வண்ணம் இதுவும் இருக்கச் செய்கிறது. 44இது சரிதான் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்தட்டும். அது என்னவிதமான நட்சத்திரம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஏனெனில், சாத்தானும் ஒரு நட்சத்திரம் தான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி அவன் என்பதை மறந்துவிட வேண்டாம். பவுல் கூறினான்... பவுல் எபேசு சபையின் நட்சத்திரம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவன் கூறினான். அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கலாத்தியர் 1:8ல் பவுல் இவ்வாறு கூறினான். அவன் ஏற்கனவே, தான் போனபிறகு, மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் வரும் என்று எச்சரித்திருக் கிறான். ''வானத்திலிருந்து வருகிற தூதன். வேறொரு சுவிசேஷத் தைப் பிரசங்கித்தால்'' இங்கே இந்த மனிதன் ஒரு தூதனைப் போல் காட்சியளிக்கிறான். தன்னை இயேசுவின் பதிலி என்பதாகக் காண் பித்துக் கொண்டு வந்தான். பவுல் கூறினான். “நாங்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத் திலிருந்து வருகிற தூதன் அல்லது வேறு யாராவது பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்'' என்று. 45அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றிராவிடில், மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி பவுல் தான் எபேசியரை வற்புறுத்தினான். ''பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று பவுல் கூறினான். அப்போஸ்தலர் 19:5. அவன் அவர்கள் மேல் தன் கைகளை வைத்த போது, அவர்கள் வரங்களைப் பெற்று சபைக்குரிய ஒழுங்கில் நிலைநாட்டப்பட்டு, அற்புதங்களை நடப்பித்தல், வியாதியஸ்தரை குணமாக்குதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷை களை வியாக்கியானம் செய்தல் போன்ற வரங்களையும் பெற்று இலங்கினார்கள். அது சரிதானே? 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் பவுல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். தேவன் சபையில் இந்த மகத்தான வரங்களை அளித்தார். தேவ மகிமைக்காக அவ்வரங்களை அவர்கள் பயன்படுத்தும்படி, சபையில் அதற்கேற்ற ஒழுங்கை பவுல் ஏற்படுத்தினான். பவுல் அதைப்பற்றி கூறியுள் ளார். ஆகவே எந்தவொரு மனிதனானாலும், அவன் எந்த ஸ்தாபனத் தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அன்னிய பாஷைகளில் பேசுதலும், பாஷைகளில் வியாக்கியானம் செய்தலும், தெய்வீக சுகமளித்தலும், அற்புதங்களை நடப்பித்தலும், உண்மை யான ஞானஸ்நானத்தைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் கொடுத்த சாட்சியும், ஆகிய இவற்றின் நாட்கள் கடந்துபோய்விட்டன என்று உங்களிடம் சொன்னால், அப்படிப்பட்டவன் சபிக்கப்பட்டவனா யிருக்கடவன். பவுலின் மேல் இருந்த அதே ஆவியானவர்தான், அடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் அனுப்பப்பட்டார். அதே ஆவியானவர் தான் அதற்கடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் வந்தார். இப்படியாக ஓரே ஆவியானவர்தான் அடுத்தடுத்து வந்த சபைக்காலங்களுக்குள்ளும், கடைசியாக சபைக்காலத்தின் முடிவு வரைக்கிலும் அப்படியே வந்து கொண்டிருக்கிறார். அதே ஆவியானவர் தான், பரிசுத்த ஆவியானவர் அவர், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 46இங்கு எழுதப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். வேதத்தை எழுதுகிறவர் அறிந்திருக்கிறார். 'ஏழு ஆவிகள் (“Seven Spirits”) என்பதில் ''ஸ்பிரிட்ஸ்'' என்ற ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்து ஆங்கிலத்தில் கேபிடல் S இல் போடப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். ஓ ஹு ஒரேயொரு பரிசுத்த ஆவியான வர் தான். அதே பரிசுத்த ஆவியானவராகிய அந்த ஒருவர்தான், ஏழு தடவைகளில், ஏழு சபைக் காலங்களுக்குள்ளும், அதே ஒளியை சுமந்து கொண்டு வருகிறார். அதைப் புரிந்து கொண்டீர் களா? ஏழு சபைக் காலங்களின் ஏழு வெவ்வேறு காலங்களுக் குள்ளும், இந்த பரிசுத்த ஆவியானவர் இதே செய்தியை எடுத்துக் கொண்டு செல்லுவார். அதை மாற்றுகிற எவன் மேலும் சாபம் கூறப்பட்டுள்ளது. முழுக்காரியத்தின் வெளிப்படுத்துதலோடு அது பொருந்திப் போகிறதா என்பதைக் கவனியுங்கள். ''எவனாவது இதிலிருந்து ஒன்றை எடுத்துப்போட்டாலோ, இதோடு ஒன்றைக் கூட்டி னாலோ, அவனது பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப் படும்'' என்று அவர் கூறினார். அங்கே தான் எல்லாவற்றையும் அடக்கினதாக அது இருக்கிறது. எனவே நீங்கள் இதிலிருந்து எதை யாவது எடுத்துப்போடவோ, அல்லது கூட்டவோ அங்கே இடமேயில்லை. ஏனெனில், அது அவ்வாறு இருக்கிறது. அதைத் தான் தேவன் கூறினார். அதைத்தான் ஆவியானவர் கூறினார். அதைத் தான் சபைகள் கூறின. பவுல் போதித்தவைகளுக்குப் பதிலாக இன்னும் வேறு எதையாவது நீங்கள் உள்ளே திணிக்க முற் பட்டால், அது பிழையான காரியமாகும். வேதமானது பிழை யில்லாததாக இருக்கிறது. இயேசு கூறினார்: ''அவனது பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன்'' என்று. “ஜீவ புஸ்தகத்தின் எந்தப் பகுதியிலிருந்து?” என்று நீங்கள் கேட்கலாம். 47ஜீவபுஸ்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ள மக்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் நிச்சயம் தவறிடப் போகின்ற னர். அதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அன்றொரு இரவில் கொடுக்கப்பட்ட அதைப் பற்றி உபதேசத்தை நினைவில் வைத்திருக் கிறீர்களா? அதைப் புரிந்து கொண்டீர்களா? அதைப் பற்றி நான் மீண்டும் விளக்குவேன். ஏனெனில் இன்னும் அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை போலும் பாருங்கள்? யூதாஸ் காரியோத்து சாத்தானின் மைந்தனாயிருந்தான். அவன் மாம்சத்தில் தோன்றிய பிசாசாவான். அவன் அப்படிப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது. அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்'' என்று வேதம் கூறுகிறது. இதை ஒரு நிமிடம் கவனியுங்கள். இயேசு நடுவில் இருக்க, வலது புறத்தில் ஒருவனும், இடது புறத்தில் ஒருவனுமாக இரு கள்ளர்கள் அங்கே இருக்கிறார்கள். இயேசு தேவனுடைய குமாரனா யிருந்தார். அது சரிதானே? சிலர் மூன்று சிலுவைகளைத்தான் காண் கிறார்கள். ஆனால் நான்கு சிலுவையானது அங்கே இருந்தன. நான்கு சிலுவைகள்! சிலுவைகள் என்ன? அது மரத்தினால் ஆனது. அது சரிதானே? “மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்ட வனாயிருக்கிறான்'' என்று வேதம் கூறுகிறது. அவர் நமக்காக சாபமானார். அவர் ஒரு மரத்தில் தூக்கப்பட்டார். அது வெட்டப் பட்டுள்ளது. ஆனால் அது ஒரு மரம் தான். அது சரிதானே? அங்கே மலையின் அடிவாரத்தில், கீழே ஒரு மரத்தில் இன்னொருவன் தொங்கிக்கொண்டிருக்கிறான். யூதாஸ் ஒரு காட்டத்திமரத்தில் நான்றுகொண்டான். அது சரிதானே? பாருங்கள்! இதோ இங்கே பரலோகத்திலிருந்து வந்தவரான தேவகுமாரன் தன்னோடு பாவத்திலிருந்து மனந்திரும்பிய ஒருவனை எடுத்துக்கொண்டு, மீண்டும் பரலோகத்திற்கே திரும்புகிறார். இதோ அங்கே கேட்டின் மகன் தொங்குகிறான். அவன் பாதாளத்தில் இருந்து வந்தான். மீண்டும் பாதாளத்திற்கே, மனந்திரும்பாத பாவியொருவனை அழைத்துக்கொண்டு செல்லு கிறான். அந்த மனந்திரும்பாத பாவி இயேசுவைப் பார்த்து, “நீர் தேவனுடைய குமாரனேயானால், உம்மையும் எங்களையும் இரட்சித்துக் கொள்ளும்” என்று கேட்டான். ஆனால் இந்தக் கள்ளனோ, (சுவிசேஷம் பிரசங்கிக்கிறவனாக அச்சுவிசேஷகன் இருக்கிறான்). “நாமோ குற்றம் செய்து அடிக்கப் படுகிறோம். அவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று கூறினான். ”ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்“ என்று கேட்டான். ஓ, அவன் யார்? 48கடந்த இரவோ, அல்லது அதற்கு முந்தின இரவோ சொல்ல வேண்டியவை விட்டுப்போயிற்று. கொஞ்சம் அதைக் கூறுகி றேன். இந்தப் பக்கம் தேவனின் ஆபேல்; அந்தப் பக்கம் பிசாசின் காயின். காயின் ஆபேலை பலிபீடத்தண்டையில் கொன்றான். யூதாஸும் இயேசுவை பலிபீடத்தண்டையிலே கொன்றான். அது உண்மை . அந்தப் புகையானது ஏதேனில் எழும்பி மீண்டும் இங்கேதான் அமைகிறது, அது முற்றிலும் உண்மை . ஓ, அந்த பண்டைகால பாதை மகிமை பொருந்தினதாய் இருக்கிறது. அது ஆசீர்வதிக்கப்பட்ட பழைய பாதை, அப்படியே முழுவதும் மகிமையால் நிறைந்துள்ளது. இந்த சர்தை சபையின் தூதனுக்கு அவர் கூறுகிறார்: ''ஏழு ஆவிகள், அந்த ஏழு ஆவிகளை உடையவர்'' என்று கூறியதை நாம் கண்டோம். “சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்ன வெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங் களையும் உடையவர் சொல்லுகிறதாவது; வெளி.3:1 49தேவன் ஒரே ஆவிதான் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? தேவன் தான் பரிசுத்த ஆவியானவர் என்பது உண்மை . பிதாவாகிய தேவனே பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். எல்லாம் அவரே. ஏனெனில் மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். தேவன் இந்த ஒரே ஆவியானவரை, ஏழு வெவ்வேறு காலங்களில் சுவிசேஷ ஒளிகளாக ஏழு சபைக் காலங்களுக்கு அனுப்பினார். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஏழு சபைக்காலங்கள். “தேவன் அப்படிச் செய்யமாட்டார்'' என்று நீங்கள் கூறலாம். நிச்சயமாக சகோதரனே, அப்படித்தான். கவனியுங்கள்! எலியா எடுக்கப்பட்ட பிறகு, எலியாவின் ஆவியை தேவன் உபயோகித்தார். எலியா போன பிறகு எலியா வில் இருந்த ஆவியின் இரட்டிப்பு மடங்கை எலிசா பெற்றுக் கொண்டான். எலிசா வியாதிப்பட்டு மரித்துப்போன பிறகு, அந்த ஆவி மீண்டும் யோவான் ஸ்நானகன் மேல் வந்தது. அதே ஆவிதான் இவனையும் அந்த எலியாவைப் போலவே நடந்து கொள்ளச் செய்தது. இவனும் அவனைப் போலவே வனாந்திரத்தில் வாழ்ந்தான். இன்னும் இன்னபிற ஏனைய காரியங்களையும் அவனைப் போலவே யோவான் ஸ்நானனும் செய்தான். அதே எலியாவின் ஆவி இந்தக் கடைசிக்காலத்தில் திரும்பி வரும் என்று முன்னுரைக் கப்பட்டுள்ளது. பாருங்கள். தேவன் அதே ஆவியை தொடர்ந்து வரும் காலங்களில் உபயோகிக்கிறார். 50இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். அது சரிதானே? இயேசுவின் மேல் இருந்த அதே ஆவியானவர், நேராக சபைக்குள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் திரும்பி வந்தார். அடுத்து வந்த காலத்திற்குள்ளும் அதற்கடுத்து வந்த காலத்திற்குள்ளும் பின்னும் தொடர்ந்து வந்த காலங்களுக்குள்ளும் அதே ஆவியானவர் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டே வந்திருக்கிறார். அது என்ன? அதே ஆவியானவர், ஒரே ஆவியானவர்தான் அது. ஓ, உங்களால் அதைக்கண்டு கொள்ள முடியவில்லையா? தேவன் நமக்கு மேலே, பிதாவாக; தேவன் நம்முடனே, குமாரனாக; தேவன் நமக்குள் பரிசுத்த ஆவியாக, அது மூன்று உத்தியோகங்கள் தான் மூன்று தேவர் களல்ல. அந்த மூன்று பட்டங்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவை யாவும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே நாமத்திற் குரியவையாகும். 51தொடர்ந்து நாம் படிக்கையில் கவனியுங்கள். “ஏழு ஆவிகளை'' உடையவர். அதாவது: ''ஏழு செய்தியாளர்களை உடையவர்'' முதலாம் தூதனாகிய பவுலை நிரப்பியிருந்த அதே ஆவிதான், இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு, ஏழு, ஆகிய சபைக் காலங்களின் தூதர்களையும் நிரப்பியிருந்தது. அவர்கள் யாவரும் அவருடைய வலது கரத்தில் இருக்கிறார்கள். அவருடைய வலது கரத்திலிருந்து தங்களுடைய வல்லமையையும், ஒளியையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் உன்னதத்திற்கு ஏறிப்போனார். பிலிப்பு, இல்லை, ஸ்தேவான் மரித்துக்கொண்டிருக்கையில், “வானங்கள் திறந்திருக் கிறதையும், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந் திருக்கிறதையும் காண்கிறேன்'' என்று கூறினான். ”தேவனுடைய வலது கரத்தில்'' என்பது தேவனுக்கு ஏதோ பெரிய வலது கரம் இருப்பதாகவும், அந்தக் கையின் மேல் இயேசு உட்கார்ந் திருப்பதாகவும் அர்த்தமல்ல. வலது கரம் என்றால், ''வல்லமையும் அதிகாரமுமாகிய' வலது கரம் என்றுதான் பொருள். 52தேவன் சிருஷ்டித்த அந்த சரீரம்... “என்னுடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். அவரது ஆத்துமாவை நான் பாதாளத் தில் விடேன். அவரை நான் மூன்றாம் நாளில் எழுப்பி, அவரை பலி பீடத்தின் மேல் ஆவியானவரின் இடத்தில் உட்கார வைத்தேன்'' கவனியுங்கள், பலிபீடத்தின்மேல் உட்கார்ந்திருந்த அவருடைய கரத்தில் ஒரு புத்தகம், பூமியிலுள்ள எந்தவொரு மனிதனோ, பூமிக்கு கீழேயுள்ள ஒருவனோ, அல்லது எங்குள்ள வனாக இருந்தாலும் சரி, அப்புத்தகத்தை திறக்கவோ, அதை நோக்கிப் பார்க்கவோ பாத்திரவனாகக் காணப்படவில்லை; ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமா யிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே; இவரே ஆதிகாலத்தில் மீட்கப்பட்ட இந்த சரீரத்தை துவக்கினார். இவர் வந்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து அப்புத்தகத்தை வந்து வாங்கி அவரே அதன் மேல் உட்கார்ந்து கொண்டார். பார்த் தீர்களா? அது வேதவாக்கியமாயிருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது, பாருங்கள்? 53“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, அவனும் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.'' அதாவது, நான் என்னுடைய சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, சோதனைகளின் மூலமாக உலகத் தின் காரியங்களையெல்லாம் நான் ஜெயித்தேன். நான் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டேன். (தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக் கிறது). ”வானத்திலும் பூமியிலும் உள்ள சகல அதிகாரமும் என் கரங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார். அனைத்து அதிகாரமும்! எல்லா அதிகாரமும் இயேசுவின் கையில் வந்து விட்டது! தேவன் வேறொரு நபர் என்றிருக்குமானால் அப்பொழுது, தேவன் அதிகாரமில்லாதவர் என்றாகிவிடுமே. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினதாக வேதம் கூறுகிறது. இயேசுவானவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களான தமது பரிசுத்தவான்களோடு வருகிறார். வேதம் கூறுகிறது: ''பரலோகத் தில் அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று'' என்று. அதாவது பரலோகம் காலியாகிவிட்டது. அப்படியானால், தேவன் என்ற இந்தப் பெரியவர் எங்கே? உ-ஊ. பாருங்கள். அவர் கிறிஸ்துவில் இருக்கிறார் நிச்சயமாக! நாமும் அவரைப்போலவே, பரிசுத்த ஆவியினால் ஜெயங் கொள்ளும் பொழுது, நாமும், அவர் பூமிக்குரிய தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்கையில், அவரோடே கூட உட்கார்ந்து, அவர் அங்கே செய்தது போலவே (ஆமென்) வல்லமையோடும், அதி காரத்தோடும், பூமி முழுவதையும் ஆளுகை செய்வோம். தேவ புத்திரர் வெளிப்படு வதற்காக பூமியானது பிரசவ வேதனைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய புத்திரர் வெளிப் படுவதற்காக. 54ஏனெனில், இவ்வுலகமானது தேவனால் ஆளுகை செய்யப்படு வதற்கென கொடுக்கப்படவில்லை. அதை அறிந்து கொள்வோமாக. அது உண்மை . இப்பூமியின் தேவன் யார்? மனிதன்! அது அவனுடைய உடைமை. பூமியிலுள்ள அனைத்தும் மனிதனுக்குக் கீழ்ப்பட்டவையாகும். பாவத்தினால் அவன் வீழ்ந்தான். கிறிஸ்து வின் மீட்கும் வல்லமையால், அவன் மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறான். அது சரிதான். ஏனெனில், பூமியானது மனிதனுக்கு சொந்தமானது ஆகும். அது அவனுக்கு அளிக்கப்பட்டு, அவன் யாவற்றையும் ஆளுகை செய்ய வேண்டு மென்றிருந்தது. இயற்கை யாவும் ஏகமாய் தவிக்கிறது. தேவ புத்திரர் பிரத்தியட்சமாவதற் கான அந்த நாளுக்காக அவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஓ, என்னே! தேவபுத்திரர் வெளிப்படுதல். நாம் இதோடு இதை விட்டு விடுவோம். 55அந்த செய்தியாளர்கள் அவருடைய வலது கரத்தில் இருந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் அவர் அவர்களை அனுப்புகிறாரோ, அங்கெல்லாம் சென்று, ஒரே காரியத்தையே அவர்கள் பேசுகிறார்கள். கிறிஸ்துவில் இருந்த அதே பரிசுத்த ஆவிதான் இவர்களுக்குள்ளும் இருக்கிறது. ஓ, கிறிஸ்துவில் இருந்த அதே ஆவி! அவர் உலகத்தைவிட்டுப் போவதற்கு முன்னால், “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னை காணாது (உலகம் என்பதற்கு கிரேக்க மொழியில் ''காஸ்மோஸ்'' - அதன் அர்த்தம் ''உலக ஒழுங்கு அல்லது அமைப்பு'' என்பதாகும்பூமியல்ல - உலகம்) உலக அமைப்பானது இனி என்னை காணாது. ஸ்தாபனங்கள் முதற்கொண்டு அனைத்து உலக அமைப்புக்களும் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள் (சபைவிசுவாசி காண்பார்கள்). ''நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் உலகத்தின் கடைசி பரியந்தம் இருப்பேன்'' என்று கூறிச் சென்றார். (இதில் நான் என்பது இடப்பிரதிப் பெயராக இருக்கிறது). இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாராயிருக்கிறார். அதைக் கண்டு கொண்டீர்களா? 56பெந்தெகொஸ்தே நாளில் வந்தது கிறிஸ்துவின் பரிசுத்த ஆவிதான் என்றும், அவரே அக்காரியங்களையெல்லாம் செய் தாரென்றால் இன்னமும் இங்கே பற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்து இங்கே பற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு உலகத்தின் கடைசி பரியந்தமும்; கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார். பவுலை பரிசுத்த ஆவியால் நிரப்பி, அம்மகத்தானகாரியங்களைச் செய்யச் செய்த அதே பரிசுத்த ஆவியானவர் தான் ஐரேனியஸையும் முழுவதும் நிரப்பினார். அதே பரிசுத்த ஆவியானவர்தான் மார்டினையும் நிரப்பினார். மற்றும் ஏனையோர்களையும் முழுவதுமாக அதே பரிசுத்த ஆவியானவர் தான் நிரப்பினார். அவர் தான் உங்களையும் என்னையும் முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பியுள்ளார். அதுதானே முதல் சபைக்காலம் முதற்கொண்டு முடிவு வரைக்கிலும் உள்ள சபைக்காலம் முடிய கிடைத்த பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமாயிருக்கிறது. அவர் அல்ஃபாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அவரே எல்லாம்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத் திரம், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, இன்னும் என்ன வெல்லாம் உண்டோ எல்லாம் அவரே, பிதா குமாரன், பரிசுத்த ஆவி. அவர் இருந்தவரும் இருப்பவரும், வருகிறவருமானவர், அல்ஃபாவும் ஓமேகாவுமாயிருக்கிறார். எல்லாவற்றிலும் எல்லாமு மாயிருக்கிறார். அது என்னை ஒரு பாடலைப்பாடச் செய்கிறது. என்னை யாரென்று நீர் சொல்கிறீர் (இயேசு சொன்னார்) நான் எங்கிருந்து வந்தெனென்கிறீர்கள்? என் பிதாவை உங்களுக்குத் தெரியுமா? அல்லது அவரது நாமத்தை நீங்கள் சொல்ல முடியுமா? அவர் சொன்னார்: நான் அல்ஃபாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் முழு சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமம் எரியும் முட்செடியிலிருந்து மோசேயுடன் பேசியது நானே, நானே ஆபிரகாமின் தேவனும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாமே சாரோனின் ரோஜாவும் நானே நான் வந்தது எங்கிருந்து என்று அறிவீரோ? முழு சிருஷ்டியும் நானே, இயேசு இயேசு என்பது எனது நாமம். 57பூலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள முழுக் குடும்பமும் அந்த ஒரே நாமத்தினால் கட்டப்பட்டுள்ளனர். (அக்குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, குதித்து, பரிசுத்த ஆவியினால் நாமம் சூட்டப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பேசி பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருக்கிறார்கள்) அது உண்மை . பரலோகத்தின் தேவனுக்கு முன்பாக பரலோ கத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமும், மற்றும் யாவும், எல்லா முழங்கால்களும் அந்த நாமத்திற்கு முடங்க வேண்டும். 'மனிதன் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப் படவுமில்லை.'' ஓ, நான் அதை நேசிக்கிறேன். அது நன்றாக இருக்கிறது சரி. 58“அவருடைய வலது கரத்தில்'' அது என்னவென்று கண்டு கொண்டீர்களா? அது பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாக வல்லமையோடும், அற்புத அடையாளங்களோடும் காலங்கள் தோறும் அதை நடப்பித்து வந்திருக்கிறதாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது நாம் .... அது இருண்ட காலத்தினூடே சென்றபோது, ஏறத்தாழ அது அவிந்துபோனதாக ஆகிவிட்டது. இப்பொழுது நாம் 2ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். ஓ, இந்த முதலாம் வசனத்திலிருந்து இன்னும் கூட கொஞ்சம் நாம் பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன். “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவ னென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” வெளி.3:1 இதற்கு அடுத்த சபைக்காலத்தைத் திருப்பிப்பாருங்கள் “.... என்னுடைய நாமத்தை நீ மறுதலியாமலிருக்கிறதையும் ...'' இதையடுத்து வரும் சபைக்காலத்தில், ”என் நாமத்தை மறுதலிக்க வில்லை'' யென்றும் கூறுகிறார். ஆனால் இந்த சபைக் காலத்திலோ, “உனக்கு ஒரு பெயர் உண்டு'' என்று கூறப்படுகிறது. இங்கே கவனியுங்கள்! இந்த சபை அவர் நாமத்தைப் பற்றி யிருந்தது. (இரண்டாம் சபை - மொழிபெயர்ப்பாளர்). இந்த சபை அவர் நாமத்தைப் பற்றியிருந்தது இந்த சபை இருண்ட காலத்திற்குள் சென்றது. அங்கே அதைப்பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அச்சபைக் காலத்தைவிட்டு வெளி வந்து, ஜீவனிடம் அவர்கள் இந்தப் பக்கத்தில் வரும்போது - லூத்தர் அவர்களை வெளியே இழுத்தபோது, தப்பியவர்களான அச்சிறு கூட்டம் இருந்தது; ”நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக் கிறாய்'' என்ற நிலைமை இயேசுவின் நாமத்தை உபயோகிப்பதை அவர்கள் விட்டுவிட்ட பிறகு, எந்த நாமத்தை அவர்கள் உபயோ கிக்க ஆரம்பித்தார்கள்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அப்படிப் பட்ட ஒரு காரியம் அங்கே இல்லை. அது மரித்ததாயிருக்கிறது. அது மரித்துப்போன உபதேசக் கோட்பாடு. 59பிதா என்பது ஒரு நாமமா என்பதை எனக்குச் சொல்லுங்கள். இங்கே எத்தனை பிதாக்கள் உண்டு? கைகளை உயர்த்துங்கள். உங் களில் யாருக்காவது 'பிதா' 'அல்லது' 'குமாரன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதா? மனிதர்கள் ஆக இருக்கிறோம். அது பெயரல்ல. பரிசுத்த ஆவியின் பெயர் பரிசுத்த ஆவியல்ல. அது பரிசுத்தமான ஆவியாயிருக்கிறது. பரிசுத்த ஆவி என்பது அதன் பெயரல்ல. அது பட்டம் தான். பிதா குமாரன், பரிசுத்த ஆவி. எனவே பாருங்கள், நித்திய குமாரன் என்ற உபதேசத்தைப் போலவே இதுவும் ஆதாரமற்றதாய் இருக்கிறது. நித்திய குமாரத்து வம் என்ற ஒன்று இல்லை. ஒரு குமாரனென்னப்பட்டவன் துவக்க முள்ளவனாகப் பிறக்கிறான். நித்தியத்திற்கு துவக்கம் ஏதுமில்லை. 60நான் அன்றிரவு கூறியது போல, நித்திய நரகம் என்ற ஒன்று இல்லை. நித்திய நரகம் என்ற ஒன்று எப்படி உண்டாயிருக்க முடியும்? அப்படியென்றால், நரகமானது எப்பொழுதும் இருந்த ஒன்று என்றாகிவிடும். 'அது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக் காவும் உண்டாக்கப்பட்டது'' என்று வேதம் கூறுகிறது. எப்பொழு தும் அங்கே ஒரு நரகம் உண்டாயிருக்கிறது என்றிருக்குமானால், ஆதியிலும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர், “ஏல், ஏலா, ஏலோஹிம், தானாகவே இருக்கிறவர்'' என்பவராக இருக்கையில், அப்பொழுது ஒன்றுமே சிருஷ்டிக்கப்படாமல், ஒன்றுமற்ற நிலையில், யார் அந்த நரகத்தை உபயோகப் படுத்தினார் கள்? அப்பொழுது நரகமானது அவர் ஆதியில் இருந்ததுபோலவே அதுவும் அவரோடு இருந்திருக்க வேண்டுமே. பாருங்கள்? நரகமானது பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக் காகவும் உண்டாக்கப்பட்டதாகும். துன்மார்க்கர் யாவரும் அதில் தள்ளப்படுவார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி). 61அவர்கள் துவக்கத்திலேயே கண்டனத்திற்காளாகினார்கள். அவர்களுக்கு பார்வையே இல்லை. அவர்கள் ஆரம்பத்திலேயே மரித்தவர்களாயிருக்கின்றனர். அவர்கள் இனி மரிக்க வேண்டிய தில்லை. அவர்கள் மரித்தவர்களாகவே துவங்குகிறார்கள். பாருங் கள், அவர்கள் வெளியே பறிக்கப்பட்டவர்கள்'' இதைக் கவனியுங்கள். அடுத்த வசனத்தை நாம் வாசிப்போம். விழித்திருங்கள்! “நீ விழித்துக் கொண்டு, சாகிறதற் கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.” வெளி.3:2 62அவர் இப்பொழுது லூத்தரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் யாவரும் இந்தக் காலம் லூத்தரன் காலம் என்றும், அது சீர்த்திருத்தத்தின் காலம் என்றும் ஒத்துக்கொள்கிறோம். அவர் என்ன சொன்னார்? “நீ உயிருள்ளவன் என்று பொய்யாக பெயர் ஒன்றினைக் கொண்டிருக்கிறாய், ஆனால் நீயோ மரித்தவனா யிருக்கிறாய்.'' அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மீண்டும் சபையை ஸ்தாபனமாக்கிவிட்டார்கள். ”கரிச்சட்டி கிண்டியை பார்த்து 'நீ கருப்பாய் இருக்கிறாய்' என்றதாம்.'' அதேபோல் ப்ராடெஸ்டெண்டுகள், “கத்தோலிக்கர்கள்'' என்று கேலி செய்ய வேண்டாம். பாருங்கள், ஏனெனில் கத்தோலிக்க சமயத்தின் அதே கோட் பாடுகளையும் சடங்காச்சாரங்களையும் அப்படியே நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மேன்மைபாராட்ட ஏதுவில்லை. லூத்தர் வெளியே வந்தபொழுது, அவர் தன்னோடு கத்தோலிக்க சமயத்தின் ஞானஉபதேசம் இன்னும் ஏனைய இன்னபிற சடங் காச்சாரங்களையும் கொண்டு வந்தார். தங்களுக்குத் தாங்களே ஒரு பெயரை சூட்டிக்கொண்டார்கள். பாருங்கள், ”நீ உயிருள்ளவன் என்று பெயரைக் கொண்டிருக்கிறாய். அந்த மரணாந்தகார ஆயிர வருடங்களிலிருந்து வெளிவந்து இன்னமும் மரித்ததாகவே இருந்து கொண்டு, இன்னமும் உயிரோடியிருக்கிறதாகக் கூறும் அந்நாமத்தைக் கொண்டிருக்கிறாய்'' இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஏனைய சபைகளைப் பற்றி இயேசு, “நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்'' என்று கூறியுள்ளார். இந்த ஐந்தாம் சபைக்காலத்தில் அவர்கள் அந்நாமத்தை இழந்து விட்டார்கள். இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்தபிறகு, அது உயிருள்ளவன்'' என்று பெயர் கொண் டிருந்தாலும் அது மரித்ததாகவே இருக்கிறது என்று ஆண்டவர் கூறினார். 63ஓ, மெதோடிஸ்ட்டுகளே, பாப்டிஸ்டுகளே, ப்ரெஸ்பிடேரி யன்களே, பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் பாவமன்னிப்புக் கென்று மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த பழைய மரித்ததாயிருக்கிற கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளைவிட்டு அகன்றுபோங்கள். அவளும் அவளுடைய குமாரத்திகளும் சுட்டெரிக்கப்படுவார்கள். ஒருவரும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் '' நாமம் சரி என்று சொல்ல முடியாது. அவை வெறும் பட்டப்பெயர்களே. அவை அவர்கள் ”பரிசுத்த திரித்துவம்'' என்று அழைக்கிறார்கள். வேதாகமத்தில் 'திரித்துவம்' என்ற வார்த்தையை எனக்கு எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம். யாராவது 'திரித்துவம்' என்ற வார்த் தையை வேதாகமத்தில் கண்டால், வந்து என்னிடம் சொல்லுங் கள் பார்க்கலாம். வேதாகமத்தில் அந்த வார்த்தையே கிடையாது. அவ்விதமான ஒன்று கிடையாது. 64இப்பொழுது, இப்பொழுது “... சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை...'' “லூத்தர் உங்களை இருளிலிருந்து பறித்து வெளியே இழுத்து காப்பாற்றினாரே, உங்களுக்கு உள்ளதைப் பற்றிக் கொண்டிருங்கள். அதைப்பற்றிக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சாகிறதற்கேது வாயிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உன்னை அதற்குள் இழுத்து விட்டு விடுவார்கள் அதைப்பற்றிக் கொள். அது சாகிறதற் கேதுவாக இருக்கிறது'' '...உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ள வைகளாக நான் காணவில்லை.“ வெளி.3:2. இது அருமையாக அமைந்துள்ளதல்லவா? ஓ, என்னே! “நிறைவுள்ளதாக இருக்கவில்லை'' என்று கூறப்பட்டுள்ள காரியத்தை நான் விரும்புகிறேன். ஏன் தெரியுமா? லூத்தர் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்பதை மட்டுமே பிரசங்கித்ததால், அவர்கள் நீதிமானாகுதல் என்ற நிலையோடு நின்று விட்டார்கள். அதனால் அது நிறைவடையவில்லை. நீதிமான் ஆனதன்பிறகு ஒருவன் பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் தனக்கே சொந்தமானவர்களல்ல, பரிசுத்த ஆவி யினால் நிறைவுள்ளவர்களாக ஆக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்களில் தாங்களே நிறைவுள்ளவர்கள் அல்ல. அவர்களிலுள்ள பரிபூரணமான பரிசுத்த ஆவியே நிறைவுள்ளதாக இருக்கிறது. பாருங்கள்? நான் ஏற்கெனவே கூறியபடி, ''அந்த மலை பரிசுத்த மலையல்ல, அம்மலையின் மேல் உள்ள பரிசுத்தமான தேவன்தான். சபை பரிசுத்தமான சபை என்றல்ல, பரிசுத்த மக்கள் என்றல்ல, ஆனால் சபையிலும் மக்களிலும் இருக்கிற பரிசுத்த ஆவியான வர்தான்'' அதுவே பரிசுத்தமுள்ள பாகம் ஆகும். 65'உன் கிரியைகள் நிறைவுள்ளவைகளாக நான் காண வில்லை.'' அவர்கள் பரிபூரண நிலைக்கு வரவில்லை. ஏனெனில் அவர் களுக்கு நீதிமானாகுதல் என்ற நிலை மட்டுமே உள்ளது. லூத்தரின் செய்தியின்கீழ், நீதிமானாகுதல் வந்தது. அடுத்து இங்கே பரிசுத்த மாகுதல், அதற்கடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இம்மூன்று ஆதாரமான விஷயங்களும் முறையே கடைசியான மூன்று சபைக் காலங்களிலும் கிரியை செய்தது. பாருங்கள்? இம்மூன்று மூலக்கூறுகளும் சேர்ந்தால் தான் ஒரு முழுமையான மறுபிறப்பை உண்டாக்க முடியும். அவர்கள் ஒரு சிறு கிருமியான தாயின் கர்ப்பத்தில் உருவானார்கள். அவ்ளவுதான். ஆனால் பிறப்பை ஏற்படுத்த பரிசுத்த ஆவி தான் வரவேண்டும். நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஒரு இயற்கையான பிறப்பு ஏற்படும் பொழுது, முதலாவது நடப்ப தென்ன? தண்ணீர் வெளிவருகிறது. அடுத்ததாக இரத்தம் வெளி வருகிறது. அதற்கடுத்து என்ன? ஆவி - ஜீவன். அது சரிதானே? இயேசு மரித்த பொழுது அவருடைய சரீரத்திலிருந்து என்ன வெளிவந்தது? அவருடைய விலாவிலே அவர்கள் ஈட்டியால் குத்திய போது, விலாவிலிருந்து, தண்ணீரும் இரத்தமும் வந்தது. ''உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்றார் அவர். ஆகவே தண்ணீர், இரத்தம், ஆவி மூன்றும் வெளிவந்தன. 66“இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால்'' ரோமர் 5:1 ”நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக் கிறோம்'' நீதிமான்களாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், எபிரெயர் 13:12-13. ''தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனங் களை பரிசுத்தம் பண்ணும்படி இயேசு நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' லூக்கா 24:49, “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனாக தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத் தில் இருங்கள், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். நீங்கள் அத்தியட்சகராக ஆகும் பொழுது அல்ல, நீங்கள் உதவிக்காரராக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் மேய்ப்பனாக ஆகும்பொழுது அல்ல, நீங்கள் போப்பாக ஆகும் பொழுது அல்ல, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் வெறும் டீக்கனாக (உதவிக்காரர்) மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு மேய்ப்பனாக மட்டும் இருந்தால், நீங்கள் வெறும் ஒரு போப்பாக மட்டும் இருந்தால் உங்களால் உங்களுடைய சபையைக் குறித்துத் தான் சாட்சியாக இருக்க முடியும். நீங்கள் ஒரு சடங்காச்சார கோட்பாட்டிற்கு மட்டுமே சாட்சியாக இருக்க முடியும். ஆனால் பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்பொழுது, அப்பொழுது நீங்கள் அவரைக் குறித்து சாட்சியை உடையவர்களாய் இருப்பீர்கள். அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். ஏனெனில் அவருடைய ஜீவன் உங்களில் இருப்பதால். ஓ, ஓ! என்னே , என்னே ! ஆம் ஐயா, ஓ, இதுபோல் இன்னும் ஏராளமான நல்ல காரியங்கள் என்னிடம் இங்கு வந்த வண்ணமாக உள்ளது. சகோதரர்களே! இதைக் கேட்கையில் நீங்கள் உணருவதை விட நான் மிகவும் அருமையாக உணருகிறேன். 67'... சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து.'' இங்கே இந்த மூன்றாம் வசனத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார். “ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக் கொண்ட வகையை (நான் அதை விரும்புகிறேன்) (தமிழ் வேதாகமத்தில் 'கேட்டுப் பெற்றுக்கொண்ட என்று போடப் பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாக மத்தில் ”நீ பெற்றுக்கொண்டதையும் காதால் கேட்ட வகை யையும் நினைவு கூர்ந்து'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆகையால் நீ பெற்றுக் கொண்ட வகையையும், கேள்விப் பட்ட வகையையும் (செவிகொடுத்த வைகளையும்) நினைவு கூர்ந்து, அதைக்கைக் கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன் மேல் வருவேன்; நான் உன் மேலும் வரும் வேளையை அறியாதிருப்பாய்.” வெளி.3:3 “நீதிமானாகுதல் என்பதில் நீ நிலைத்திரு. அதைப் பற்றிக் கொண்டிரு'' என்று அவர்களுக்கு கூறினார். ”நீ பெற்றுக் கொண்ட தையும், காதால் கேட்டதையும் உன்னிடமிருந்து அவர்கள் அபக ரித்துக்கொள்ள விட்டுவிடாதே'' என்று அவர்களுக்கு கூறுகிறார். அதே வேதாகமத்தைத் தான் அவர்களும் வாசிக்கிறார்கள். பாருங் கள். ஆனால் அவர்களோ அதன் முழுமையையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்படுத்தப் படவில்லை. அது அவர்களுடைய காலத்திற்குரியதல்ல. அக்கார ணத்தினால் தான். அவர்கள் உயிர்தெழுதலில் வருவார்கள். அவர்கள் நடப்பதெற்கென எந்த அளவு ஒளி அவர்களுக்குக் கிடைத்ததோ, அவ்வொளியில் அவர்கள் நடந்து வந்தார்கள். எனவே, அவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்கள். 68அபிஷேகத்தைப் பற்றி பிரசங்கிக்கிற அநேக பெந்தேகொஸ் தேகாரர்கள் ''லூத்தர் காலத்து லூத்தரன்கள் மற்றும் ஏனையோர் எழும்பிவரமாட்டார்கள்'' என்று சொல்வதை நான் கேட்டிருக்கி றேன். ஓ, ஆம். அங்கேயிருக்கிற டாக்டர் ஹேக்கரி அவர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு சிறு சம்பவம் உண்டு. நான் அவரிடம் கூறினேன்... அவர் என்னிடம் கேட்டார். “நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம்'' என்று அவர்கள் மினியாபோலிஸ் என்ற இடத்தில் உள்ள பெத்தனியில் அந்தப் பெரிய லூத்தரன் வேதாகமக் கல்லூரி யைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர் கேட்டார். ''லூத்தரன் களாகிய நாங்கள் என்னத்தைப் பெற்றிருக்கிறோம்?'' என்று. “நான் உங்களுக்கு கூறுவேன், நீங்கள் கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று நான் பதிலளித்தேன். அவர் கூறினார்: “நல்லது, நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறோம். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?'' என்று கேட்டார். “அதை மறைமுகமாக (Potentially) பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அதைப்பற்றி விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றேன் நான். 'நீங்கள் சொல்வதின் பொருள் என்ன? என்று கேட்டார். 69அவர்களுக்கு உள்ள வேதாகமக் கல்லூரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உண்டு. அங்கே கல்வி பயிலும் மாணவர்களால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட இயலவில்லை யெனில், அம்மாணவர்கள் அவ்விளை நிலங்களில், தானியம் விளைவித்தும், அதன்மூலம் தங்கள் கட்டணத்தை ஈடுகட்டிவிட அனுமதிக்கப்படுவார்கள். அங்குள்ள அந்தப்பெரிய வேதக் கல்லூரியில் எனக்கு ஸ்மார்கேஸ்போர்ட் விருந்து கொடுத்தார்கள். (ஸ்மார்கேஸ்பார்ட் என்பது பஃபே முறையில் (In Buffet Style) பசியைத் தூண்டுகிறவைகளும், மிக ருசியான சீஸ், மீன் இறைச்சி, சேலட் ஆகியவைகள் பரிமாறப்படும் ஒரு வகை உயர்ந்த விருந்து - மொழிபெயர்ப்பாளர்) என் அருகில் இந்தப் பக்கத்தில் டாக்டர் ஹேக்கரி அவர்களும், அந்தப் பக்கத்தில் ஜேக் மூர் அவர்களும் அமர்ந்திருந்தனர். ஜேக் மூர் என்பவருக்கு அருகில் நான் உட்கார்ந் திருந்ததன் காரணம், டாக்டர் ஹேக்கரி அவர்கள் பெரிய பண்டி தரானபடியால், அவர் பேசும்பொழுது உபயோகிக்கும் பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று நான் அறியாத படியினால், என் அருகில் அமர்ந்திருந்த ஜாக் மூரின் காலை என் காலினால் அழுத்தி அவர் சொல்லுகிறது என்னவென்றுகேட்டு அறிந்து கொள்ளத்தான், பாருங்கள். அவர் என் அருகில் அமர்ந்திருந்தார். “நாங்கள் தேவனுக் கென்று பசியுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே அது சம்மந்தமாக நாங்கள் கண்டுபிடிக்க ஏதாவது செய்தாக வேண்டும்'' என்றார். 'நாங்கள் 'வரங்கள்' என்ற தலைப்பில் பெந்தெகொஸ்தேகாரர் எழுதின ஒரு புத்தகத்தை படித்தோம் நானும் எங்களில் சில சகோதரர்களும் இது சம்மந்தமாக இப்புத்தகத்தை எழுதின அந்த மனிதரை சந்திக்க கலிஃபோர்னியாவுக்குச் சென்றிருந்தோம். (நான் அம்மனிதரை அறிவேன்). 'நாங்கள் அவ்வரங்கள் எங்கள் மத்தியில் கிரியை செய்வதைக் காண விரும்புகிறோம்' என்று அவரிடம் கேட்டதற்கு 'அம்மாதிரி வரங்களைப் பெற்றவர்கள் யாரும் என் வசம் இல்லை. நான் அப்படிப்பட்டவர்களைப் பற்றி புத்தகம் மட்டுமே எழுதியுள்ளேன்' என்று விடையளித்தார். இதை நாங்கள் கண்ட பிறகு, நாங்கள் அதைப் பற்றி பசியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுக்கு தேவன் தேவை'' என்றார் அவர். 70நான் அவரிடம், “ஒரு சமயம் ஒரு மனிதன் தன்னுடைய சொந்த வயலுக்கு சென்று, அதை பண்படுத்தி சீர் செய்து, அதில் தானியத்தை நட்டான். ஒவ்வொரு நாள் காலையிலும், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து, தானியம் விளைந்துவிட்டதா என்று கவனித்துக் கொண்டே வந்தான். ஒரு நாள் காலையில், முதலா வதாக அப்பயிரில் இரண்டு சிறு துளிர்களை முளைத்தெழும்பி தலை நிமிர்த்தி நின்றன. (மக்காச் சோளத்தை பயிர் செய்தவர்கள் இங்கு யாராவது உண்டா... எங்கே ஜார்ஜ் ரைட் மற்றும் ராய் ஸ்லாட்டர் ஆகியோர்? விதை முளைத்ததும் வரும் இரு துளிர்களை நீங்கள் அறிவீர்கள்) அத்துளிர்களைப் பார்த்த நிலச் சொந்தக்காரன் 'என்னுடைய தானியம் விளைந்திருக்கும் வயலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக' என்று கூறினான்'' என்று சொல்லிக் கொண்டு வந்தேன். நான் பண்டிதர் ஹேக்கரி அவர்களிடம், மேற்கண்ட உவமை யைக் கூறிவிட்டு, “இந்த மனிதனுக்கு வயலில் தானியம் விளைச்சல் ஆகிட்டதா என்ன?'' என்று கேட்டான். அவர் ''ஒரு வகையில் அது வந்து விட்டதைப் போலத்தான்'' என்றார். 71'அது மறைமுகமாக இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் தானிய விளைச்சல் என்ற நிலைக்கு இன்னமும் வந்து விடவில்லை'' என்று நான் கூறினேன். ''அதே விதமாகத்தான் லூத்தரன்களாகிய நீங்களும், முதலாவதாக ஏற்பட்ட சீர்த்திருத்தத்தின் காலத்தில், இரு சிறு துளிர்களை விட்டீர்கள். படிப்படியாக அந்த தானியமானது வளர்ந்து கொண்டே வந்தது'' என்று கூறினேன். அதனால் நான் அவரிடம், பயிரின் வளரும் கட்டத்தில் ஏற்படும் ஒரு நிலையான, அந்த துளிர்கள் வளர்ந்து பிறகு அவைகள் பழுத்து அதிலுள்ள ஜீவன் போய் காய்ந்துவிடும் கட்டத்தைப் பற்றிக் கூறவில்லை. தானியம் வளர்ந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு, மேற் கொண்டு அவரே அதிலுள்ள உட்கருத்தைப் புரிந்து கொள்ளட்டும் என்று அதைப் பற்றி பேசாமல் விட்டுவிட்டேன். நான் மேலும் கூறினேன், “தானியமானது மேலும் வளர்ந்து, சிறிது காலம் கழித்து பட்டுக் குஞ்சம் என்ற கட்டத்தை அடைந்தது. அப்பொழுது அந்த தானியச் செடியின் மேல்பகுதியில் வந்திருக் கும் மகரந்தப் பொடியையுடைய பட்டுக் குஞ்சம் பகுதி, கீழ் நோக்கி அந்த இலையைப் பார்த்து, 'ஹஹ்ஹஹ்ஹா, உங்களிடம் ஒன்றுமில்லை. நீங்கள் பழைய சடங்காச்சார லூத்தரன்கள்' என்று பரிகசித்ததாம். மேலும் அந்தப் பட்டுக்குஞ்சம், 'நான் தான் இனப் பெருக்கம் செய்பவன், மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலம் என்னுடையது தான்' என்றது. காற்று வீசிய பொழுது மகரந்தப் பொடியையுடைய அந்த பட்டுக் குஞ்சப்பகுதி, வீழ்ந்து தன்னிடத் திலுள்ள மகரந்தப்பொடியை சிதறச் செய்தது. அது தான் வெஸ்லியின் 'பரிசுத்தமாகுதல்' என்ற செய்தி பாருங்கள்? எல்லாக் காலத்தையும் விட அக்காலம்தான் மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாகும். அதுதான் வெஸ்லியின் சபையின் காலமாகும். அந்த வெஸ்லியின் காலமானது, இந்தக் காலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. வெஸ்லி சபைக்காலமானது, ஒரு மிஷனரியுமாக இருந்தது. அது என்ன செய்தது? அது சுவிசேஷத்தை எங்கும் பரவச் செய்தது'' என்றேன். 72பாருங்கள், இயற்கை கூட இந்த ஆவிக்குரிய மூன்று கட்டங் களைப் பற்றி சாட்சி கொடுப்பவைகளாக இருக்கிறதை இயற்கை கூட அதைச் சாட்சியிடுகிறது. தேவன் ஆதியில் அது அந்த விதமாகவே இருக்கும்படியாக உண்டாக்கினார். வேதாகமம் கூட உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் இயற்கையை உற்று நோக்கியே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு விடலாம். சிறிது காலம் கழித்து, மகரந்தப்பொடியையுடைய பட்டுக் குஞ்சப் பகுதி, தன்னிலுள்ள பொடியை கொட்டித் தீர்ந்தபிறகு, அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? அதிலிருந்து தானியத்தின் கதிர் புறப்பட்டு வந்தது. அதற்குள் தான் தானியமானது இருக்கும். அக்கதிர்ப்பகுதிதான் பெந்தெகொஸ்தேயாகும். பெந்தெகொஸ்தே குழுவினரும், மற்றவர்களை போலவே இருந்தார்கள். முதலில் இரு முளைகள் முளைத்தெழும்பி வந்தன. அதுதான் லூத்தரின் காலம்; அதற்கடுத்து மகரந்தப்பொடியையுடைய பட்டுக் குஞ்சம் பகுதி யாகும். அது வெஸ்லியின் காலமாகும். அதற்கடுத்து, தானியத்தை யுடைய கதிர்ப்பகுதி. ஆதியில் இருந்தது போலவே இங்கும் வந்து விட்டது. அதே தானியம்தான்! 73பெந்தெகொஸ்தேயினர் என்ன கூறினார்கள்- தனக்குச் கீழே இருக்கிற மெதோடிஸ்டுகளும், லூத்தரன்களும் உபயோகமில்லா தவைகள் என்று கூறினார்கள். ஆனால் இந்த தானியக் கதிர் உண்டாகக் காரணமாக, முதலில் இரு முளைகள் எழும்பி அதிலிருந்து ஜீவன் தான், தனக்கு மேலே அடுத்து வரும் பட்டுக் குஞ்சப்பகுதி உருவாகக் காரணமாயிருந்து. பட்டுக்குஞ்சப் பகுதியில் இருக்கும் ஜீவன்தான், அதற்கடுத்து வரும் கதிர்ப்பகுதி உருவாகக் காரணமாக அமைந்தது. எனவே பாருங்கள், இவை யாவும் தேவனுடைய திட்டமாக இருக்கிறது. லூத்தரன்கள் பரிசுத்த ஆவி பெறுவதற்காக அம்சங்களையெல்லாம் பெற்றிருந் தார்கள்; அவர்களைப்போலவே, பரிசுத்தமாகுதல் செய்தியின் கீழ் வெஸ்லி சபைக்காரர்களும் இருந்தார்கள். ஆனால் இன்று அந்நிய பாஷைகளில் பேசுதலும், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலுமான காரியம் நிகழ்ந்திருக்கிறது. அதே பரிசுத்த ஆவியானவர், உண்மையானது திரும்ப வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள் ஆமென். ஆம். ''நீ கேட்டவைகள் விட்டுவிடாதபடிக்கு, அவைகளைப் பற்றிக்கொள்.'' இப்பொழுது நான்காம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர் சர்தையிலும் உனக்குண்டு. அவர்கள் பார்த்திரவான் களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.” வெளி.3:4 74'நீங்கள் ஸ்தாபனத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் நல்லது. ''சர்தையில் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர்கள் உள்ளனர்.'' சர்தையில் இன்னும் ஒரு சிறு கூட்டமான மக்கள் அத்தீட்டான காரியத்திற்கு தலைவணங்காமல், தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருக்கும்படி காத்துக் கொண்டிக் கிறார்கள். ஆவியால் நிரப்பட்ட ஆதிப் பெந்தெ கொஸ்தே அனுபவத்தின் அடிச்சுவடுகள் இங்கும் தென்படுகிறது. லூத்தரின் காலத்தில் அவர்களில் அநேகர் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் என்ன செய்தனர்? வேதம் கூறுவதுபோல் 'அவர்கள் தங்கள் அம்மாவைப் போல் நடந்துகொண்டு.'' அதே போல் திரும்பவும் செய்ய ஆரம்பித் தார்கள். ஆனாலும் அவர்களில் வெகு சிலர் அச்செயல் களுக்கு உடன்படாமல் தனியே ஒதுங்கி, தேவனுக்காக விலகி நின்றார்கள். தேவன் அவர்களைப்பற்றி “நல்லது, உங்களில் சிலபேர், எனக்கு முன்பாக நடக்க பாத்திரராய் இருக்கிறீர்கள். அவர்கள் வெண் வஸ்திரந்தரித்து நடப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரின் போதகத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மீண்டும் உங்களுடைய ஸ்தாபனத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டாம். தேவனில் சுயாதீனராக தங்கியிருங்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுகையில் பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்து வராக. இன்னும் சிலர் மீதியாக இருக்கிறார்கள்.'' என்கிறார். 755ம் வசனம்: “காதுள்ளவன் எவனோ அவன்.... இப்பொழுது நாம் இதைப் பார்ப்போம்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.” வெளி.3:5 ''சிலர் பேர்'' வெகு சிலர், மிகச் சிறிய மீதியானவர்கள் அக்காலத்தில் மீதியாக இருந்தார்கள். அவர்கள் கத்தோலிக்க சமய போதகத்தால் மேற்கொள்ளப்பட முடியவில்லை. நாம் இப்பொழுது சீர்திருத்தத்தைப்பற்றி பேச வந்தோம். லூத்தரைப் பற்றி வரலாற்றை நான் விட்டு, இந்த விஷயத்தை பார்ப்பதற்காக எடுத்துக் கொண்டேன். அடுத்த வசனம் கூறுகிறது. “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ள வன் கேட்கக்கடவன்” வெளி:3:6 அவர்கள் நிக்கொலாய் மதத்தினரின் போதகத்தை விட்டு விலகியிருக்கும்படி தேவன் எச்சரிக்கை செய்கிறார். அதிலிருந்து அகன்று இருங்கள். உங்களுடைய வஸ்திரங்களை உலகத்தின் காரியங்களினால் அசுசிப்படாமல் வைத்துக் கொள்ளுங்கள்.'' அவரில் சுயாதீனமுடையவர்களாக இருங்கள். அப்பொழுது அவர்களை வழி நடத்தி வழிகாட்டி அழைத்துச் செல்லுவார். அதுவே முதல் துவக்கமாயிருக்கிறது. 76நான் “சீர்த்திருத்தம்'' என்னும் போது 'தப்பித்துக் கொண்ட வர்களைக் '' குறிப்பிடுகிறேன். சர்தை சபையின் காலத்தில் தப்பித்துக்கொண்டவர்கள். நான் கூறுவதன் கருத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அந்தப் பயங்கரமான காரியத்திலிருந்து கூட சிலர் தப்பியிருந்திருக்கின்றனர். நாளை இரவு மீண்டும் இதை எடுத்துக்கொண்டு அதை படிப்படியாக பெந்தெகொஸ்தே காலத்திற்குள் வரைக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, அது அவ்வாறு இருப்பதைப் பற்றி பார்ப்போம். தப்பித்துக்கொண்ட சில காரியங் களைப் பற்றி நாம் இங்கே பேசினோம். அடுத்த காலத்திற்குள் மீண்டும் இதை எடுத்துப் பார்ப்போம். நாம் இதை மீண்டும் எடுத்துப் பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்து வரும் காலத்தின் காரியமும் இதோடு ஒன்றித்துப் போவதைக் காண்பதற்காகத்தான். அவ்வாறு செய்யாவிடில் அதை தீர்க்கமாக ஆழ மனதில் பதியத்தக்கதாக எடுத்துரைப்பதிலிருந்து தவறிவிடுவோம். இதை அடுத்த காலத்திற்குள் சரியாக இருப்ப தைக் காண வேண்டியது அவசியம். வேதம் எவ்வாறு அதைப்பற்றி உரைக்கிறதோ, அதேவிதமாக மக்கள் அதைப் பெற்றுக் கொள்ள செய்யவேண்டும். 77தப்பித்துக்கொண்டவர்களைப் பற்றித் தான் அவர் பேசுகிறார். இந்த சபைக் காலத்தில் வாழ்ந்து வந்த அந்த சிறு மந்தையான ஜனங்கள் நீதிமானாகுதலினால் ஜீவித்தார்கள். இப்பொழுது பாருங்கள்! அவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பிழையை விட்டு வெளியேறினர். லூத்தர் அவர்களை சரியான பாதையில் திருப்பினார். லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவரைப் பின்பற்றின ஒரு சாரார் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். லூத்தர் அதைச் செய்யவேயில்லை. அவர் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. வெஸ்லி ஒருபோதும் ஒரு ஸ்தாபன சபையை உண்டாக்கிக் கொள்ளவேயில்லை. அதற்குப் பிறகு வந்த, அவர்களுக்குப் பிறகு ஏற்பட்ட அந்த குழுவினர் தான் அதைச் செய்தார்கள். பெந்தெ கொஸ்தே அசைவைக் கொண்டு வந்தவர்களும் ஸ்தாபனத்தை உண்டாக்கவேயில்லை. பிறகு ஏற்பட்ட அந்தக் குழுவினர்தான் அதைச் செய்தார்கள். இரண்டாம் சுற்றில் வரக் கூடியவர்கள் தான் அதைச் செய்கின்றனர். பாருங்கள். வெளிச்சத்தின் உண்மையான தூதன் ஒருபோதும் ஸ்தாபன சபையை உருவாக்குவதேயில்லை. அதே காரியத்தை நீங்கள் பெந்தெகொஸ்தேயின் காலத்திலும் அந்த ஸ்தாபனத்தின் முடிவில் என்ன நேரிடுகிறது என்பதையும் காணலாம். பாருங்கள். அதைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தித் தருகிறார். 78தேவன் கூறினார்: “உங்களுக்கு ஒரு சிறிதளவு ஒளியே மீந்திருக்கிறது. மிகச்சிறிய அளவில் அது உள்ளது. அதுவும் அணைந்து போகப்போகிறது. அது மங்கிக்கொண்டே வருகிறது. நீதிமானாகுதல் என்ற செய்தி மட்டுமே உங்களிடம் உள்ளது. அது உங்களை எந்த பக்கத்திலும் திருப்பிவிட முடியும். நீங்கள் இன்னும் ஜீவனைப் பெறவில்லை ஏனெனில் நீங்கள் தவறான நாமத்தை எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் பிழையிலிருந்து பறித்து வெளியே இழுத்துக் கொண்டுவரப் பட்டீர்கள் என்பதைக் குறித்து திருப்தியடைந்துள்ளீர்கள். பாருங்கள் நீங்கள் ரோமன் சபையிட மிருந்து தப்பிவிட்டீர்கள். நீங்கள் கோட்பாடுகளைவிட்டு உங்களைத் தப்பித்துக் கொண்டீர்கள். இந்த அளவாவது வந்திருக்கிறீர்களே'' என்றெல்லாம் கூறினார். அவர்கள் வாசித்த அதே வேதாகமத்தைத் தான் நீங்களும் வாசித்து வருகிறீர்கள். அதே வேதாகமத்தான் பரிசுத்த ஆவியைப் பற்றிப் போதிக்கிறது. ஆனால் அவர்கள் எதைப் பெற்றிருந்தார்களோ அதை நான் வருகிற வரையிலும் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து பற்றிக் கொண்டே யிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறினார். அவர்கள் பெற்றிருப் பது சிறிதளவாக இருந்தாலும், அதற்காக அவர்களை அவர் கண்டனம் பண்ணவில்லை. 79ரோமனிய அகில உலக சபை தன் முழு வீச்சில் இருந்த போது, இச்சபைக்காலம் கி.பி.1520-ல் துவங்கியது. கி.பி. 1570-ல் மார்ட்டின் லூத்தர் அவர்கள் தன்னுடைய 95 கொள்கை முழுக்கங் களை ஜெர்மனி தேசத்திலுள்ள விட்டன்பர்க் என்ற ஊரில் ஆலயக் கதவில் ஆணியறைந்து, அதை பிரசித்தம் செய்தார். அது வரை யிலும் ரோமனிய சபை முழுவீச்சில் இயங்கி வந்தது. அதற்குப் பிறகுதான் அது மட்டுப்பட்டது. அதிலிருந்து சீர்திருத்த காலம் ஆரம்பமாகிறது. நீங்கள் அந்த தேதிகளை குறித்துக் கொண்டீர்களா? நீங்கள் உறுதியாக தெரிந்து கொள்வதற்காக நான் அவைகளை மறுபடியும் சொல்லுகிறேன். கி.பி.1570- அக்டோபர் மாதம் 31ம் தேதி ஜெர்மானியிலுள்ள விட்டன் பெர்க் ஆலயக் கதவில் மார்டின் லூத்தர் தன்னுடைய 95 கொள்கைப் பிரபந்தங்களை ஆணியறைந்து வைத்தார். சீர்த்திருத்தகாலம் துவங்கின நாள் முதல், அக்கினி யானது பற்றியெறிந்தது. அவர் அங்கே நின்று கத்தோலிக்க சபையை ஆட்சேபித்தார். “இதுவா கிறிஸ்துவின் பரிசுத்த சரீரம்? இது வெறும் அப்பமும் சிறிது திராட்சைரசமுமே” என்று சொல்லி அதைக் கீழே வீசியெறிந்து விட்டார். அது உண்மை . 80அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்தார். அப்பொழுது அதிலிருந்த மக்கள் வெளியே தப்பித்து வேளியேறுவது நடந்தது. சரி, பாருங்கள். அது நடந்து கொண்டேயிருந்தது. ஆனால் அக்காரியம், உண்மையான சபைக்காகவும், கிறிஸ்தவ நெறிமுறை களுக்காகவும் என்ற போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அது அரசியல் அதிகாரச் சண்டையாக அதிக அளவில் இருந்தது. ஒரு சபையிலிருந்து வெளி வரவும், வெளியே வந்து இன்னொரு சபையை உருவாக்கிக் கொள்ளவுமாக அதற்குத் தேவையான உரிமைக்காக போராடும் ஒரு அரசியல் ரீதியிலான போராட்டமாக அது உருவெடுத்தது. அவர்கள் கத்தோலிக்க சபையைவிட்டு வெளி யேறி, சபையில் பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் திரும்பக் கொண்டு வருதலான சீர்த்திருத்தத்தை செய்வதற்குப் பதிலாக அதை மறுதலித்தார்கள். பாருங்கள், அது ஒரு அரசியல் ரீதியிலான அணிவகுப்பாக மாறியது. ''நீ உயிருள்ளவன் என்ற பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்ற அந்த கண்டனத்திற்கு அது பொருத்தமாக அமைந்துவிட்டது. அதையே இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், ஒரு பிராடெஸ்டெண்ட் ஸ்தாபன சபையைத்தான் அவர் வெளியே கொண்டு வந்தார். அவ்வளவுதான். சபையிலிருந்து அவளுடைய மகளைத்தான் அவர் வெளியே கொண்டு வந்தார். சரியாக அது தான் சம்பவித்தது. யேசபேலிடமிருந்து ஒரு அத்தாலியாளை வெளியே கொண்டு வந்தார். 81சீர்த்திருத்தத்தைப் பற்றிய வரலாற்றைப் படித்திருக் கிறவர்கள் எவரும் அது அவ்வாறு தான் நடந்தது என்பதை அறிவர். கத்தோலிக்க சபையில் காணப்பட்ட பழைய நினைவுச் சின்னங்களை வணங்குதல். சடங்காச்சாரங்கள், சில ஒழுங்குகள் ஆகியவைகளை அவர் ஒழித்துக்கட்டினார். ஆனால் ஆதியில் இருந்தது போல் சபையில் திரும்பவும் பரிசுத்த ஆவியைக் கொண்டுவருகிற காரியத்தை அவர் செய்யவேயில்லை. அப்படிச் செய்யவில்லை. ஐயா, அது ஆவிக்குரிய போராட்டமாக இருப்பதைக் காட்டிலும், அரசியல் ரீதியிலான போராட்டமாகவே ஆகியது. அது பரிசுத்த ஆவிக்குப் பதிலாக அரசியலாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் இன்னும் சபைக்குள் திரும்ப பிரவேசிக்க வில்லை. ஒ, சகோதரனே, அந்த சபைக்காலத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர் இந்த (கடைசி கால) சபைக்குள் தான் திரும்பி வருகிறார். அங்கேயல்ல. 82பரிசுத்த ஆவிக்காகவும், பரிசுத்த வேதவாக்கியங்களுக் காகவும் உள்ள அணிவகுத்து ஒன்று சேருதலாக அவர்கள் இருக்கா மல், அது பெரிய அரசியல் ரீதியிலான அணிசேருதலாக ஆகி விட்டது. பழைய நினைவுச் சின்னங்களாகிய சிலுவை போன்ற வற்றை வணங்குதல், “மரியே வாழ்க'' என்பன போன்ற காரியங் களிலிருந்து விடுவித்துக்கொள்ள அவர்கள் அரசியல் ரீதியில் மட்டும் ஒன்று திரண்டிட லூத்தர் செய்தார். அப்படியிருந்தும் கூட, லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து 'ஞான உபதேசத்தை கொண்டு வந்துவிட்டார். (Catechism - இன்னும் அவர் வேறு சிலவற்றையும் தன்னுடன் கொண்டு வந்தார். அதாவது ஈஸ்டர் காலையில் உள்ள அர்ப்பணிப்பு செய்யும் ஆராதனைகள், கிறிஸ்துமஸ் காலையில் பாஸ்டர் சபையாரைப் பார்த்து, ''மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் என்று வாழ்த்துதல் கூறுவது போன்ற காரியங்களையும் தன்னுடன் கொண்டு வந்துவிட்டார். அவர்களை ''கிறிஸ்துமஸ் காலம்வரை யிலும் உங்களை பார்க்கமாட்டோம்'' என்று அவரே கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் அடுத்து, திடப்படுத்துதல் (உறுதி பலிபூசை) ஆராதனையை அவர் கொண்டு வந்தார். அதைபற்றி நான் கூறுவது என்னவெனில்: ஜனங்களை எடுத்து அவர்களுக்கு முதல் நற்கருணையை கொடுத்து அவர்களை 'திடப்படுத்தல்' (உறுதிப் படுத்துகிறார்கள்) செய்கிறார்கள். திடப்படுத்தல் (உறுதிப்படுத்து தல் ஆராதனை) என்றொரு காரியம் கிடையாது. வேதத்தில் கூறப்பட்டுள்ள 'உறுதிப்படுத்துதல்' எல்லாம், தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் தொடரச் செய்து தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதே. அதுவே உறுதிப்படுத்துதல், லூத்தரன் சபையை சேர்ந்து கொள்ளும் உறுதிப்படுத்துதல் அல்ல அது. உங்களில் தேவன் தன்னுடைய வார்த்தையை உறுதிப்படுத்துல் தான் காரியம். ”கர்த்தர் அவர் களோடிருந்து கிரியை நடப்பித்து, அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார்'' என்று மாற்கு 16-ல் கூறப்பட்டுள்ளது. அதுவே உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற சபைக்குக் கொடுக்கப்படும் உறுதிப் படுத்துதல் ஆகும். அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் செய்தல், ஆதியில் அவர்கள் செய்தது போலவே கிரியை நடப்பித்தல் ஆகியவைகளின் மூலம் சபையில் தேவன், தன்னை அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று காண்பித்து, தம்மைத் தாமே ஜீவனுள்ளவராக உறுதிப்படுத்துகிறார். 83நான் உங்களை களைப்படையச் செய்து கொண்டிருக் கிறேனோ? (சபையார் இல்லை'' என்று பதிலளிக்கிறார்கள்? ஆசி). நல்லது. அவர்கள் பரிசுத்த ஆவியின் எழுப்புதலை சபைக்குள் திரும்பக் கொண்டு வரவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு புதிய சபைக்காலத்தைத் தான் திரும்பக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ரோமச் சபைக் குருக்களாட்சியிலிருந்து தப்பித்து வெளியே வந்தது, ஒரு ப்ராடெஸ்டெண்ட் குருக்காளாட்சி முறையைக் கொண்டு வரத்தான் என்பதாக, அவர்கள் அதிலிருந்து வெளியேறிய பிறகு செய்தவைகள் காண்பித்தன. அதே காரியத் தைத்தான் அவர்கள் செய்தார்கள். அவர்கள் சட்டியிலிருந்து நேரே கீழே உள்ள நெருப்பில் குதித்துவிட்டார்கள். சரியாக அதே காரியம் தான் நடந்தது. யேசபேல் இப்பொழுது ஒரு மகளைப் பெற்றெடுத்து விட்டாள். நான் புத்திசாலியாக என்னைக் காட்டி கொள்ள இதை சொல்லுகிறேன் என்று எண்ணிக் கொள்ளாதிருங்கள். வேதம் அவ்வாறு கூறுகிறபடியினால், நான் அதைக் கூறுகிறேன். வேதம், வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில், 'அவள் வேசிகளின் தாய்'' என்று கூறியது. இயேசு இங்கே கூறுகிறார்: “யேசபேல் செய்ததைப் போலவே இவளும் செய்வாள்'' என்று. அவள் குமாரத்திகளை ஈன்றெடுத்து, தீட்டுப்படாத தேசம் ஏதாவது இருந்தால், அதையெல்லாம் தீட்டுப்படுத்திப்போட்டாள். ப்ராடெஸ்டெண்ட் கொள்கையானது, உண்மையான தேவனு டைய ஆவிக்கு எதிராக அந்த தீட்டுப்படுத்தும் காரியத்தையே செய்து, மீண்டும் இன்னொரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டது. தேவனுக்கு சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில், அவர்கள் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டதன் மூலம் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள் என் பதையும், அம்மிருகம் ரோமாபுரி தான் என்பதையும் நான் உங் களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவ்விதத்தில் அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள். 'அச்சொரூபமானது என்ன வாயிருக்கிறது? அது ஒரு ஸ்தாபனமே! இவ்விஷயம் உங்களு டைய இருதயத்தில் ஆழமாகப் பதிகிறது என்று நான் நம்புகிறேன். 84நான் என் ஜீவிய காலமெல்லாம் ஸ்தாபன முறைமைகளுக் கெதிராக ஏன் கடினமாக போராடுகிறேன் என்றெண்ணி நீங்கள் வியந்து கொண்டிருப்பீர்கள். எனக்கே அது ஏன் என்று தெரியா திருந்தது. ஆனால் என்னிலிருந்து ஏதோ ஒன்று அதற்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டே வந்தது. அதை என்னால் தவிர்க்க முடிய வில்லை. நான் ஏன் பெண்களின் பிழையான காரியத்தைப் பற்றி கண்டனம் செய்கிறேன் என்று வியந்ததுண்டு. என் ஜீவிய கால மெல்லாம் அவ்வாறே இருந்து வந்துள்ளது. நான் உண்மையான ஸ்திரீகளைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஒழுக்க நெறிகளைவிட்டு வழுவிபோய்விட்ட அந்த விதமான ஸ்திரீகளுக்கெதிராகத் தான் நான் கூறிவருகிறேன். என்னிலிருந்து ஏதோ ஒன்று... நான் ஒரு சிறுவனாக இருந்தபொழுது, தங்கள் கணவன் மார்கள் வேலைக்குப் போயிருக்கும் சமயத்தில், குடித்து வெறித்து வேற்றுப் புருஷனோடு சரசமாடி சாலையில் அங்குமிங்கும் அலைந்து திரிவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களை மதுவின் வெறியி லிருந்து தெளியவைத்து, அவர்களது கணவரின் இரவு உணவை சமைப்பதற்கென வீடுகளுக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். ஒரு சுத்தமான துப்பாக்கி ரவை கூட அவர்களை துளைத்துச் செல்வ தற்கு அவர்கள் லாயக்கில்லை. அது உண்மை . அவ்வாறான காரியத் தைச் செய்வதால் அவர்கள் ஒரு மிருகத்தை விடக் கேவலமான வர்கள் என்று நான் சொல்லுவதுண்டு. நான் 17 அல்லது 18 வயதாயிருந்தபோது, ஒரு பெண் வீதி வழியாக வருவதைக் கண்டால், அவள் வரும் பாதையை விட்டு விலகி எதிர்த் திசையில் போய் அதன் நிலையை எண்ணி, “நாற்றமெடுத்த விரியன் பாம்பு'' என்று கூறுவதுண்டு, பாருங்கள்? தேவனை என் இருதயத்தில் நான் ஏற்றுக் கொண்டபோது, அப்பொழுது தான், தேவனுக்கென விலையேறப்பெற்ற ஆபரணங்களாக உள்ள உத்தம ஸ்திரீகள் தேவனுக்கு உண்டு என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். அப்படியில்லா திருந்தால், நான் முழு ஸ்திரீ இனத்தையே முற்றிலும் வெறுக்கிற வனாக ஆகியிருப்பேன். உத்தமமான ஸ்திரீகள் தேவனுக்கென்று இருக்கிறார்கள். அவர்கள் அவ்விதமான முறையில் தங்கள் அசுசிப் படுத்திக் கொள்ளமாட்டார்கள். அதற்காக தேவனுக்கு நன்றி. 85நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, நான் ஸ்விட்சர் லாந்தில் இருந்தபொழுது, நான் ரோமாபுரியில் இருந்தபொழுது, 'அமெரிக்காவில் உங்களுக்கு பண்பட்ட ஸ்திரீகளே கிடையாதா, சொல்லுங்கள் சகோதரன் பிரன்ஹாம் அவர்களே அங்கிருந்து வரும் ஒவ்வொரு பாடலும், உங்கள் பெண்களைப்பற்றி கீழ்த்தர மாக வருணிக்கும் பாடலாக இருக்கின்றனவே?'' என்னும் கேள்வி என்னிடத்தில் கேட்கப்பட்டது. ''அவர்கள் அமெரிக்கர்கள், ஆனால் எங்களுக்கு வேறொரு இராஜ்யம் இருக்கிறது. அதுதான் தேவனுடைய இராஜ்யமாகும். அதில் உள்ள பெண்மணிகள் மிகவும் பண்புள்ளவர்கள்'' என்று கூறினேன். 86வேதத்தில் தீர்க்கதரிசி இவ்வாறு கூறினான். அது ஏசாயா 5அல்லது 6ம் அதிகாரம் என்று எண்ணுகிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. இவைகளுக்குக்கெல்லாம் தப்பி மீந்திருக்கிற சீயோன் குமாரத்தி ஆசீர்வதிக்கப்பட்டவளாகக் கூறப்பட்டிருக் கிறாள். அந்நாட்களில் கூட ஸ்திரீகள் அகந்தையா யிருந்து, கழுத்தை நெறித்து, ஒய்யாரமாய் நடந்தார்கள். இக்காலத்திலும் கூட, பெண்கள் அதேவிதமாக நடந்து கொள்கிறார்கள். ஆண்களைப்போல் உடையுடுத்திக் கொள்ளுகிறார்கள். அது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது. 87சமீபத்தில் நான் ஒரு ஸ்தாபன சபையைச் சேர்ந்த ஒரு சங்கத்தினர் ஒவ்வொரு இரவிலும் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரிய விருந்துக்கு ஜனங்கள் செல்வதைக் கண்டேன். அவர்கள் ஒரு விதமான சல்லடங்களை அணிந்திருந்தனர். அது ஒரு ஆண் உடையாகும். நிக்கர்பாக்கர்ஸ் என்னப்படும் சல்லடம் தானே அது? அப்படித்தானே அதை அழைக்கிறார்கள்? நிக்கர்பாக்கர்ஸ் என்றால், தொளதொளவென்று முழங்காலுக்கு மேல் வரை இருக்கும் ஒரு வித ஆண் ஆடையாகும் - இது அமெரிக்காவில் உபயோகிக்கப்படுகிற ஒரு ஆடை - மொழிபெயர்ப்பாளர்) குட்டையான நிக்கர் அல்ல அவைகள், மற்றது. ஆம் அவர்கள் பெடல் புஷர்ஸ் என்று அழைக்கின்ற ஒரு வகை ஆடைதான் அது. (பெடல் புஷர்ஸ் என்றால் (Pedalpushers) முழங்கால் முட்டுக்கு சற்றுக் கீழே உள்ள கெண்டைச்சதை வரை மட்டும் நீண்டிருக்கும் ஆண் ஆடை - மொழிபெயர்ப்பாளர்) அவைகளை அணிந்து கொண்டு அப்பெண்கள் விருந்துக்குப் போனார்கள். அவர்கள் இவ்வாறு ஒய்யாரமாக நடந்து தங்கள் அலங்காரத்தைக் காட்டிக்கொள்ள இப்படியாக அவர்களுக்கு ஒரு பெடல் தேவைப்படுகிறது. (அதாவது தங்கள் அவலட்சணங்களை நாகரீகம் என்று காட்டிக் கொண்டு இவ்வாறு நடந்து செல்வதற்காகாவே அவர்கள் அப்படி ஆடைகளைத் தரிக்கிறார்கள் என்பதைத்தான் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டுகிறார் - மொழிபெயர்ப்பாளர்). 88'பெண்கள் அணியும் பாவாடைகளை விட இவ்விதமான நிக்கர்கள் தான் சற்று நாணயமுள்ளதாக இருக்கிறது'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். “இவ்விதமான ஆண் ஆடையைப் பெண் தரிப்பது தனது பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது'' என்று தேவன் கூறினார். தேவனானவர், பெண்கள் பெண்களைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்றும், பெண்கள் பெண்களைப்போலவே உடுத்த வேண்டும் என்றும், பெண் ஒரு பெண்ணாகவே நடந்து கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறார். அப்படியிருக்கையில் பெண்ணா னவள் ஆணைப்போல் தன் தலை முடியை வெட்டிக் கொண்டு, சிகை அலங்காரம் செய்து கொள்வதும் தேவனுக்கு அருவருப்பாய் இருக்கிறது. ஒரு ஆணானவன் நீளமான கிருதா வைத்துக் கொள்வதையும், அது அவன் தலைக்குப் பின்னால் ஒரு வாத்து உட்கார்ந்திருப்ப தைப் போல் காட்சியளிக்கும், தலை மயிரை வளர்ப்பதையும் அவர் விரும்புவதில்லை. அவன் ஆணைப்போல் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆம் ஐயா, என்னே, ஆணா, அல்லது பெண்ணா என்பதைக் கண்டுகொள்ள முடியாதபடி, அவர்கள் பெண்ணைப்போல் உடுத்திக் கொள்கிறார்கள். இன்றைக்கு நம்மிடையே உள்ள பீட்னிக்குகளின் காரியமும் பரிதாபத்திற் குரியதாக உள்ளது. நாம் கடைசி காலத்தில் ஜீவிக்கிறோம் என்பது ஆச்சரியமல்ல; உலகத்தின் மேல் தேவன் தன்னுடைய உக்கிர கோபத்தை ஊற்றி, அவர்களை சுட்டெரிப்பதைத் தவிர வேறு எதுவும் இனிமேல் நடக்கப்போவதில்லை. அது தான் ஆயத்தமாக இருக்கிறது. நீதியும் பரிசுத்தமுள்ள ஒரு தேவனால் இதைத் தவிர வேறெதுவும் உலகுக்குச் செய்வதற்கில்லை. 89இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அவர்கள் நிந்தித்து தள்ளிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கென சமயச்சாரக் கோட் பாடுகளை உண்டாக்கிக்கொண்டு ஒரு ஸ்தாபனத்திற்குள் பிரவே சித்துவிட்டார்கள். திருமணமகாத, காலர்பட்டையை திருப்பி உடுத்திக் கொண்டிருக்கும் அந்த வயதான ஹோலி ஃபாதர் (பரிசுத்த தந்தை) பீடத்தண்டையில் வந்து, 'ஆசீர்வதிக்கப்பட்ட என் பிள்ளைகளே'' என்று கூறுகிறார். ஒரு பெண் பன்றி கூறுவதற் கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நமக்கு இன்றைக்கு தேவைப்படுவதெல்லாம், வேதத்திற்கு திரும்பிச் செல்லுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலுமே. கிறிஸ்துவின் வல்லமையானது சபைக்குள் திரும்பி வந்து, அற்புத அடையாளங்களை சபைக்குள் நிகழ்த்துவதுமே, சகோதரனே, ஆமென் அதுதான் சுவிசேஷமா யிருக்கிறது ஆம். 90இந்தக் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலானது சில அருமை யான காரியத்தைச் செய்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அவ்வெழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. இக்காலம் முதற் கொண்டு, லவோதிக்கேயாவின் காலம் துவங்கும் முன்னர் வரை யிலும் ஏற்பட்ட எழுப்புதல் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரவில்லை. ஆனால் இவ்வெழுப்புதல் ஒருவகையில் நன்மையுள்ள தாக இருந்தது. எனவேதான் தேவனும், அதை சாகவிட்டுவிடா தீர்கள். அதை ஸ்திரப்படுத்துங்கள் அதோடு இன்னும் நலமான தைக் கூட்டிக் கொண்டேயிருங்கள்'' என்று கூறினார். பாருங்கள்? அவ்வெழுப்புதல் மக்களின் பட்சமாக, யாவரும் வாசிப்ப தற்கென சுயாதீனமாக வேதப்புத்தகம் கிடைக்கச் செய்தது. லூத்தரின் காலம், வேதாகமம் யாவருக்கும் தடையில்லாமல் சுதந்திரமாகக் கிடைக்க செய்தது. அவர்கள் ஒரு அச்சகத்தை ஏற்படுத்தி, வேதாகமத்தை தாராளமாக அச்சிட்டு உலகுக்குக் கிடைக்கச் செய்தனர். லூத்தரன்களை தேவன் அதற்காக ஆசீர் வதிப்பராக. ஆம் ஐயா! அவர்கள் சபையாரின் கைகளில் வேதப் புத்தகம் திரும்பக் கிடைக்கச் செய்தனர். அதற்கு முன்னால், குருக்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ள முடியும். அதற்கு முன்னால், மக்கள் வேதத்தைப் பார்க்கக் கூட இயலாது ஏனெனில் போப் அவ்வாறு கூறியிருந்தார். போப் அவர்களுக்கு ஒரு தேவனைப் போல் இருந்தார். அவர் சொல்வதே தேவ வாக்காக இருந்தபடியால் அவர் சொன்னபடியெல்லாம் அவர்கள் செய்தனர். 91லூத்தரன்களுக்கு ஏற்பட்ட எழுப்புதலினால், அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர்கள் “ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இப்பொழுது உங்கள் கரங்களில் வேதாகமம் உள்ளது. அதை வாசியுங்கள். அதை வெறுமனே அலமாரியில் வைத்து ''நல்லது, எங்களுக்கு ஒரு வேதாகமம் இருக்கிறது'' என்று பெருமையாகக் கூறிக்கொள்வதோடு விட்டு விடாதீர்கள். அதை வாசிக்காமல் அப்படியே வைத்திருப்பதினால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இன்றைக்கு பெந்தெ கொஸ்தேயில், மிக அதிகமான லூத்தரன்கள் இருக்கிறார்கள். அதாவது இவர்கள் வேதத்தை படிக்காமல் மூடிப்போட்டு, அதைப் பற்றி வேறு யாராவது ஏதாவது சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். சகோதரனே, வேதத்தை வாசி. 'வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே'' என்று இயேசு கூறினார். வேதத்தை வாசியுங்கள். அதைத் தான் செய்ய வேண்டும். 92“அதை விட்டு விடாதீர்கள், பற்றிக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார் அவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்யும்படி தேவன் விரும்பினார். அதாவது அவர்களுக்கு இருந்த கொஞ்சம் பெலனில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவன் விரும் பினார். லூத்தரன் எழுப்புதலானது, இரண்டாவதாக செய்த காரியம் என்னவெனில்; வேதத்திலுள்ள ''விசுவாசத்தினால் நீதிமானாகு தல்'' என்ற உபதேசத்தை ஒளியூட்டி வெளிக் கொணர்ந்தது. கத் தோலிக்க சபை விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற உபதே சத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கத்தோலிக்க சபை தான் எல்லாம் என்று அவர்கள் கூறினார்கள். சமீபத்தில் ஒரு மதக்குரு, 'கத்தோலிக்க சபையில் தவிர வேறு எதிலும் இரட்சிப்பு இல்லை“ என்று ஒலிபரப்பில் கூறினார். அவர்கள் அந்த ஒலிபரப்பை உடனடியாக நிறுத்திவிட்டார்கள். இரட்சிப்பு கிறிஸ்துவில்தான் உள்ளது. கத்தோலிக்க சபையில் இல்லை. ப்ராடெஸ்டெண்ட் சபையிலும் இரட்சிப்பு இல்லை. கிறிஸ்துவில் தான். இரட்சிப்பு உள்ளது. ஆனால் கத்தோலிக்கர் களுக்கு வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அக்கறையில்லை. அவர்களது சபை என்ன சொல்லுகிறதோ அதையே அவர்கள் விசுவாசிக்கின்றனர். பாருங்கள்? நீங்கள் அவர்களோடு பேச முடியாது. ஏனெனில் அவர்களிடம் பேச வழியில்லை. ஒருவரும் அவர்களிடம் பேசக் கூடாதபடி அவர்கள் உள்ளனர். அவர்கள் அசட்டையாக இருக்கிறார்கள். அவர்களுடைய 'ஞான உபதேச'த்திலிருந்து வேண்டுமானால் உங்களோடு அவர்கள் பேசுவார்கள். ஆனால் வேதப்புத்தகம் என்று வந்துவிட்டால், அவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு பேசாதபடி, அதை தள்ளிவிடுகின்றனர். ''சபை என்ன சொல்லுகிறதோ, அதுதான் '' என்கின்றனர். அது தேவ தூஷணமாக இருக்கிறது! 93இவ்விஷயத்தைப் பொறுத்தமட்டில், இயேசு தாமே கூறினார்: “இதிலிருந்து எதையாகிலும் ஒருவன் எடுத்துப் போட்டாலோ, அல்லது இதோடு எதையாகிலும் கூட்டினாலோ, அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்தலிருந்து எடுத்துப்போடப் படும்'' ”தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்'' என்று இயேசு கூறியுள்ளார். 'வானமும் பூமியும் ஒழிந்துபோம், என்னுடைய வார்த்தையோ ஒழிந்துபோவதில்லை.'' ஓ, அதுதான் உண்மையானது, சகோதரனே. தேவனுடைய வார்த்தையின் பேரில் விசுவாசி நான்! அங்கே தேவன் பேசுகிற அந்த வார்த்தை மட்டுமல்ல, கிறிஸ்து என்னில் ஜீவிப்பதற்காக, அவ்வார்த்தையை உறுதிப்படுத்த என்னில் பரிசுத்த ஆவியை இப்பொழுது பரம பிதாவை ஊற்றுமாறு வேண்டுகிறேன். அதினால் நான் நித்திய ஜீவனைப் பெற்றிருக் கிறேன் என்பதை அறிவேன். நான் பாத்திரமானவன் என்பதினால் அதைப் பெறவில்லை. அவரது கிருபையினால் அதை பெற்றேன். அதுவே கன்மலையாயிருக்கிறது. ''இந்தக் கன்மலையின் மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்று அவர் கூறினார். 94இச்சபைக்காலத்தில் இவர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற நிலையை எய்தினார்கள். இந்நிலை ஒழிந்து போகாமல் பேணிக் காத்துக் கொள்ள வேண்டியது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அடுத்ததாக, அவர்கள் மீண்டும் வேதப்புத்தகம் தங்கள் கைகளில் கிடைக்கப் பெற்றிருந்தனர். லூத்தரன்கள் அக்காரியத் தைச் செய்தனர். ஏற்கனவே அவர்களுக்கு 'விசுவாசத்தினால் நீதி மானாகுதல்'' என்று உபதேசமும் கிடைத்திருந்தது. அதை லூத்தர் போதித்தார். அது தான் லூத்தரின் போதகம் என்ற யாரும் அறிவர். அதற்குப் பிறகு, வெஸ்லியின் போதகம் பரிசுத்தமாகுதல் என்ப தாக இருந்தது. அதையடுத்து, பெந்தெகொஸ்தே அனுபவமாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தது. இது எவ்வளவு அருமை யாக பூரணமானதாக இருக்கிறதென்பதை உங்களால் காண முடிய வில்லையா? அது பூரணமானதாகத்தான் இருக்கிறது. “நீ கொஞ்சம் நல்ல காரியங்களைப் பெற்றிருக்கிறாய் அவை களை நீ சாகவிடாமல் ஸ்திரப்படுத்து, நீ அதைப் பற்றிக் கொள்ளா விடில், நான் திருடனைப்போல் சீக்கிரமாய் வருவேன். நீ மீண்டும் ஸ்தாபனத்திற்குள் போய்விடுவாய்'' என்று இந்த சபைக் காலத் தின் சபைக்கு சொல்லுகிறார். சரியாக அதேவிதமாகத்தான் அவர்கள் செய்தார்கள். ”நீங்கள் மீண்டும் நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்திற்குள் போய்விடப் போகிறீர்கள்; ஏனெனில் நீங்கள் மீண்டும் ஒரு ஸ்தாபனமாக ஆகப்போகிறீர்கள். எனவே உங்களுக் குள்ளதை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். வேதத்தை வாசிப் பதை காத்துக் கொள்ளுங்கள். நீதிமான்கள் ஆக்கப்பட்டதையும் காத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்'' என்று இச்சபைக்காலத்திற்கு தேவன் கூறினார். இந்த சபைக் காலத்திலும் தேவனுக்கென்று மீதியானவர்கள் வெளியே வந்தனர். அவர்கள் ஒரு சிறு கூட்டமான மீதியானவர்கள். 95முதலில் வந்த லூத்தருக்குப் பிறகு ஸ்விங்லியும் அடுத்து கால்வினும், தொடர்ந்து வெஸ்லியும் வந்தனர். பரிசுத்தமாகுதல் என்ற வெஸ்லி கொண்டு வந்த செய்தியில் நிலைத்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான மீதியானவர்கள், தங்களுக்குள்ளதை காத்துக் கொண்டே வந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் சென்று பிழைத்துக் கொண்டனர். 96ஆனால் இச்சபைக்காலத்தில் மூன்றாவதாக ஒரு காரியம் நடைபெற்றது. அதென்னவெனில், அவர்கள் கத்தோலிக்க சபையைவிட்டு வெளியேறியபொழுது, அநேகம் அஞ்ஞான சடங்காச்சார உபதேசங்களை, அதாவது தெளித்தல், பிழையான ஞானஸ்நானமாகிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், கத்தோலிக்க ஞான உபதேசம் (Catechism) மற்றும் இன்ன பிறவற்றை தங்களோடு கொண்டு வந்தனர். அவர்களது இந்நிலை, ஆண்டவர் அவர்களுக்கு இட்ட பெயருக்கேற்றவாறு அப்படியே அமைந்து விட்டது. “நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந் தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்று கூறினார். அது சரியாக இருக்கிறது. நான்காவது, இக்காலத்தில் ஏற்பட்ட சீர்த்திருத்தமானது, கத்தோலிக்க மதத்தின் புனிதச் சின்னங்கள் என்னப்பட்டவைகளை வணங்குதல் போன்ற சடங்குகளெல்லாம் ஒழிந்து போகக் காரண மாகியது. ஆனால் ஏற்பட்ட எழுப்புதலானது. சபையில் அடை யாளங்களோடு கூடிய பூரண சுவிசேஷ போதகமானது திரும்ப கிடைக்கச் செய்ய தவறிவிட்டது. லூத்தரன் சபையில் இது ஏற்பட வில்லை. அவர்கள் ஒரு போதும் அதைப் பெற்றிருக்கவில்லை. வெஸ்லியின் காலத்திலும் அவர்கள் அதை திரும்பப் பெறவில்லை. லவோதிக்கேயாவின். காலத்தின் முடிவில்தான் அவர்கள் அதை பெற்றார்கள். 97நாம் இதைப்பற்றி ஆராய்கையில், மீண்டும் வேதவாக்கியங் களுக்குச் சென்று, எவ்வாறு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந் தது என்பதையும், அவர்களுக்கு ஏற்பட்ட எழுப்புதல் பரிசுத்த ஆவியின் எழுப்புதலைத் திரும்பக் கொண்டுவரவில்லை என்பதை யும். நான் உங்களுக்கு எடுத்து காண்பிக்க முடியும். அவர்கள் விக்கிரங்களிலிருந்து விலகினர். அவர்கள் விக்கிரங்களை விட்டு விட்டது உண்மைதான். அவர்கள் மரியாள், யோசேப்பு, பேதுரு, பவுல் ஆகியோரின் சிலைகளையெல்லாம் சபையைவிட்டு அகற்றிவிட்டனர். அவர்கள் விக்கிரங்களை விட்டு விட்டுத் திரும்பினர் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அவர்கள் உயிர்த் தெழுந்த கிறிஸ்துவிடம் திரும்பவில்லை. லூத்தர் அவர்களை விக்கிரகங்களை விட்டு திரும்பப் பண்ணினார். ஆனால் அதிலிருந்து திரும்பிய அவர்கள் ஒரு அரசியலைப் போல், தாங்கள் விட்டு வந்த ஸ்தாபனத்தைப் போலவே இன்னொரு ஸ்தாபனமாக ஆகி, தாங்கள் விட்டு வந்த ஸ்தாபனத்தை மிஞ்சிவிட வேண்டும் என்று கருதி, ஸ்தாபன எண்ணத்தோடு செயல்பட்டார்கள். அது முந்தினதைப் போலவே இன்னொரு சொரூபமாகத்தான் தான் ஆகியது. அவர்கள் இன்னும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மெதோடிஸ்ட்டுகள் இன்னமும், பாப்டிஸ்ட்டுகள் அனை வரும் மொதோடிஸ்ட்டுகள் ஆகிவிட வேண்டும் என்று விரும்பு கிறார்கள் அனைத்து லூத்தரன்களும், ஏனைய பாப்டிஸ்ட்டுகள், மற்றும் மெதோடிஸ்ட்டுகள் ஆகியோர் லூத்தரன்கள் ஆகிவிட வேண்டு மென்று விரும்புகிறார்கள். பெந்தெகொஸ்தேயினர், அனைத்து பாப்டிஸ்ட்டுகளும், லூத்தரன்களும் பெந்தெகொஸ்தே யினராக ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே இவ்வாறாக இவர்களெல்லாம் தங்கள் ஜீவனற்ற ஸ்தாபனங் களுக்கு கூட்டம் பெருகவேண்டு மென்று விரும்பி, கிரியை செய்கிறார்கள். ஆனால் பிரதானமான காரியம் என்னவெனில், தேவனுடைய திட்டம் அது அல்லவே அல்ல. ஆதியில் இருந்தது போலவே யாவற்றையும் சபைக்கு திரும்ப அளிப்பது ஒன்றுதான் தேவனுடைய திட்டமாகும். 98கவனியுங்கள்! அதை மீண்டும் சபைக்கு அளிப்பதுதான் திட்டம்! இப்புத்தகம் தரையில் விழுந்து விடுமெனில், அது இருந்த இடத்தில் வேறொரு புத்தகத்தை எடுத்து வைப்பது என்பது புத்தகத்தை திரும்ப அளித்தல், அல்லது புத்துயிரூட்டி அதை திரும்ப தழைக்க வைத்தல் என்ற காரியமாகாது. கீழே விழுந்த அதே புத்தகத்தைத்தான் மீண்டும் அது இருந்த இடத்திற்கு கொண்டு வரவேண்டும். அவர் அதே காரியத்தைத்தான் திரும்பக் கொண்டு வரவேண்டும். ஆமென். ஆகவே சபையானது இருண்ட காலத்திற்குள் மரித்துவிட்ட நிலையில், அது அஞ்ஞானத்தன்மை கொண்டதாக மாறிவிட்ட பிறகு, அதிலிருந்து முழுமையாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருதல் தேவையாக இருக் கிறது. ஆனால் இது ஒரு சீர்திருத்தம் மட்டுமே சீர்திருத்தல், மறு படியும் பிறத்தல் இவையிரண்டும் இரு வெவ்வேறு காரியங் களாகும். பாருங்கள்? அவர்கள் கத்தோலிக்க சமயத்தின் விக்கிர கங்கள் மற்றும் இன்னபிற காரியங்களிலிருந்து மீண்டும் வந்து சீர்திருத்தத்தைப் பெற்றனர். ஆனால் அவர்கள் ஒரு போதும் சபைக்கு மீண்டும் பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை. ஓ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சகோதரனே, சகோதரியே, இதை உங்களால் காண முடிகிறதா? அவர்கள் ஒருபோதும் சபைக்கு பரிசுத்த ஆவியைத் திரும்பக் கொண்டு வரவில்லை. ஏனெனில், உண்மையான சுவிசேஷ ஒளியை இங்கே யுள்ள இந்த சபைக்காலத்தின் தூதன் கொண்டு வருகிறான். இப்பொழுது நீங்கள் எல்லாவற்றிற் கும் உள்ள உச்சியான நிலையை அமைத்துக் கொள்ளலாம். (இந்த கடைசி கால தூதன் வருவதைக் குறித்து கூறும்பொழுது, தீர்க்கதரிசி “Put on Your cap” என்று கூறுகிறார். அதாவது எல்லா வற்றிற்கும் சிகரம் போன்ற பகுதியைக் காணுங்கள். அல்லது உச்ச கட்டமான பூரணப்பகுதி என்பதை சுட்டிக் காட்டுகிறார் - மொழி பெயர்ப்பாளர்) அதைக் குறித்து நீங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று காணப்போகிறீர்கள். 99அக்காலத்தில் அவர்களுக்கு, மிக உயர்ந்த ஒளி, கிறிஸ்தவ ஒளி உண்டாயிருக்கும். அப்படியிருந்தும் கூட அவர்களில் அநேகர் அந்த ஸ்தாபன அமைப்புக்குள் போய்விடுவார்கள். ஆனால் அவர் களுக்கெதிராக நிற்கக்கூடிய ஒருவன் தோன்றுவான் (ஆம் ஐயா) நான் இந்தப் பிரசங்க பீடத்தில் இப்பொழுது நின்று கொண்டிருப் பது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ, அதே அளவு உண்மை யாக, அவன் ஸ்தாபனங் களிலிருந்து கர்த்தருக்கென மீதியாயிருக் கிற ஒரு கூட்டத்தை பிரித்தெடுப்பான். அவன் ஆதியில் இருந்த நிலைக்கு திரும்பக்கொண்டு போவான். லவோதிக்கேயாவின் தூதன் அதைச் செய்வான் என்பதையும், அவன் மூல உபதேசத்திற்கு திருப்பி, ஆதியில் நடந்தவாறு மீண்டும் ஏற்படச் செய்வான் என்பதையும் நான் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டி லிருந்தும், எடுத்து உங்களுக்கு நிரூபிக்கப் போகிறேன்.. அது உண்மை. அந்த சபையின் காலத்தில் மரித்துப்போனதுபோல் இருந்த மூல உபதேசம். பரிசுத்த ஆவியின் கிரியைகள், மரித்தோரி லிருந்து எழுந்ததுபோல் மீண்டும் நடக்கும். 100சர்தை என்றால் “தப்பித்துக் கொண்டவன்'' என்ற அர்த்தத் திற்கேற்ப, லூத்தர் சபையை அஞ்ஞான மார்க்கத்தைவிட்டு வெளியே இழுத்தார். அவர் 'விசுவாசத்தினால் நீதிமானாகுதல்'' என்ற செய்தியோடு அஞ்ஞான மார்க்கத்தைவிட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தார். அது நல்லதுதான். அடுத்த காலத் திற்குள் இரண்டு அடிகள் எடுத்து வைக்கப்பட்டது. வேதத்தில், ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து தண்ணீரா னது புறப்பட்டுச் சென்றதைப் பற்றி பார்க்கிறோம். முதலாவது தண்ணீர் முழங்காலளவு இருந்ததாகவும், அடுத்து இடுப்பு வரையிலும் இருந்ததாகவும், கடைசியாக தலைக்கு மேலே தண்ணீர் சென்ற தாகவும் தீர்க்கதரிசி கூறுகிறான். தலைக்கு மேலே தண்ணீர் சென்ற கட்டம் வந்தபோது, அவன் நீந்தவேண்டியதாயிற்று. பாருங்கள், அவன் நீந்த வேண்டியதாயிற்று. நாம் இப்பொழுது இன்று நீந்திக் கரை சேரவேண்டும். அல்லாவிடில் மூழ்கி அமிழ்ந்து விடவேண்டியதாகிவிடும். அவ்வளவுதான். ஒன்று அது உங்களை மூழ்கடித்து முழுவதும் போக்கடித்துவிடும், இல்லையேல், உங்களை அது கரைசேர்க்கும். எனவே அது நீந்திக்கரைசேர் அல்லது மூழ்கிவிடு என்று இருக் கிறது. அல்லேலூயா! ஓ, பரிசுத்த ஆவியைப்பற்றி நான் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். நீங்கள் அவ்வாறு இல்லையா? நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட மிகவும் மகிழ்கிறேன் நானும் அவர்களில் ஒருவன் (யார் இந்த அவர்கள்? இன்னார், இன்னார், இன்னார் என்று அல்ல) நானும் அவர்களில் ஒருவன் என்பதால் ஆனந்தமே அல்லேலூயா; அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் நானும் ஒருவன் என்பதால் ஆனந்தமே. 101அது அருமையாக இல்லையா? கவனியுங்கள்; அவர்கள் மேல் வீட்டறையில் கூடினர், அவர் நாமத்தில் கூடி ஜெபித்தனர், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றனர் ஆராதனைக்காக வல்லமை அவர் மேல் வந்தது, அவர்களுக்கு அந்நாளில் என்ன செய்தாரோ அதையே உனக்கும் இன்று செய்திடுவார் நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே, அல்லேலூயா! அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்கள் வேதக்கல்லூரிகளுக்குச் சென்றார்களா? இல்லை. அவர்களில் சிலருக்கு, தங்களுடைய சொந்தப் பெயரைக் கூட எழுத இயலாத அளவுக்கு இருந்தார்கள். அது உண்மை. பேதுருவும் அப்படித்தான். அவனும் யோவானும் படிப்பறியாதவர் களும், பேதமையுள்ளவர்களுமாய் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அவர்கள் இயேசுவோடு கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டதால், அவர்கள் கூறுவதை யாவரும் செவிமடுத்தாக வேண்டியதாயிருந்தது. அவர்கள் கல்லாதவர்கள் ஆயினும் உலகில் கீர்த்தி பெற்றவர் எனும் பெருமையுமில்லை (''ஓ தேவனுக்கு துதி, நான் இன்னின்ன பட்டங்களைப் பெற்றுள்ளேன் என்ற பெருமை) அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றனர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அவரது வல்லமை மாறாதது என்று எங்கணும் பிரசித்தம் செய்கின்றனர் நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே 102நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? அவர்களில் ஒருவராக இருப்பதைப் பற்றி நீங்கள் மகிழுங்கள். நான் அறிந்திருக்கிற வேறு ஏதாவது ஒன்றில் ஒருவனாக இருப்பதைவிட அவர்களில் ஒருவனாக இருப்பதையே நான் நாடு வேன். அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் குடியரசுத்தலைவராக விரும்புவதை விட, இவ்வுலகின் மேல் ஒரு அரசனாக இருக்க விரும்புவதைவிட, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதையே நாடுவேன். கர்த்தரா கிய இயேசு இங்கே நடந்து வந்து “நான் உன்னை இருபது வயதுள்ள வனாக மாற்றி, உன்னை ஒரு ஓவர்சீயராக (கண்காணிப்பாளராக) வோ, அல்லது உலகின் மேல் ஒரு அரசனாகவோ ஆக்கி, உனக்கு இப்புவியில் பத்தாயிரம் ஆண்டுகள் ஆயுட் காலத்தை நீட்டித்து, அக்காலம் முழுவதும் உனக்கு இருபது வயதே இருக்கும்படி செய்து, ஒரு நாள் கூட பிணியால் வாடாமல், நெஞ்சு வலியில்லா மலும் வேறெந்த பிணியும் இல்லாமலும் செய்து, ஆயுட்காலம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கத்தக்கதாக செய்து விடட்டுமா, அல்லது அவர்களில் ஒருவனாகவே நீ இருந்து கொண்டு, அதினால் இப்பொழுது நீ போராடிக்கொண்டிருப்பது போலவே கால மெல்லாம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிற அவ்விதமான வாழ்க்கையை தெரிந்து கொள்கிறாயா? என்று என்னிடம் கேட்டால். 103நான் கூறிவேன், 'அவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்று கூறிட நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்'' என்று பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு என்ன இருக்கிறது? ஆனால் இதுவோ, நித்திய ஜீவனாக இருக்கிறது. அது எவ்வாறு வருகிறது? அது இரத் தத்தினால் வந்துள்ளது. அது நீண்ட காலமாக வந்து கொண்டிருக் கிறது. தேவன் மாமிசத்தில் தோன்றி நம்மிடையே வாசம் பண்ணியதால் அது சாத்தியமாயிற்று. மனிதனை பாவத்தினின்று இரட்சிக்க ஓர் பாலகன் வெகுகாலம் முன்பு முன்னணையில் பிறந்தார் என்பதை நான் நன்கறிவேன். சதா உயிரோடிருக்கிறவரை யோவான் நதிக்கரையில் கண்டான், ஓ அவரே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து கலிலேயாவின் அம்மனிதனை நான் நேசிக்கிறேன் அவர் எனக்காக அநேகம் செய்திட்டார் என் பாவங்களையெல்லாம் அவர் மன்னித்தார் என்னில் பரிசுத்த ஆவியை ஊற்றிவிட்டார் கலிலேயாவின் அம்மனிதனை நான் நேசிக்கிறேன் கிணற்றண்டையில் நின்ற அப்பெண்ணின் பாவங்கள் யாவையும் கண்டு கூறினார் (அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்) அவளுக்கு ஐந்து கணவர்கள் உண்டென்பதைக் கூறினார் அவளது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டன அவளது இதயத்தில் சமாதானம் குடிகொண்டது அவள் யாவர்க்கும் கூறினாள், ''வந்து பாருங்கள் இக்கலிலேயனை'' என அக்கலிலேயனை நான் நேசிக்கிறேன், அக்கலிலேயனை ஏனெனில் அவர் எனக்கு அநேகம் செய்திட்டார், என் பாவங்கள் யாவையும் மன்னித்து, பரிசுத்த ஆவியை எனக்கீந்தார், ஓ, நான் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் அக்கலிலேயனை ஆயக்காரன் ஒருவன் ஆயலத்தினுள் சென்று ஜெபித்தான் “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்'' என்று கதறினான் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மிகுந்த சமாதானம் அவனில் குடி கொண்டது அவன் கூறினான், “கலிலேயனாகிய இம்மனிதனை வந்து பாரீர்'' என நான் அதை விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா? முடவர் நடந்தனர், ஊமையர் பேசினர் கடலின் மேல் அவ்வன்பின் வல்லமை பேசப்பட்டது. குருடர் கண்டனர், அக்கலிலேயனின் இரக்கம் தான் இதைச் செய்தது என்பதை நான் அறிவேன் என்னோடு சேர்ந்து இதைப் பாடுங்கள்: கலிலேயனாகிய அம்மனிதனை நான் நேசிக்கிறேன் அவர் எனக்கு மிகுதியாயச் செய்திட்டார். அவர் என் பாவங்களெல்லாம் மன்னித்தார், என்னில் பரிசுத்த ஆவியை ஊற்றினார் நான் கலிலேயனாகிய அம்மனிதனை நேசிக்கிறேன். 104அதை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஓ, என்னே ! இந்த நல்ல, பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தை நான் நேசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அவரை நேசிக்கிறேன். அவர்களில் ஒருவனாக நான் எண்ணப்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். நாம் யாவரும் சகோதர சகோதரிகளாக கூடி வந்திருக்கிறோம். தேவன் பாப்டிஸ்ட், மொதோடிஸ்ட், கத்தோ லிக்கர் ப்ரெஸ்பிடேரியன் மற்றும் வாழ்க்கையின் இன்ன பிற காரியங்களிலிருந்தும் நம்மை வெளியே கொண்டு வந்து, இங்கே இந்த மகத்தான பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள் கூட்டிச் சேர்த் திருக்கிறார். நாம் இங்கே ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை, மற்றவர்கள் விரும்புவதை செய்து கொள்ளட்டும். ஆனால் நாமோ, மனிதரால் அறிந்துகொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியமான இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். புத்திகெட்டாத ஆச்சரியமான அந்த இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். மெதோடிஸ்ட்டுகளோ, அல்லது பாப் டிஸ்ட்டுகளோ, ப்ரெஸ்பிடேரியன்களோ, அல்லது எவராயினும் சரி, அதற்குள் நீங்கள் வரலாம். ''என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள். அவர்களில் ஒருவனையும் நான் இழந்து போவதில்லை. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்'' என்று இயேசு கூறினார். ஓ, என்னே! பீடத்தண்டையில் பின்வரும் பழங்காலத்துப் பாடலை பாடுவதுண்டு: நாம் அதைப் பாட முடியுமோ அல்லது முடியாதோ எனக்குத் தெரியவில்லை. “இடமுண்டு, இடமுண்டு, ஆம் ஊற்றண்டையில் எனக்கு இடமுண்டு, அங்கே இடமுண்டு.'' அவ்விதமான பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? இடமுண்டு, இடமுண்டு, அங்கே இடமுண்டு அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு இடமுண்டு, இடமுண்டு, ஆம் இடமுண்டு அங்கே ஊற்றண்டையில் உனக்கு இடமுண்டு 105அவ்விதமான பழைய பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா? நானும் கூட விரும்புகிறேன். மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன் மீட்பரே வாழ்க அவர் நாமத்திற்கு மகிமை, அவர் நாமத்திற்கு மகிமை (அவருடைய விலையுயர்ந்த நாமம்) (கண்களை மூடியவாறு பாடுவோம்) என் இதயத்தில் இரத்தம் பூசினார் (அவர் நாமத்திற்கே) மகிமை ஆச்சரியம் உள்ளம் மாறிற்று, ஏசுவின் மாளிகை ஆயிற்று; சிலுவையண்டை உண்டாயிற்று அவர் நாமத்திற்கே மகிமை அவர் நாமத்திற்கு மகிமை அவர் நாமத்திற்கு மகிமை (அவரது விலையேறப் பெற்ற நாமம்) அவர் நாமத்திற்கு மகிமை! (விலையுயர்ந்த நாமமது) என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை. பின்வரும் சரணத்தை நாம் பாடுகையில், நீங்கள் உங்களுக்கு முன்னும், பின்னும் பக்கங்களில் உள்ள யாவரோடும் கைகலுக்கி கொண்டே பாடுங்கள். வாரீர் இவ்வினிய உயரிய ஊற்றண்டையில் இரட்சகர் பாதத்தில் படைப்பீர் உம் ஆத்துமாவை அவ்வூற்றில் மூழ்கி இன்றே சுத்தமாவீர் அவர் நாமத்திற்கே மகிமை. மகிமை அவர் நாமத்திற்கே! (அந்த விலையேறப்பெற்ற நாமம்) மகிமை அவரது விலையுயர்ந்த நாமத்திற்கே, என் இதயத்தில் இரத்தம் பூசினார், அவர் நாமத்திற்கே மகிமை நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர் நாமத்திற்கே மகிமை! ( விலையேறப்பெற்ற நாமம்) அவர் நாமத்திற்கே மகிமை! அங்கே என் இதயத்தில் உதிரம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை. ஓ, என்னே ! நான் சந்தோஷமாயிருக்கிறேன். நீங்கள் அவ் வாறில்லையா? மிகவும் உயர்ந்ததும், இனியதுமான அவ்வூற்றண் டையில் வந்து, எனது எளிய ஆத்துமாவை இரட்சகரின் பாதத்தில் சமர்ப்பிக்க எனக்கு இயன்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக் கிறேன். 106நான் பதினெட்டு வயது வாலிபனாக இருக்கையில் கர்த்தரை விட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாளை நான் நினைவு கூறுகிறேன். நான் மேற்கு பகுதிக்கு சென்றேன். என் தந்தை அங்க குதிரைகள் சவாரி செய்து ஜீவனம் நடத்துகிறவராயிருந்தார். நான் அங்கே சென்று குதிரைகளைப் பழக்குவிக்கிற வேலையை செய்ய விரும்பினேன். அப்பொழுது, என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன். ஓ, நான் அதை உங்களுக்கு சொல்லுவேன். நான் பாப்டிஸ்ட் சபை பிரசங்கியாரிடம் சென்ற போது, அவர் என்னிடம், “நீ எழுந்து நின்று, ”இயேசு தேவனுடைய குமாரன்' என்று மட்டும் சொன்னால் போதும், நாங்கள் உன்னு டைய பெயரை சபைப் பதிவேட்டில் பதிந்து விடுவோம்' என்று கூறினார். அதுவும் என்னைத் திருப்தி செய்யவில்லை. நான் சென்ற இடமெல்லாம் ஒவ்வொருவரும்... நான் ஏழு நாள் ஓய்வு சபையைச் சேர்ந்த சகோதரன் பார்கர் (Brother Barker) என்ற அருமையான நேசமுள்ள சகோதரர் ஒருவரிடம் சென்றேன். அவரும் என்னிடம், 'பில்லி, நீ வந்து, கர்த்தருடைய ஓய்வை ஏற்றுக் கொள்'' என்று கூறினார். (நான் ஏற்கெனவே அந்த ஓய்வை என் உள்ளத்தில் பெற்றிருக்கிறேன்). ஆனால் அவர் “ஓய்வுநாளை ஏற்றுக்கொள்'' என்று தான் கூறினார். அப்பொழுது, நான், ”ஓ, இதுவும் நான் தேடுவதைக் கொடுப்பதாக இல்லையே'' என்று எனக்குள் எண்ணினேன். 107நான் மேற்கில் சென்றேன். அன்றொரு இரவில் நாங்கள் மந்தையை மேய்த்து அதை மடக்கினோம். குதிரையை விட்டு சேணத்தை எடுத்துவிட்டு, அங்கிருக்கும் கேம்ப் பையையும் எடுத்து வைத்துவிட்டு, படுத்துறங்கப்போகையில், அச்சேணத் தையே தலைக்கு தலையணையைப் போல் உபயோகிப்பதுண்டு. அவ்வாறு நான் அன்றிரவில் மிக வயதான பைன் மரங்களின் அடியில் படுத்துக்கொண்டிருந்தேன். நான் பகல் நேர கண் காணிப்பு வேலையைச் செய்தேன். ஆகவே இரவு நேர வேலையைச் செய்யும் பையன்கள் மந்தையை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களில் டெக்ஸாஸைச் சேர்ந்த 'ஸ்லிம்'' என்றழைக்கப்படும் ஒரு வயதான மனிதர் தன்னுடைய கிட்டாரை மீட்டு, ''அவர் நாமத்திற்கே மகிமை'' என்று பாடலை இசைத்தார். இன்னொரு நபர் ஒரு சீப்பின் மேல் ஒரு தாளை வைத்து அதை ஊதி இசைத்தார் (சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் ''அவர் நாமத்திற்கே மகிமை'' என்ற பாடலை மௌனமாக இசைக்கிறார்ஆசி) அவர்கள் வேறு பாடல்களையும், கௌபாய் பாடல்களையும் பாடினார்கள். “மீட்பர் மரித்த குருசண்டையில் என்ற பாடலையும் பாடினார்கள்.'' 108நான் புரண்டு படுத்தேன். என் தலையில் மேல் பக்கமாக கம்பளியை எடுத்துப் போட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த் தேன். இரவில் காணப்பட்ட நட்சத்திரங்கள் கீழே இறங்கி வந்து அந்த பைன் மரங்களின் உச்சியில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அங்கிருந்த மலைகள் மேலும் வந்திறங்கி விட்டது போலவும் காணப்பட்டது. பைன் மரங்களில் இருந்து சதாகால மும் மனிதரை நோக்கி அவர்கள் காதுகளில் முணுமுணுக்கும் அந்த வழக்கமான சப்தமாகிய, 'ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்?'' என்று அவர் என்னை நோக்கி கூப்பிட்டது எனக்குக் கேட்க முடிந்தது. மூன்று வாரங்கள் கழித்து, நான் நகரத்திற்குள் சென்றேன். அந்தப் பையன்கள் யாவரும் மது அருந்திருந்தார்கள். நான் மட்டும் குடிக்கவில்லை. நான் எப்படியாவது அவர்களை மோட்டார் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் சேர்ந்ததாக வேண்டும் என்ற நிலை இருந்தது. குடித்திருந்த நிலையில் அவர் களுக்கு பாதுகாப்பின்றி அபாயகரமானதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பாத விரல்களை சுட்டுக் கொண்டார்கள். அவர்கள் அங்கே ஒரு நேர்க்கோடு ஒன்றை போட்டு, அதில் வளையாமல் கோட்டின் மேல் நேராக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு 5 டாலர் என்று பந்தயம் கட்டிக் கொண்டு நடப்பார்கள். அவர்களால் குடித்த நிலையில் பாத சாரி களுக்கென போடப்பட்டிருக்கும் நடைபாதையிலேயே சரியாக நடக்க முடியாது. இவ்வாறு அவர்கள் ஆட்டம் போட்டு, பின்பு, குடிவெறி தெளிந்து தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள். 109அவர்கள் யாவரும் குடித்து வெறித்திருந்தார்கள் நானோ தனியே அப்புறம்போய் உட்கார்ந்தேன். இது 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். நான் தனியே போய் உட்கார்ந்தேன். அந்நாட்களில் பீனிக்ஸ் ஒரு சிறிய ஊர் தான். அவர்கள் விக்கன் பர்கிலிருந்து வந்திருந்தார்கள். நான் அவ்வாறு உட்கார்ந்து கொண் டிருக்கையில், வாலிபமான ஒரு ஸ்பானிய பெண்ணொருத்தி, நலுக்கி குலுக்கி கொண்டு அவ்வழியாக வந்தாள். பெரிய தொப்பி அவள் தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருக்க, அவ்வழி யாகக் கடந்து சென்ற அவள், தனது சிறிய கைக்குட்டை ஒன்றை என்னருகில் நைசாகப் போட்டுவிட்டுச் சென்றாள். நான் அவளை நோக்கி, “ஏய், உனது கைக்குட்டையை கீழே போட்டு விட்டுச் சென்றாயே'' என்றேன். நான் அவள் சமிக்ஞையின் பேரில் ஆர்வம் காட்டவில்லை. (அந்நாட்டில் பெண்ணொருத்தி ஒரு ஆணிடம் சல்லாபம் கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க இவ்வித மான ஒரு சமிக்ஞையை அவ்வாணுக்குத் தெரிவிப்பதுண்டு - மொழி பெயர்ப்பாளர்). கீழ்ப்பகுதியில் உள்ள தெருவில் அப்பொழுது ஒரு சப்தம் கேட்டதும் நான் அங்கே கீழே போனேன். அங்கே முகத்தில் வைசூரி வடுக்கள் கொண்ட வயதான கௌபாய் ஒருவர் உட் கார்ந்து தன்னுடைய கிட்டாரில், தன் கண்களில் கண்ணீர் வடிய இசைத்து, 'அவர் நாமத்திற்கு மகிமை'' என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் அந்த மோசமான கூட்டத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராயிருந்தார். அவரது கன்னத்தில் கண்ணீர் வடிய பாடிக்கொண்டிருந்தார். நான் அவரருகில் சென்றதும் பாடுவதை நிறுத்திவிட்டு, ''சகோ தரனே இந்த அற்புதமான கிறிஸ்துவை நீ பெற்றுக் கொள்கிற வரையிலும், இவ்வனுபவம் எத்தகையது என்பதை நீ அறிய மாட்டாய்'' என்று கூறினார். “அவர் நாமத்திற்கு மகிமை” 110நான் என்னுடைய தொப்பியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் சமுகத்தை விட்டு உங்களால் ஒளித்துக்கொள்ள முடியாது. நீங்கள் மறைந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வந்து, கூப்பிடுகிற அவருக்கு முன்பாக வந்து, உங்கள் பாவங்களை அறிக்கை செய்தாக வேண்டும். ஓ! அவர் அற்புதமானவராக இருக்கிறார். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார். ஆச்சரியம் என் உள்ளம் மாறிற்று ஏசுவின் மாளிகை ஆயிற்று; சிலுவையண்டை உண்டாயிற்று அவர் நாமத்திற்கே மகிமை. மகிமை அவர் நாமத்திற்கே அவர் நாமத்திற்கே மகிமை என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை வாரீர் இவ்வினிய உயரிய ஊற்றண்டை இரட்சகரின் பாதம் படைப்பீர் உம்மாத்துமாவை அவ்வூற்றில் மூழ்கி இன்றே சுத்தமாவீர் அவர் நாமத்திற்கே மகிமை நாம் இப்பொழுது தலைகளை வணங்கி கைகளை உயர்த்துவோம். அவர் நாமத்திற்கே மகிமை (மகிமை, மகிமை) (ஓ, தேவனே விலையேறப்பெற்ற நாமம்!) என் இதயத்தில் இரத்தம் பூசினார் அவர் நாமத்திற்கே மகிமை தேவனுக்கு மகிமை! நாம் எழுந்து நிற்போமாக. சொல்லப் போவதை செவிகொடுத்துக் கேளுங்கள். சற்றுப் பொறுங்கள்... (ஒரு சகோதரி அன்னிய பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார்-ஆசி). இது என்ன என்பதைப் பற்றி அறியாத யாராவது இருப்பீர் களென்றால், அது பெந்தெகொஸ்தேயின் அனுபவம், பரிசுத்த ஆவியினால் பேசுவது என்று அறிந்து கொள்வீர்களாக. இயேசு கூறினார்: ''உலகம் முழுவதும் போய் சுவிஷேத்தை பிரசங்கியுங்கள். இவ்வடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும். அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள். வியாதி யஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' அவர் உரைத்த இக்காரியங்களெல்லாம் சம்பவித்து நிறைவேறியாக வேண்டும். ஓ! நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பரிசுத்த ஆவி யானவர் வந்து அந்த வார்த்தையை உறுதிப்படுத்தியதைப் பார்த் தீர்களா? ஒரு வெளிச்சம் அது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை சந்தேகிக்காதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப்போல் நீங்கள் உங்களை ஆக்கிக்கொண்டால் அப்பொழுது அவர் உங்களோடு இடைப்பட்டு, உங்களை சரியான பாதையில் நடத்துவார். பரிசுத்த ஆவியானவர் இனிமையான வராக உங்களுக்கு இருக்கவில்லையா? பரிசுத்த ஆவியானவர் இனிமை ததும்ப நம்மேல் இருக்கிறார். ஒரு சமயம் கர்த்தருடைய ஜனங்கள், எந்த வழியாக சத்துரு வின் சேனை வருகிறது என்பதை அறியாதிருந்தபொழுது, அவர் களில் ஒருவன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்து எவ்வழி யாக சத்துரு வருவான் என்றும், இவர்கள் எவ்வழியாகப் போய் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைபற்றி சரியாக உரைத்திட்டார். கர்த்தருடைய வார்த்தையின்படியே இவர்கள் சென்றபொழுது, சத்துருவின் சேனையை தேவன் குழம்பிப்போகும் படி செய்து, அவர்கள் அழிந்துபோகப் பண்ணினார். நாம் இன்னும் வேதாகம நாட்களில் ஜீவித்து வருகிறோம்! அப்படியில்லையா? ஆம், எப்பொழுதும் அவ்வாறுதான் பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருக்கிறவரையிலும் வேதாகம நாட்களில் தான் நாம் ஜீவிப்போம். 111நாம் இப்பொழுது நின்றுகொண்டு பாடுவோம்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் (செய்தியை ஞாபகங்கொள்ளுங்கள்) துயரமும் துக்கமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை (ஓ என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், (அந்த விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் . இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னை சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 112இந்த சரணத்தை கவனியுங்கள் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னைச் சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. ஓ, அதை நாம் மீண்டும் பாடுவோம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக சோதனைகள் உன்னைச் சூழும்போது அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. இப்பொழுது நாம் தலைகளை வணங்குவோம் ஓ, விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! (என்ன இனிமை) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.